Tamiloviam
ஜனவரி 03 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : சிரிப்பு மருத்துவத்தில் காமெடி கிங் திரு.வி. லட்சுமணன்
- கிரிஜா மணாளன் [girijamanaalan2006@yahoo.co.in]
| | Printable version | URL |

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்ணுக்கும் நகைச்சுவைக் களஞ்சியமான சென்னை திரு.லட்சுமணன் அவர்களுக்கும் தொடர்பு உண்டு. காமராஜர் ஆட்சியின்போது தஞ்சையில் கண்டிப்புமிக்க ஓர் ரெவென்யு இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி அசத்தியவர் இவர். இப்போது நகைச்சுவை மன்னராக மேடைகளில் கலக்கிக்கொண்டிருக்கிறார்.

கீல்வாத நோயால் முடங்கிப்போய் இவர் படுக்கையில் கிடந்தபோது 'நரம்பு சம்பந்தமான இந்நோய்க்கு, நரம்புகளை உற்சாகப்படுத்த சிரிப்பு ஒன்றுதான் மருந்து!' என்று மருத்துவர் பரிந்துரைத்தார். நோய் இவரை முடக்கினாலும், இவரது தன்னம்பிக்கையும், நகைச்சுவையுணர்வும் முடங்கிப் போய்விடவில்லை. திரு. காத்தாடி ராமமூர்த்தியின் 42 காமெடி நாடகங்களை இவர் தொடர்ந்து பார்த்தபிறகு தனது உடலின் நரம்புகளின் செயல்பாடுகளும் இரத்த ஓட்டமும் இயல்பான நிலைக்குத் திரும்பியதைக் உணர்ந்தார். தாமும் வாழ்க்கையில் சிரித்துக் கொண்டேயிருக்க வேண்டும், மற்றவர்களையும் சிரிக்கவைப்பதன் மூலம் அந்த மருத்துவப் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என்ற குறிக்கோள் இவரது மனதில் வேரூன்றிவிட்டது.

சென்னையிலுள்ள நகைச்சுவை மன்ற (Humor club International, 1975) அமைப்பில் இணைந்து, அதில் மாதந்தோறும் கடைசி ஞாயிறன்று தனது நகைச்சுவை நிகழ்ச்சியை வழங்கி வருகிறார் திரு. லட்சுமணன். சிரிப்பில் பலவிதமான வகைகளை மேடையில் நிகழ்த்தி அனைவரையும் மகிழ்விக்கும் இவரது ஸ்பெஷல் அயிட்டம் 'தொப்பி காமெடி'.

பொதிகை, ஜெயா டி.வி ஆகியவற்றிலும், வானொலியிலும் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ள திரு.லட்சுமணன் அவர்களை ஆனந்தவிகடன், குங்குமம் ஆகிய இதழ்கள் சிறப்புப் பேட்டிகண்டு வெளியிட்டுள்ளன. பெரிய நிருவனங்கள், கல்லூரி விழாக்கள், பொதுமேடைகள், நகைச்சுவை மன்றங்கள் இவற்றிலெல்லாம் தனது நிகழ்ச்சிகளை வழங்கி 'காமெடி மருத்துவப் பணி'யாற்றும் திரு.லட்சுமணன் அவர்களுக்கு வயது 73. முன்னாள் இளைஞர் என்று சொல்லிக்கொள்ளத் தேவையில்லாதவண்ணம் 'இந்நாளிலும் இளைஞர்ராக' காட்சியளிக்கும் இவருக்கும் என்றும் உடனிருப்பது மனவுறுதியும், சமூகநகத் தொண்டுள்ளமும்தான்.

தன்னம்பிக்கையோடு தனது உடலின் ஆரோக்கியத்தைப் பேணிக்கொண்டு, அதே சமயத்தில் தன்போன்ற முதியவர்களும் சிரிப்பினால் ஆரோக்கியம் பெற்று நீடூழி வாழவேண்டும் என்ற 'சிரிப்பு மருத்துவப் பணி'யில் இறங்கியுள்ள திரு.லட்சுமணன் அவர்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.

oooOooo
                         
 
கிரிஜா மணாளன் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |