ஜனவரி 06 2005
தராசு
வ..வ..வம்பு
பங்குச்சந்தை ஒரு பார்வை
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
காந்தீய விழுமியங்கள்
சமையல்
மஜுலா சிங்கப்புரா
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    சமையல் : சோயா - 7
    - ஜெயந்தி நாராயணன்
    | Printable version |

    சோயா சுண்டல்

    தேவையான பொருட்கள்

    சோயா  - 150கிராம்
    வெங்காயம் - 2
    கேரட்    - 1/4கப் துருவியது
    தக்காளி   - 1 பெரியது (பொடியாக அரிந்தது)      
    கொத்துமல்லி - 1/4கப் பொடியாக அரிந்தது
    சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
    கரம் மசாலாபொடி - 1/4 டீஸ்பூன்
    எண்ணை        - 3 டீஸ்பூன்
    கடுகு           - 1/2 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு   - 1 டீஸ்பூன்
    உப்பு            - தேவைகேற்ப

    செய்முறை :

    சோயாவை 6 மணிநேரம் ஊறவைத்து எடுத்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து பிறகு பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்இத்துடன் சம்பார்பொடியை சேர்த்து 3நிமிடம் வதக்கியதும் வெந்த சோயாவை சேர்த்து 2நிமிடம் வதக்கிய பிறகு கரம் மசாலா சேர்த்து 1நிமிடம் கிளறி இறக்கி வைத்து
    தக்காளி, துருவிய கேரட்,கொத்துமல்லி,எலுமிச்சைசாறு சேர்த்து பரிமாற மிகவும் சுவையாக இருக்கும். விரும்பினால் சிறிது தேங்காய் துருவல் சேர்க்கலாம்.



    சோயா வெஜிடபிள் உப்புமா

    தேவையான பொருட்கள்

    சோயா     - 1 கப்
    கடலை பருப்பு - 50 கிராம்
    பயத்தம்பருப்பு  - 100 கிராம்
    தேங்காய் துருவியது - 1 கப்
    ரவை           - 4டேபிள் ஸ்பூன்
    பச்சைமிளகாய்  - 3
    காய்ந்தமிளகாய்   - 2
    உப்பு            - தேவைகேற்ப
    சமையலெண்ணை  - 50 கிராம்
    வெங்காயம்       - 1
    பச்சைபட்டாணி    - 50 கிராம்
    பீன்ஸ்            - 50 கிராம்
    கேரட்            - 1
    தக்காளி          - 1
    நெய்             - 2 டீஸ்பூன்
    கொத்துமல்லி      - 3 டேபிள்ஸ்பூன் பொடியாக அரிந்தது
    அறிவேப்பிலை      - 1 கொத்து

    செய்முறை

    சோயாவை முதல் நாள் இரவு ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும் (குறைந்தது 6மணி நேரம் ஊறவேண்டும்). பருப்புகளை 1மணி நேரம் ஊற வைத்து எடுத்து பிறகு உப்பு,காய்ந்தமிளகாய்,ஊறிய சோயா யாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து எடுத்து இத்துடன் தேன்காய்துருவல் 25 கிராம் எண்ணை சேர்த்து கலந்து குக்கரில் ஒரு அலமான பாத்திரத்தில் சிறிது எண்ணை தடவி அதில் பரப்பி வேகவக்கவும். ஆறியபின் நன்றாக உதிர்த்து வைத்துக்கொள்ளவும். காய்கறிகளை பொடியாக அரிந்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் மீதமுள்ள எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,சேர்த்து பொரிந்ததும் காய்கறிகளையும்,பச்சைமிளகாய் அரிந்ததையும் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் உதிர்த்து வைத்துள்ள சோயா கலவையையும் சேர்த்து நன்கு கிளறி கறிவேப்பிலை, கொத்துமல்லி தூவி இறக்கிவைத்து சாம்பாருடன் சுவைக்கலாம். நல்ல சத்து நிறைந்த இந்த உப்புமா யாவருக்கும் ஏற்றது.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |