ஜனவரி 12 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : விரல்களில்லாத சிற்பி
- சுரேஷ், சென்னை [sureshnaraynan@yahoo.com]
| Printable version | URL |

கேரளாவில், பாலக்காடு மாவாட்டத்தின் அதிசயங்களிலொன்று, கொடிந்திரப்பள்ளி என்ற கிராமத்தில் வாழும் விரள்களில்லாத ஒரு சிற்பியின் கைகளில் பூக்கும் அழகான மரச்சிலைகள்.

Balanஇந்த சிற்பியின் பெயர். திரு. கெ.வி. பாலன். தனது அறுபத்தி இரண்டு வயதிலும் அழகிய மரச்சிலைகளை செய்தும் பனிரண்டிற்கு மேல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தும் மகிழ்கிறார் இவர். இந்த நற்பணியால் இவரது கடந்த கால சோகங்கள் மறந்து வாழகிறார்.

பாலக்காட்டில் SNUP என்ற பள்ளியில் நான்காம் வகுப்பு  படிக்கின்ற வேளையில் அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் தனக்கு தொழுநோய் இருப்பத்தாக அறிந்ததும் கதறினார் திரு பாலன் அவர்கள். ஆசிரியர்களும், தலமைஆசிரியரும்  எவ்வளுவு உப்தேசம் செய்தும்,  துக்கத்தால் தனது படிப்பை நிறுத்த இவரெடுத்த தீருமானத்தை மாற்றவே இல்லை.  வீடும் ஊரும் விட்டு பல காலம் கோயம்பத்தூரிலும் பாங்களூரிலும் இரும்புப் பணி செய்து வந்தார். இந்த நீண்ட காலத்தில் திரு.பாலன் அனுபவித்த கஷ்ட்டங்களையும் அவமானங்களையும் வார்த்தைகளால் சொல்ல முடியாதவைகள்.

1979 - ஆம் வருடம் திரு.O.M.C நம்பூதிரி என்ற ஓர் அறிஞர்,  திரு.பாலன் அவர்களை கேரளாவிற்கு அழைத்து, பத்ரகாளி, கண்டத்தார் இந்த இருவரின் சிலைகளை மரத்தில் செய்ய உத்தரவிட்டார்.

தனது தகப்பனார் சாதாராண மரவேலை செய்வதை பார்த்த ஞாபகம் மட்டும் தானுள்ளது, வேறு எந்த அனுபவமும் தனக்கில்லை என்பதை நினைத்தும, தன்னுடைய விரல்களின் குறைவு பற்றியும் நினைத்து  கலங்கிய திரு. பாலன்அவர்கள் பயந்து நின்றார்.  " உன்னால் முடியும் உனக்குள் இருக்கும் சிற்பியை நான் காண்கிறேன்" என்று ஊக்கம் கொடுத்தார், திரு நம்பூதிரி அவர்கள்.

விரல்கள் இல்லாத இவர் தனது மிச்சமிருக்கும் கைகளின் பாகத்தால் ஐந்த அடி உயர பெரிய இரு மரத்துண்டுகளில் ஒளிந்திருந்த அழகிய இரு சிலைகளை தனது கலைக் கண்களால் கண்டார். பல மாதங்கள் இரவு பகலாக தனது கடின உழைப்பால் முதல் இரண்டு சிலைகளை செய்து முடித்தார். ஆனால் பத்ரகாளி சிலையின் ஸ்தனங்கள் இரண்டும எவ்வளவு முயற்சி செய்தும் ஒரே வடிவத்தில் வரவில்லை என்ற தனது  கவலையை திரு நம்பூதிரி அவர்களிடம் மிகவும் தாழ்மையாக சொன்னார்.

விஷயம் கேட்ட பண்டிதர் திரு நம்பூதிரி அவர்கள் " நீ தான் சிற்பி, பெண்களின் ஸ்தனங்கள் எப்பொழுதும் ஒரே வடிவமாக இருக்காது. நீ வெற்றியடைந்தாய்" என்று கை நிறைய பணவும் மனம் நிறைய பாராட்டும் அன்பளிப்பாக கொடுத்தது வாழ்த்தினார்.

அங்கிருந்து வெற்றிமேல் வெற்றி.. பல நூறு சிலைகள் இந்தியாவின் பல கோவில்க்ளுக்கு செய்து கொடுத்தார். பல விதமான கலைவடிவங்கள் பொருத்தின அழகிய ஆயிரக்கணக்கான கதவுகளை விற்று வருகிறார். அதிகமாக கேரள முழுவதும் இவரது மரச்சிலைகள் பிரசித்தமாகின. இவரது வெற்றிப் பயணம் தொடர்கிறது.

நோய் முழுவதுமாய் மாறியது என்ற மருத்தவ சான்றிதழ் பெற்ற பிறகு "தங்கமணி" என்பவரை திருமணம் செய்தார். குழந்தைகள் இல்லாத குறை தீர்க்க "அப்பு" என்ற பாசமுள்ள நாய் இவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

தன்னிடம் வேலை செய்யும் எல்லோரிடமும் திரு. பாலன் அவர்கள் மிகவும் பாசமாக நடந்து வருகிறார். எந்த விருதும் இவரை தேடி வரவில்லை என்றாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் தான் பெற்ற அறிவை பல இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதே இவரது ஆசை.

சொந்தமான் அழகிய வீடு, கார், உதவியாளர்கள் போன்ற பல பொருளாதார வசதிக்ள் இருந்தும் தனது பழைய ஏழ்மை நாட்களை மறக்காத சிலரில் இவரும் ஒருவர்.

விரல்களில்லாத காலத்தில் இறைவன் கிருபையாக தந்த  "சிலை செய்யும் கலையை" நினைத்து ஒவ்வொரு நொடியும் இறைவனுக்குன் ஸ்தோத்திரம் செய்கிறார், இந்த அதிசய சிறபி திரு பாலன் அவர்கள்.

oooOooo
சுரேஷ், சென்னை அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |