ஜனவரி 20 2005
தராசு
கார்ட்டூன்
காந்தீய விழுமியங்கள்
பங்குச்சந்தை ஒரு பார்வை
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
சமையல்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • ஹர்ஷத் மேத்தா
  • - சசிகுமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    சமையல் : ஸ்வீட் கட்லட் / இட்லி
    - ஜெயந்தி நாராயணன்
    | Printable version |

    ஸ்வீட் கட்லட்

    தேவையான பொருட்கள்

    பயத்தம் பருப்பு - 1கப்
    தேங்காய்பால்  - 1/4கப்
    பாதாம்       - 6
    முந்திரி       - 6
    மைதாமாவு    - 100 கிராம்
    சோளமாவு    - 150 கிராம்
    வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன்
    சர்க்கரை     - 100 கிராம்
    நெய்        - 4 டேபிள் ஸ்பூன்
    உப்பு        - தேவையான அளவு
    எண்ணை     - பொறிக்க
    ரஸ்க் தூள்    - 50 கிராம்

    செய்முறை

    பயத்தம் பருப்பை நன்றாக வேகவைத்து நீர் வடித்து மசித்து வைத்துக்கொள்ளவும். நான் ஸ்டிக் கடாயில் தேங்காய் பாலுடன் மசித்த பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும். நெய்யில் பாதாம், முந்திரி துண்டுகளை துண்டுகளாக்கி வறுத்து எடுத்து இத்துடன் சேர்த்து நன்கு கலந்து ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். மைதாமாவு,சோளமாவு இரண்டினையும் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கலந்து பஜ்ஜி மாவு கரைப்பது போல் கெட்டியாக கரைத்து அதில் உருண்டைகளை தோய்த்து எடுத்து எள், ரஸ்க்தூள் இரண்டிலும் புரட்டி எடுத்து எண்ணையில் பொரித்து எடுத்துக்கொள்ளவும். புதுச்சுவையுடன் குழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர ஸ்நாக்ஸ் புதுப்பெயருடன் தயார்.



    ஸ்வீட் இட்லி

    தேவையான பொருட்கள்

    புழுங்கல் அரிசி - 200கிராம்
    தேங்காய்துருவல் - 50கிராம்
    ஏலக்காய்பொடி  - 1/2 டீஸ்பூன்
    சமையல் சோடா - சிறிது (சிட்டிகையளவு)
    நெய் - 4 டீஸ்பூன்
    முந்திரி - 2 டேபிள் ஸ்பூன் பொடித்தது
    வெல்லம் - 150கிராம்

    செய்முறை

    புழுங்கலரிசியை 4மணிநேரம் ஊறவைத்து எடுத்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் வெல்லத்தை வடிகட்டி எடுத்து சேர்த்து கரைத்து வைக்கவும். இதை சுமார் 6 முதல் 8 மணிநேரம் வைத்து பிறகு இத்துடன் ஏலப்பொடி,சமையல்சோடா,நெய்,முந்திரிதுண்டுகள்,தேங்காய்துருவல் யாவற்றையும் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். பிறகு   சிறிது எண்ணை தடவிய இட்லி தட்டில் மாவை 1/2 கரண்டி சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்து மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்க சத்தாண ஸ்வீட் இட்லியை விரும்பி உண்ணுவார்கள்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |