பிப்ரவரி 17 2005
தராசு
பங்குச்சந்தை ஒரு பார்வை
மஜுலா சிங்கப்புரா
முத்தொள்ளாயிரம்
கவிதை
ஆன்மீகக் கதைகள்
வ..வ..வம்பு
நூல் மதிப்புரை
நையாண்டி
கட்டுரை
சமையல்
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • ஹர்ஷத் மேத்தா
  • - சசிகுமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    கட்டுரை : பாவம் பாகிஸ்தான் பொதுஜனம்
    -
    | Printable version |

    உலகிலேயே அமெரிக்க எதிர்ப்பு அதிகம் உள்ள நாடு பாகிஸ்தான் என்று சமீபத்தில் வெளியான அமெரிக்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாகரீகத்தை ஏற்கும் பாகிஸ்தானியர்களும் கூட அமெரிக்காவை வெறுக்கிறார்கள் என்று அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.  போதாத குறைக்கு பாக். உளவு நிறுவனமான ஐ.எஸ்.அ. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகிறது என்றும் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தீவிரவாதிகளுக்காக செலவு செய்கிறது என்றும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    ஒரு நாடு சில சுயநலவாதிகளின் கையில் சிக்கினால் அந்நாட்டு மக்களின் நிலை என்னவாகும் என்பதற்கான சரியான உதாரணங்களில் ஒன்றாகத் திகழ்வதுதான் பாகிஸ்தானின் 57 வருட சாதனை. மதவெறி பிடித்த சில தலைவர்கள், அவர்கள் இஷ்டத்திற்கு ஆடும் ஏகப்பட்ட தீவிரவாதிகள் - இவர்கள் கையில் முழுமையாக உள்ள பாக்.உளவு நிறுவனம், மக்களைப் பற்றி பெரிய அளவில் கவலைப்படாத அரசு, இதனைக்கும் நடுவே அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் மக்கள் - இதுதான் பாகிஸ்தானின் நிலை. இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்க பொதுமக்கள் ஆசைப்பட்டாலும் அதை நடத்த விடாமல் தடுக்க பாக்.கில் ஏகப்பட்ட எதிர்பாளர்கள் உள்ளார்கள்.

    காலுக்கு உதவாத செருப்பைக் கழற்றி வீசு!! என்ற கொள்கையைக் கொண்ட அமெரிக்காவால் முதலில் பலனடைந்து பிறகு சீரழிந்த நாடுகளின் பட்டியல் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. அமெரிக்கா தங்களுக்கு செய்து வரும் சில பல உபகாரங்களிற்காக " முஸ்லீம் நாடுகளிலேயே தற்போது அமெரிக்காவிற்கு மிகத்தீவிரமாக ஆதரவு அளித்து வரும் நாடு! " என்ற பெயரைப் பெற்ற பாக். அரசு விரைவிலேயே மக்களில் மாறுபட்ட மனோபாவத்தால் தன் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அப்போதுதான் அமெரிக்காவின் உண்மை முகம் பாகிஸ்தான் அரசிற்குத் தெரியவரும். தன்னுடையத் தேவைக்காக அடுத்த நாட்டைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அதை அழிக்கும் மனோபாவமுள்ள அமெரிக்க அரசின் கையால் பாகிஸ்தான் அடிவாங்கப் போவது உறுதி என்றாலும், அந்த நாள் எப்போது வருப்போகிறது? என்பதே பாக். மக்களின் தற்போதைய கவலை. பாவம் பாகிஸ்தான் பொதுஜனம்!!

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2005 Tamiloviam.com - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |