Tamiloviam
மார்ச் 01 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : பந்த் பயன் தருமா?
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

காவிரிப் பிரச்சனையில் தமிழக மக்களின் குரலை ஏகோபித்த முறையில் டெல்லிக்குக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நாங்கள் மாநிலம் தழுவிய பந்த் நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்தோம் - ஆனால் முதல்வர் எங்கள் கோரிக்கையை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை என்று முதல்வரை ராமதாஸ் குறை 2 நாட்களுக்கு முன்பாக குறை கூறினார். ராமதாஸை எப்பாடு பட்டாவது சமாதானப்படுத்தும் நோக்கில் உள்ள முதல்வர் உடனே பந்த் நடத்தக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை.. அந்தக் கருத்திற்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்கவில்லை.. என்று பதில் கொடுத்துள்ளார். ஆக மொத்ததில் வெகு விரைவில் தமிழகத்தில் ஆளும் கட்சி ஆதரவுடன் பந்த் நடக்கப்போகிறது.

ஏற்கனவே இந்தப்பிரச்சனையில் தமிழக அரசியல்வாதிகள் நடத்தும் நாடகத்தைப் பார்த்து வெறுத்துப்போன மக்களை மேலும் வெறுப்பேற்ற இந்த பந்த் நிச்சயம் உதவும். நெய்வேலி விஷயத்தில் மத்திய அரசு தங்களுக்குச் சாதகமான முடிவை எடுக்காவிட்டால் மத்திய மந்திரிகள் ராஜினாமா செய்வார்கள் என்று ஒப்புக்காவது ஒரு அறிக்கை வெளியிட்ட முதல்வர் காவிரி விவகாரத்தில் மறந்தும் கூட வாயைத் திறக்கவில்லை. அவர்தான் அப்படி என்றால் கூட்டணித் தலைவரான ராமதாஸ¤ம் காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தும் அதை கர்நாடகம் மதிக்கவில்லை - இதை எதிர்த்து அன்புமணி ராஜினாமா செய்வார் என்று ஒப்புக்குக்கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை. மாறாக மாநிலம் தழுவிய பந்த் நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுகிறார்.

காவிரி மற்றும் முல்லைப் பெரியார் அணைத் தொடர்பாக எங்கள் கட்சி மந்திரிகள் ராஜினாமா செய்வார்கள்.. எம்.பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என்று சொல்ல எந்த அரசியல்வாதியும் தயாராக இல்லை.. மாறாக பந்த் என்ற பெயரில் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒருநாள் முடக்கிப்போட அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.. மொத்தத்தில் தமிழக மக்களை இந்த நதிநீர் பிரச்சனையிலிருந்து காப்பாற்ற ஒருவருமே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. மாநில மக்களிடையே அதிருப்தியை தூண்டிவிட்டு கலகத்தை ஏற்படுத்துவதுதான் தமிழக - கர்நாடக அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சனையில் செய்யும் மகத்தான சேவை.

இரு மாநில விவசாயிகளும் - பொதுமக்களும் அரசியல்வாதிகளின் இந்த இரட்டை வேடத்தைப் புரிந்துகொண்டு தங்களுக்குள்ளேயே பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். சமூக ஆர்வலர்கள் யாராவது முழுமனதுடன் இதற்கு துணை நின்றால்தான் இப்பிரச்சனைக்கான ஒரு சுமூகமான தீர்வைக் காண முடியும். இல்லாவிட்டால் இதை வைத்தே இன்னும் பலகாலத்திற்கு அரசியல் செய்து ஆதாயம் பார்ப்பார்கள் நம் அரசியல் தலைவர்கள்.

| | | | | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |