மார்ச் 16 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : என்று மாறும் இந்த மோகம் ?
- ஆனந்த் சங்கரன் [anand_sankaran@yahoo.com]
| Printable version | URL |

Fair and Handsomeநம்மவர்களுக்கு என்றுமே சிவப்பழகு மேனியின் மீது ஒரு மோகம் இருப்பது தெரிந்த விஷயம் தான். திருமணத்திற்குப் பெண் பார்க்கப் போகும் போது பெண் நல்ல சிவப்பாக இருக்க வேண்டும் என்பதிலிருந்து பிறக்கப்போகும் குழந்தை சிவப்பாக இருக்க டப்பா டப்பாவாக குங்குமப்பூவை விழுங்குவது என்று சிவப்பாக இருக்க நம்மவர்கள் காட்டும் அக்கறை ரொம்பவும் ஜாஸ்தி.

என்றாலும் சமீப காலமாக அந்த மோகம் மிகவும் அதிகரித்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றும் விதமாக ஏகப்பட்ட சிவப்பழகு க்ரீம்களும், லோஷன்களும் இந்தியத் தொலைக்காட்சிகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டன. பெண்களுக்கான க்ரீம்கள் போதாது என்று எந்தப் புண்ணியவான் நினைத்தாரோ தெரியவில்லை - தற்போது ஆண்களுக்கான சிகப்பழகு க்ரீம்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

மீடியாக்களை ஆக்கிரமிக்கும் இந்த சிவப்பழகு க்ரீம் விளம்பரங்கள் அனைத்தும் சற்று நிறம் குறைவாக இருக்கும் போது சம்மந்தப்பட்ட பெண்களும் ஆண்களும் தன்னம்பிக்கை குன்றி இருப்பதைப் போலவும், குறிப்பிட்ட சிகப்பழகு க்ரீமை உபயோகித்து அவர்கள் சிவப்பான பிறகு அவர்களது தன்னம்பிக்கை எக்கச்சக்கமாக அதிகமாகிவிட்டதாகவும் அனைத்து விளம்பரங்களும் ஒருவித மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

மடத்தனமான இத்தகைய விளம்பரங்களை என்னவென்று சொல்வது? ஒரு ஆணோ பெண்ணோ சற்று நிறம் குறைவாக இருந்தாலோ அல்லது கருப்பாக இருந்தாலோ அவர்களுக்கு தன்னம்பிக்கையே இருக்காதா? சிவப்பாக இருப்பது தான் உயர்வு என்று யார் சொன்னது? அப்படி என்றால் சரும நிறம் சிவப்பாக உள்ளவர்கள் அனைவரும் தன்னம்பிக்கை சிகரங்களாக இருக்கிறார்களா? அல்லது நிறம் சற்று குறைவாக இருப்பவர்கள் தன்னம்பிக்கையே இல்லாமல் வாழ்கிறார்களா? வெளிநாடுகளில் எல்லாம் சிவப்பழகு க்ரீம்கள் என்று தனியாக எதுவும் கிடையாது. அவரவர் சரும நிறத்திற்கு ஏற்றவாறு சில மேக்கப் பொருட்கள் கிடைக்கும்.. அவ்வளவே

இந்த விஷயத்தில் நாம் குறை கூற வேண்டியது நம் மக்களைத் தானே தவிர இத்தகைய க்ரீம்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை அல்ல. நம் மக்கள் விழுந்தடித்துக் கொண்டு - கொஞ்சம் கூட யோசிக்காமல் தங்கள் சருமத்தை சிவப்பாக்க விளம்பரங்களில் வரும் எதையும் வாங்கத் தயாராக உள்ளதால் இத்தகைய சிவப்பழகு க்ரீம்களைத் தயாரிக்கவும் இந்தியாவில் விற்கவும் தயாரிப்பாளர்கள் கொஞ்சமும் தயங்குவதில்லை.

மக்களே ! எத்தனை காலம் தான் இந்த சிவப்பழகு மோகத்தில் நாம் திளைக்கப் போகிறோம்? உலகம் மாறி வருகிறது. நாமும் நம்முடைய பழமையான எண்ணங்களை மாற்றிக் கொண்டு - நிறங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக மனிதர்களுக்கும் - மனித மனங்களுக்கும் - மக்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமைக்கும் மதிப்பு கொடுப்போம். மேலைநாடுக் கலாசாரத்தை பலவிதங்களிலும் காப்பியடிக்கும் நம்மவர்கள் இந்த விஷயத்தில் மேலைநாட்டு மக்கள் கடைபிடிக்கும் நிலையை கடைபிடிக்க எப்போது முன்வருவார்களோ அப்போதுதான் இந்த சிவப்பழகு மோகம் தீரும்.

| |
oooOooo
ஆனந்த் சங்கரன் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |