Tamiloviam
மார்ச் 29 07
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : 44 மில்லி கிராம் உலகக்கோப்பை
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

இதனை செய்ய முயற்சி செய்த பொழுது 4 முறை தோல்வி அடைந்தேன். ஜந்தாவது முறையாக செய்யும் பொழுது வெற்றி பெற்றேன் என்கிறார்.

எதையாவது திருப்தியாக செய்ய வேண்டும் என்பது தான் எனது ஒரே நோக்கம் என்கிறார் சழுத்திரக்கனி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வசித்து வரும் இவருக்கு வயது 30. திருமணமானவர். இவர் ஒரு தங்க நகைகளை செய்து வரும் பொற்கொல்லராக இருந்து வருகிறார். இவர் 44 மில்லி கிராம் எடை, அரை சென்டி மீட்டர் உயரம் உள்ள உலககோப்பையை போன்றே தங்கத்தால் மாதிரி உலக கோப்பை உருவாக்கி சாதனை செய்திருக்கிறார்.
 
சிறு வயதில் இருந்தே வாழ்க்கையில் பிறரைப் போல நாமும் எதையாவது சாதிக்க வேண்டும். பிறரைப் போல் பெயர் வாங்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இருப்பேன். பெரியவனாக வளாந்த உடன் குடும்ப சூழல் காரணமாக நகைகளை செய்து கொடுக்கும் தொழிலுக்கு வந்து வழிட்டேன். அதிகமாக படிக்க முடியாவிட்டாலும் இருந்தாலும் வாழ்க்கையில் எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதற்காக பல யோசனைகளை செய்து வந்தேன். அந்த சமயத்தில் தான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பற்றியும், அந்த கோப்பையை பற்றியும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதன் விளைவாக உலக கோப்பையை மாதிரியே ஒரு கோப்பையை மாதிரி கோப்பை செய்ய திட்டமிட்டேன். அதனை நான் பணி செய்யும் தங்கத்தால் செய்ய வேண்டும் என நினைத்து செயலில் இறங்கினேன். அதன் விளைவாக 44 மில்லி கிராம் எடை, அரை சென்டி மீட்டர் உயரம் கொண்ட அளவில் மாதிரி உலககோப்பையை செய்து முடித்தேன். இதில் என்ன சிறப்பு என்றால் உலககோப்பை கிரிக்கெட் கோப்பையில் இருக்கும் வடிவங்கள் அனைத்துமே இதில் இருப்பது தான். இதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது. லென்சை வைத்து பார்த்தால் அது தெளிவாக தெரியும் படி வடிவமைத்துள்ளேன். இதனை செய்வதற்கு பத்து நாள் ஆனது. இதனை செய்ய முயற்சி செய்த பொழுது 4 முறை தோல்வி அடைந்தேன். ஜந்தாவது முறையாக செய்யும் பொழுது வெற்றி பெற்றேன் என்கிறார்.
 
44 mg world cup1997ம் வருடம் நடைபெற்ற உலக கோப்பை போட்டியின் போது 120 மில்லி கிராம் எடையுள்ள உலக கோப்பை மாதிரியை தங்கத்தால் இவர் ஏற்கனவே வடிவமைத்துள்ளார். இந்த முறை அதனை விட எடை, உயரம்  குறைந்த அளவில் இந்த 2007ம் ஆண்டு உலககோப்பையை போன்றே தங்கத்தால் வடிவமைத்துள்ளேன். எனது இந்த சாதனையை இந்திய அளவில் சாதனையாளர்களை அங்கீகாரம் செய்யும் லிம்காவிற்கு அனுப்ப உள்ளேன். அதே போல் உலக அளவில் இது போல் சாதனைகளை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதே எனது லட்சியம். எனது இந்த முயற்சிக்கு எனது நண்பர்கள், பெற்றோர்கள் அனைவரும் ஊக்கம் அளித்து வருகின்றனர். நமது ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் சொல்வது போல் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்றால் கனவு காண வேண்டும். அந்த கனவை நனவாக்க முயற்சி செய்ய வேண்டும். அதன் படி நான் வாழ ஆசைப்படுகிறேன் என்கிறார் சமுத்திரக்கனி.
|
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |