Tamiloviam
ஏப்ரல் 03 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : வேகப்பந்து வீச்சாளர் சலீல் அங்கோலா
- "வினையூக்கி" செல்வா
  Printable version | URL |

 

Salil-Ankolaஇந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணங்கள் செய்யும்பொழுது, "பயணியாக" அணியில் தேர்வாகி, விளையாட வாய்ப்பு ஏதும் தாரப்படாமல் அடுத்த சுற்றுப்பயணத்தில் காரணகாரியமின்றி நீக்கப்படுவதை கிரிக்கெட் வட்டாரங்களில் “அங்கோலட்" என்று சொல்லுவது வழக்கம்.

(நன்றி:விக்கீபிடியா). இந்தப் பெயருக்கு சொந்தக்காரர் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சலீல் அங்கோலா.

சுமார் 8 வருடங்கள் அணியில் தேர்வாகி , நீக்கப்பட்டு திரும்பத் தேர்வாகி இருந்தாலும் இவர் ஆடிய மொத்த ஆட்டங்கள் 20 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே. டெண்டுல்கர் அறிமுகமான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் அதன்பின் டெஸ்ட் ஆட்டம் ஆட தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக தொடர்ந்து கிரிக்கெட் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியாததால் கிரிக்கெட் வாழ்வில் உச்சக்கட்டம் ஆரம்பிக்கும் வயது எனச் சொல்லப்படும் 28 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இவருக்கு , இயற்கை ஒரு சன்னலை மூடினால், வேறொரு கதவைத் திறக்கும் எனும்படி, சின்னத்திரையில் இவரின் அழகிய ஆஜானுபாகுவான தோறறம் நாயகனாக அறிமுகம் ஆக வாய்ப்பளித்தது. சலீம் துரானி (பர்வீன் பாபியுடன் சரித்ரா), சந்தீப் பட்டீல் (பூனம் தில்லனுடன் கபி கபி) போல் அல்லாமல் இவரின் சின்னத்திரை வெள்ளித்திரைப்பயணம் வெற்றிகரமாகவே அமைந்தது.

Chahat Aur Nafrat என்ற இவரின் அறிமுகத் தொலைக்காட்சித் தொடர் இவருக்கு கிரிக்கெட்டில் கிடைத்ததை விட அதிக பிரபல்யத்தை ஈட்டித் தந்தது. சோனித் தொலைக்காட்சியின் Bigboss என்ற (மேற்கத்திய bigbrother வகையிலான reality show) நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தபோது பாலாஜி டெலிபிலிம்ஸ் இவர் அதில் பங்கேற்க கூடாது என நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றப்போது செய்திகளில் அடிபட்டார்.

இவரை முன்னுதாரணமாகக் கொண்டு வினோத் காம்பிளி(அனார்த்), அஜய் ஜடேஜா(கேல்) ஆகியோரும் பெரியதிரைகளில் வலம்வரத்தொடங்கினாலும் அங்கோலாவைப்போல தனக்கென ஒரு இடத்தை அவர்களால் தக்கவைக்க முடியவில்லை.

தொடர்ச்சியாக சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் மின்னிய இவர், சிலமாதங்களுக்கு முன்

நோய்வாய்ப்பட்டதன் விளைவாக , உடல் பருமன் கூடி வயதானவர் போலதோற்றமளிப்பதால் Karam Apnaa Apnaa என்ற தொடரில் வயதானவர் வேடத்தில் நடித்து வருகிறார். உடற்பயிற்சிகள் செய்து மீண்டும் இளமையான சின்னத்திரைக் கதாநாயகனாக இவர் மின்ன வேண்டும் என்பது தான் இந்தி சின்னத்திரை ரசிகர்களின் ஆவல்.

oooOooo
                         
 
"வினையூக்கி" செல்வா அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |