ஏப்ரல் 20 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அறிவிப்பு : எவ்ரி டே மனிதர்கள் (புதிய பகுதி)
- [feedback@tamiloviam.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

வரும் வாரம் முதல், திருமதி. துளசி கோபால் எழுதும் புத்தம் புதிய பகுதி "எவ்ரி டே மனிதர்கள்". படிக்க தவறாதீர்கள்.

- ஆர்.


தொடருக்கு ஒரு அறிமுகம்.

Tulsi Gopalஎல்லாருக்கும் வணக்கமுங்க. நல்லா இருக்கீங்களா?

ஏங்க, மனுஷ வாழ்க்கைன்றதே அனுபவங்கள்தானே? நாம ஒவ்வொருத்தரும் கொஞ்சமே கொஞ்சம் திரும்பிப்பார்த்தாப் போதும், நமக்கே ஆச்சரியமாப் போயிரும்.

எதைஎதைக் கடந்து வந்தோம், என்னென்ன த்ரில், எத்தனை விதமான உயிர்களைப் பார்த்தோம். அடேயப்பா!

அது என்ன 'உயிர்கள்'னு கேக்கறிங்களா? மனுஷங்க மட்டுமில்லைங்க, இந்த மிருகங்கள், பறவைகள், செடிகொடிங்கன்னு எல்லாத்துக்கும் ஒரு குணாதிசயம் இருக்குங்க. அதுங்களுக்கும் உயிர் இருக்குதேங்க.

ஆனா , இந்த உயிர்கள் வரிசையிலே மனுஷனுக்கு உள்ள  'மவுஸே'தனிங்க. ஏன்னா மத்ததுங்க, தன்னோட குணத்தைப் பளிச்சுன்னு காமிச்சுருங்க. உள்ளெ ஒண்ணு, வெளியே ஒண்ணுன்னு மறைக்கறதோ, இல்லே அடுத்தவங்க முன்னாலெ தன்னை உயர்வாக் காட்ட வேஷம் போடறதோ இதுங்களுக்குத்  தெரியாதே. எல்லோரும் தன்னை மெச்சிக்கணுமுன்னு ஒரு ஆடு, சிங்கம்போல உறுமுறதைப் பார்த்திருக்கீங்களா ?

ஆங்... இப்பப் புரிஞ்சுபோச்சுல்லே நான் என்ன சொல்லவர்றேங்கறது? அதான்.......

கவனிச்சுப் பார்த்தீங்கன்னா, மனுஷனே ஒரு விசித்திரம்தாங்க.  இதுலே நாம சந்திச்சவங்களை நினைக்கிறப்ப ரொம்ப சுவாரஸியமா இருக்கும். குழந்தைங்க, வயசானவங்க, பணக்காரங்க, ஏழைங்க, படிச்சவுங்க, படிக்காதவுங்க, இந்தியருங்க, வெள்ளைக்காரங்க இப்படி ரகம் ரகமான மக்களோடு பழகுற வாய்ப்பு ஏற்பட்டிருக்கே. இதையெல்லாம் நானே அசை போட்டுக்கிட்டு இருந்தா எப்படி ?

அதான் வாரம் ஒருத்தருன்னு உங்களுக்கும் அவுங்களைப் பரிச்சயப்படுத்தலாமுன்னு..... ஒரு நல்ல எண்ணம்தான்:-)

நீங்களும் இனிமேப்பட்டுக் கவனியுங்க. அப்புறம் நீங்களும் சொல்ல ஆரம்பிச்சுருவீங்க, 'எவ்ரி டே' மனிதர்கள்.

மொதல்லே ஒரு குழந்தையோட ஆரம்பிக்கலாமா? ச்சும்மா ஒரு சாம்பிள்தான்.

oooOooo

தோழியோட புள்ளைங்களை சினிமாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போகலாமுன்னு திடீர்னு ஒரு ஐடியா வந்துச்சு. நண்டும் சிண்டுமா மூணு பேர். பெருசுக்கு ஒரு அஞ்சு வயசு இருக்கும்.

பஸ் சார்ஜ், சினிமா டிக்கெட், அங்கே இடைவேளைத் தீனின்னு பட்ஜெட் போட்டுக்கிட்டு இருந்தேன். நல்லா யானைங்க எல்லாம் வர்ற படம். அதாலே கொஞ்ச தூரமான தியேட்டருன்னாலும் பரவாயில்லைன்னு முடிவு செஞ்சாச்சு.

பஸ் சார்ஜ், சினிமா டிக்கெட் ரெண்டையும் குறைக்க முடியாது. கைவச்சாத் தீனியிலேதான் வைக்கணும். அதாலெ அதுங்களைக் கூட்டிவச்சு, நைச்சியமாப் பேசறேன்.

" சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போறோம்லெ. அங்கே வந்து சத்தம் கித்தம் போடாம ச்சுப்னு படத்தைப் பார்க்கணும். ஒருத்தர் கையை ஒருத்தர் புடிச்சுக்கிட்டுப் பத்திரமா கூடவே வரணும். இண்ட்டர்வெல் வர்றப்ப அது வேணும், இது வேணுமுன்னு தொந்திரவு பண்ணக்கூடாது..."

சொல்லி முடிக்கலைங்க.அப்பப் பெருசு முந்திக்கிட்டு சொல்லுது.

"ஆண்ட்டீ, நாங்க ஒண்ணும் கேக்க மாட்டோம். நீங்களே எல்லாத்தையும் வாங்கிக் குடுங்க"

ம்ம்ம்ம்..... எல்லாத்தையும் நானே வாங்கிக் குடுக்கணுமாம். எல்லாத்தையும்!!!!

போனமான்னு கேக்கறீங்களா? போனோம் போனோம்..

தேவர் ஃபிலிம்ஸ் படம். நல்ல நேரம்.


அடுத்து, சந்திக்கப் போறவர் 'சாந்தா'

|
oooOooo
அவர்களின் இதர படைப்புகள்.   அறிவிப்பு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |