Tamiloviam
ஏப்ரல் 26 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : பெருகிப் போன போலிகள்
- சிதம்பரம் அருணாசலம்
| | Printable version | URL |

உள்ளத்தில் அன்பு போலியாக
உதட்டில் மட்டுமே சிரிப்பு தெரிகிறது.

சொல்கின்ற வார்த்தைகள் போலியாக
வீழ்கின்ற மனிதர்கள் அதிகமாகிறார்கள்.

விருந்து உபசாரம் போலியாக
வெறுப்பைச் சம்பாதிக்கிறது உறவுக் கூட்டம்.

மருந்துகள் தயாரிப்பில் போலியாக
பெருகுகிறது பக்க விளைவுகள்.

வியாபாரத்தில் குறுக்குவழி கண்டதால்
விளைகிறது அமோகமாய் திருட்டு வட்டுக்கள்.

நம்பிக்கை என்பதே போலியானதால்
சொந்தங்களைக் கூடத் தயக்கத்துடன் பார்க்க வேண்டியுள்ளது.

நெடுகச் சேர்த்த பணத்தில்
நிலம் வாங்கச் சென்றால்
பத்திரங்கள் போலியாகிப்
பலரைப் பலிவாங்கிவிடுகிறது.

பணத்தைப் பாதுகாத்து வைப்புத் தொகையாக்க,
பட்டை நாமம் போட்டுவிட்டுப்
பாதியில் ஓடிவிடுகின்றது
போலியான நிதி நிறுவனங்கள்.

மருத்துவரும் போலியாகி
மனித உயிருடன் விளையாடுவதால்
சிகிச்சைக்காய் மருத்துவமனை
செல்வதும் ஆபத்தாகி விட்டது.

போலிகள் எல்லாம்
புதைக்கப் படவில்லையென்றால்,
உலகத்தை விழுங்கி விட்டு
ஒரேயடியாய் ஏப்பம் விடும்.

|
oooOooo
                         
 
சிதம்பரம் அருணாசலம் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |