|
உலகெங்கும் கொண்டாட்டம் - பாவம் உழைப்பவர்க்கோ திண்டாட்டம் !
ஊர்வலமாய்ப் போவோர்கள் உதடுகளில் கோஷங்கள்
உதிரத்தைச் சிந்தி உழைக்கும் தோழர்கள் - அவர் உதடுகளில் மட்டும் தாகத்தின் ரேகைகள் !
கதை பேசிக் காலந்தள்ளும் செய்கை கணக்கற்றோர் செய்கின்றார்
காரணம் சொல் !
கண்களில் நீர் சிந்தக் காலமெலாம் வாழும் உழைப்பாளர் பெயராலே கட்டாயம் வேண்டுமோ ? கண்துடைப்பு விழாக்கள் .
உழைப்பு நிச்சயமாய் இந்த உலகில் ஓர் உன்னதமான சக்திதான் ! உழைப்பவரும் நம்மாலே உயர்த்தப்பட வேண்டியவர் தான் !
ஆனால் தோழனே !
சத்தங்கள் அவன் வாய்க்குச் சாப்பாடு போடாதே ! சபைகளிலே மாறாத சடங்கான வெட்டிப் பேச்சு சத்தியமாய் தீர்க்காது சதிர் கொண்டு உழைக்கும் தோழன் சங்கடங்கள் ஒரு நாளும் !
காரணம் சொல் !
ஏனிந்த விளையாட்டு எப்போதும் ஏமாற்று வித்தை எந்நாளும் சந்தைக் கூப்பாடு
உழைப்போர் வாழ உண்மையாய் நாமும் உள்ளத்தை நேராக்கி உழைப்போம் என்றொரு சங்கற்பம் உழைப்போர் தினத்தில் உறுதியாய் எடுத்திடுவோம்
|