ஏப்ரல் 28 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
உள்ளங்கையில் உலகம்
கவிதை
திரைவிமர்சனம்
ஆன்மீகக் கதைகள்
துணுக்கு
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
ஆன்மீகக் கதைகள் : கழுத்தில் ஒரு பை !
-
| Printable version |

வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தான் ஒருவன். வாழ்க்கையில் விரக்தி ஏற்படவில்லை, மாறாக தம்மைச் சுற்றியுள்ள உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு காட்டிற்குச் சென்றான்.  போகும் வழியில் மற்றவர்களின் குறைபாடுகள், பேசிய பேச்சுக்கள், நடந்து கொண்ட முறைகள் எல்லாமே நினைவுக்கு வந்தன.

பிரம்மாவை நோக்கி, மனதை ஒருமுகப்படுத்தி தவம் செய்ய ஆரம்பித்தான். வாழ்க்கையில் நலம் பல விளையவேண்டும் என்று மனதில் உறுதிப்படுத்திக் கொண்டான். பல ஆண்டுகள் விடாமல் தவம் செய்தான். இறுதியில் பிரும்மதேவன் காட்சி அளித்தான்.

"ஐயனே ! வாழ்க்கையில் இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்தும் மனதில் நிம்மதியில்லை. மேலும் பல ஆண்டுகள் வளமாக வாழ ஆசைப்படுகிறேன் வரம்தர வேண்டும்" என்று வேண்டினான்.

பிரும்மதேவன் "அப்படியா சரி ! இதோ இந்தப் பையை உன் கழுத்தில் தொங்கவிடுகிறேன் இன்னொரு பையை முதுகுப்பக்கமாகத் தொங்கவிடுகிறேன்" என்றார். அவனுக்கோ வியப்பு தாங்கவில்லை. "ஐயனே ! ஏன் இப்படி செய்தீர்கள் ?" என்று கேட்டான்.

பிரம்மதேவன் நிதானமாய்..

"முதுகில் உள்ள பையில், மற்றவர்களின் குறைகள் நிரப்பப்படுகின்றன. அவற்றை நீ பார்க்கக்கூடாது. அதனால் முதுகில் அந்தப்பை. கழுத்தில் உள்ள பையில் உன் குறைகள் நிரப்பப்பட்டிருக்கின்றன. முதுகுப்பையை நீ பார்க்க முடியாது. மற்றவர்களின் குறைகளைப் பார்த்தால் உனக்கு வேதனையும், துன்பமும்தான். ஆனால் உன் கழுத்துப்பையில் உள்ள உன் குறைகளைப் பார்த்தால், அவற்றை நீக்க முயற்சி செய்து முன்னேறப் பாடுப்பட்டு, வெற்றிபெறமுடியும். உனக்கு வாழ்வில் அமைதியும், வளமும், நலமும் கிடைக்கும்" என்று சொல்லி மறைந்தார்.

ஆக நீங்கள் உங்கள் கழுத்துப்பையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டீர்களா ?

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |