|
பிராண்டன் ஜேம்ஸ் ரூத் புதிய சூப்பர் மேனாக நடிப்பார் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து சூப்பர் மேன் ரசிகர்களிடையே ஒரு இனம் புரியாத உற்சாகமும் மனக்கலக்கமும் நிலவி வந்தன. உற்சாகம் - இவர் சூப்பர் மேனாக நடிப்பதில். மனக்கலக்கம் - இவரைப் பற்றி ஒன்றுமே தெரியாததால். இவருக்கு முன்பாக சூப்பர் மேனாக நடித்த மறைந்த கிரிஸ்டோபர் ரீவியின் இடத்தை இவர் எப்படி நிரப்பப் போகிறார் என்ற எண்ணம் பொதுவாக சூப்பர்மேன் அபிமானிகளிடம் இருந்தன.
இவையெல்லாவற்றையும் தகர்த்தெரியும் விதமாக புது சூப்பர் மேனின் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது அதே பழைய சூப்பர் மேன் போன்றே அருமையானத் தோற்றத்தில். சூப்பர்மேன் சிவப்புக்கு பதிலாக மெருனுக்கு மாறிட்டார்.
இந்தப் புது சூப்பர் மேன் ஜூன் 30, 2006 ஆம் ஆண்டு திரைக்கு வர இருக்கிறார்.
|