மே 11 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : ஜார்ஜ் III vs கலைஞர்
- பாஸ்டன் பாலாஜி
Bookmark in Del.icio.us | | Printable version | URL |
George IIIதமிழக முதல்வராக அஞ்சாவது முறையாக பதவியேற்றிருக்கிறார் கலைஞர் கருணாநிதி. அஞ்சு ஜார்ஜுடன் ஒப்பிட முடியாவிட்டாலும்; அஞ்சாவது ஜார்ஜ் பொருத்தமாக இல்லாவிட்டாலும்; இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜார்ஜுடன் புனித ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் இன்றைய டாக்டர் கருணாநிதிக்கு ஓர் ஒப்பீடு.
எண் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் முதல்வர் கலைஞர் கருணாநிதி
1 நாட்டின் நிதிநிலையை நிலைகுலையச் செய்யும் அளவு அதீத செலவுகளினால் பொறுப்பின்றி, சாதாரண மக்களின் பொருளாதாரச் சுமையை ஏற்றியவர். விவசாயிகளின் கடன் ரத்து, இலவச வண்ணத் தொலைக்காட்சி, போன்ற தாராள சலுகைகளினால் வரவு-செலவு சமன் செய்யமுடியாமல், சாதாரண மக்களின் வரியைக் கூட்டுபவர்?
2 இவரின் தலைமையில் தனக்கு சொந்தமான பல விஷயங்களை இங்கிலாந்து ராஜ்ஜியம் இழந்தது. அமெரிக்கா உட்பட பல இடங்களில் தோல்வியுற்றார். முல்லைப் பெரியாறு, காவிரி டி.எம்.சி. போன்ற பல தமிழ்நாட்டுக்கு சொந்தமான விஷயங்களில் சமரசம் பாராட்டுவதாக நினைத்து, ஏமாற்றத்தை மட்டுமே பெற்றுக் கொடுப்பார்?
3 தன்னுடைய பட்டத்தரசியை மணமுடிப்பதற்கு முன் இன்னொருவரை திருமணம் புரிந்ததாக சொல்லப்படுகிறது. அவர்களின் மகன் இளவரசனாக முயன்றது, அரசராலேயே முறியடிக்கப்படுகிறது. முக முத்து, முக அழகிரி போன்ற இளவல்களின் தலையெடுப்பு ஒடுக்கப்பட்டு, பட்டத்தரசு - அரசராலேயே அடையாளம் காட்டப்படுகிறது?
4 தன்னுடைய அரசாட்சியின் தார்மீகமான எல்லைகளை மீறுவதால் அவரின் ஆலோசகர்களாலேயே விமர்சிக்கப்பட்டவர். அனைவரையும் திருப்திப்படுத்த 31 அமைச்சர்களை கொண்ட ஜும்போ அமைச்சரவையினால் அவரின் கூட்டணியினராலேயே விமர்சிக்கப்படப் போகிறவர்?
5 ப்ரென்ச் புரட்சியினால் ஏற்பட்ட நிலச்சுவான்தார்களின் பயத்தைப் போக்க, அண்டை நாடுகளுடன் போர் தொடுத்து, பிரதம மந்திரி மூலமாக வரியை ஏற்றி, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 'ஹேபியஸ் கார்பஸ்' உரிமையையும் ரத்து செய்து ஆங்கில சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டவர். வருவாய் இழப்பினை சரிக்கட்ட, கூட்டுறவு இயக்கத்திற்காக கடன்களைப் பெற்று, செலவுகளை பூதாகாராமாக்கி தமிழகமே மீள முடியாமல் செய்தவர்?
6 இந்தியா போன்ற நாடுகளை கிழக்கிந்திய கம்பெனிக்கு தாரை வார்த்தவர். இந்தியாவினை சன் டிவி குழுமத்துக்கு தாரை வார்த்தவர்?
7 நாட்டின் நிர்வாகத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைத்து, கிழக்கிந்திய நிறுவனத்துக்கு அரசு மானியத்தையும் பெற்றுத் தந்தவர். தமிழ்நாட்டின் முக்கிய நிறுவனங்களை தன் குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனங்களுக்கு ஒப்படைத்து, அரசு மானியத்தையும் பெற்றுத் தந்தவர்?
8 தேசிய நூலகம் தொடங்குவதற்காக ஆயிரக்கணக்கான நூல்களை தானமாக வழங்கியவர். திருக்குறளைப் பிரபலப்படுத்துவதற்காக, பல இடங்களில் (அரசு செலவில்) தேசிய நினைவுச்சின்னம் அமைத்தவர்.
9 அறிவியலின் மாணவர்; தனக்கென சொந்தமாக வானியல் ஆராய்ச்சி மையம் வைத்திருந்தவர். அறிவியலில் முதலீட்டாளர்; தனக்கென சொந்தமாக கடிவட நிறுவனம் வைத்திருப்பவர்.
10 விவசாயத்தில் வெகு ஆர்வம் கொண்டவர். தன்னுடைய தோட்டத்தில் பெருநேரம் செலவழித்த காரணத்துக்காக 'விவசாயி ஜார்ஜ்' என்று செல்லமாக விளிக்கப்பட்டவர். விவசாயிகளின் வாக்கு வங்கி ('lobby')யில் ஆர்வம் கொண்டவர். கடன்களை ரத்து செய்ததால் 'குடியானவ நண்பன்' என்று கொண்டாடப்படுபவர்?
11 தன்னுடைய அமைச்சர்களின் மேல் நம்பிக்கை இல்லாமல், எல்லா அரசு சமாச்சாரங்களிலும் தலையை நுழைத்தவர். தன்னுடைய சகாக்களின் மேல் நம்பிக்கை இல்லாமல், மத்திய அரசு சமாச்சாரங்களிலும் தலையை நுழைத்தவர்?
12 பதினொன்றாம் வயது வரையில் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளவில்லை. பதின்மூன்றாம் வயதிற்குப் பிறகு சமூக ஈடுபாடுகளினால் படிப்பில் நாட்டம் இல்லை.
13 1765-இன் முத்திரைத்தாள் சட்டம், 1767-இன் டௌன்செண்ட் கடமைகள் போன்றவற்றில் அபாண்டமாகப் பழி போடப் பட்டவர். ம.கோ.ரா.வை அடக்கி ஆட்சியைத் தக்க வைக்க முயற்சிப்பவர், மேம்பால ஊழல் போன்றவற்றில் அபாண்டமாகப் பழி போடப் பட்டவர்.
14 அருங்கலைக்களுக்கான 'ராயல் அகாடெமி'யை நிறுவியவர். இயல் இடை நாடக மன்றம் முதல் மணிமண்டபங்கள் வரை பலவற்றை நிறுவியவர். கண்ணகி சிலையை மீண்டும் நாட்டுபவர்?
15 சட்டத்திற்குப் புறம்பானவை என்று சொல்லப்படுவதை, தன் புரிதலுக்கு ஏற்ப பொருள் கற்பித்துக் கொண்டு, கருத்து சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தவர். சட்டத்தை மீறுவது என்பதை மாற்றிப் புரிந்து கொள்ளவைத்து எதிரிகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டவர்?
16 மனநிலை குன்றியதாகக் கண்டுபிடிக்கப்பட்டு ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டு, மகனுக்கு மகுடம் சூட்டப்பட்டது. உடல்நிலை குன்றியதாகக் அறிவிக்கப்பட்டு ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகன்று, மகனுக்கு மகுடம் சூட்டப்பட்டது?
மூன்றாம் ஜார்ஜ் மன்னர் குறித்த தகவல்களுக்கு நன்றி: விக்கிப்பீடியா
| |
oooOooo
பாஸ்டன் பாலாஜி அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |