மே 18 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : திருப்பதியில் - பேரரசு சொன்ன தீர்வு
- ஆனந்த் சங்கரன்
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

திருப்பதி படத்தில் இயக்குனர் பேரரசுவின் தீர்வை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சன் டிவியில் தினமும் கேட்பதால்...

Perarasuதிருப்பதி படத்தில் இயக்குனர் பேரரசு "அனைத்து மருத்துவமனைகளிலும் (தனியார் உட்பட) பிரசவம் இலவசமாக வேண்டும்" என்ற புதிய சட்டத்தை தீர்வாக சொல்கிறார். அதற்கு அவர் கூறிப்பிடும் காரணம், மருத்துவர்கள் காசுக்காக சுகப்பிரசவத்தை கூட அறுவை சிகிச்சையாக மாற்றி விடுகின்றனர் என்பதே.

இது சில இடங்களில் நடக்கிறது என்றாலும் அதற்காக பிரசவமே இலவசம் என்ற தீர்வு சரியானதல்ல. செய்யும் வேலைக்கு பணம் கிடைக்காது என்று தெரிந்தால் வேலை எப்படி சரியாக நடக்கும். உலக ஜனத்தொகையில் இரண்டாவதாக இருக்கும் இந்தியாவில் பிரசவம் முற்றிலும் இலவசமாய் செய்தால் மருத்துவமனைகளின் நிலை என்ன ?

பணம் கிடைக்காது என்று தெரிந்தால் உண்மையில் சிக்கலான பிரவத்தையும் சுக பிரசவமாக செய்யவே மருத்துவர்கள் முயற்சிப்பர். முற்றிலும் இலவசம் என்றால் மருத்துவம் / மருத்துவ வசதிகள் தரமாய் இருக்குமா என்பது சந்தேகமே.


இது போன்ற மருத்துவ பிரச்சனைகளை தீர்க்க பேரரசு சொல்வது போல் தடாலடியாக ஒரு தீர்வை சொல்ல முடியாது. இதில் பலவற்றை சிந்திக்க வேண்டும்.


உலகெங்கும் உள்ள மருத்துவ வசதிகளில் சிலவற்றை பார்போம்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் HMO,PPO போன்ற இன்ஷுரன்ஸ் திட்டங்கள் உள்ளன. இதில் நோயாளி $50 - $200 கொடுத்தால் போதும், மீதியை இன்ஷுரன்ஸ் பார்த்துக்கொள்ளும்.  திட்டம் நல்ல திட்டம்தான் ஆனால் இதில் உள்ள பெரிய பிரச்சனை, இது நல்ல உத்தியோகத்தில் / நல்ல அலுவலகத்தில் இருப்பவர்களுக்கே இன்ஷுரன்ஸ் மலிவாகவும், தரமானதாகவும் கிடைக்கிறது. மற்றவர்கள் மெடிக்கேய்ட், மெடிக்கேர் போன்ற அரசு திட்டங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை. மேலும் உடல் சரியில்லை என்றால் டாக்டரை உடனே போய் பார்க்க முடியாது. அவசர உதவி நிலையங்களில் கூட 3 - 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும். (மாரடைப்பு / விபத்து போன்றவை விதிவிலக்கு).

அமெரிக்காதான் இப்படி என்றால் கனடா போன்ற காமன்வெல்த் நாடுகளில் அரசே அனைத்து செலவையும் ஏற்கிறது, ஆனால் மக்கள் தங்கள் வருமானத்தில் 50% வரி கட்ட வேண்டும். இங்கும் மருத்துவரை பார்க்க உடனே போக முடியாது. ஒரு சில நாட்களே காத்திருக்க வேண்டி இருக்கும். இங்கு மருத்துவர்களின் நிலை மிகவும் கடினம்.

மூன்றாவது இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் இருக்கும் வசதி. ஒரு டாக்டர் இல்லாவிட்டால் அடுத்த டாக்டர் என்று போகலாம். இதில் முழு செலவும் நமதே. இதனால் வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் முடியாதவர்கள் அரசு மருத்துவ மனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர்.

தினசரி கூலிக்கும், வறுமைக்கோட்டின் கீழே வாழும் பல கோடி மக்களுக்கு மேற் சொன்ன வழிகளை அமல்படுத்த பல வருடங்கள் ஆகும். ஹச் என்றால் போராட்டம் என்று கொடி பிடிப்பவர்கள் இருக்கும் வரையில் அதை நினைத்து பார்ப்பதே வேண்டாத வேலை.

ஆக இந்த பிரச்சனைக்கு இதற்கு தீர்வுதான் என்ன ?

இதற்கு ஒரு வரியில் தீர்வு கூற ஹிட்லர் / பேரரசுவால் மட்டுமே முடியும்

- மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் (குறிப்பாக கிராம புறங்களில்)

- தனியார் மருத்துவ மனைகளுக்கு அரசாங்கம் பிரசவத்திற்கு (அறுவை மற்றும் சுக) அதிக பட்ச தொகையை நிர்ணயித்தல். பிரசவ காலத்தின் போதே பணத்தை தயார் செய்து கொள்ள வசதியாக இருக்கும்.

- கருவுற்ற பெண்களுக்கும் அவர்கள் துணைவர்களுக்கு பிரசவம் மற்றும் அதன் சிக்கல் பற்றிய பொது அறிவை வளர்த்தல்.

இதனால் பிரச்சனையை முற்றிலும் சரி செய்ய முடியாவிடினும் தேவையற்ற அறுவை சிகிச்சையை ஓர் அளவுக்கு தடுப்பத்தில் முன்னேற்றம் காண முடியும். 


பிரசவம் சிக்கல் ஆவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு.

Why Might I Have a C-Section?

Your health care provider may suggest that you have a c-section for one or more of these reasons:

- You’ve already had a c-section in another pregnancy or other surgeries on your uterus.
- Your baby is too big to pass safely through the vagina.
- The baby’s buttocks or feet enter the birth canal first, instead of the head. This is called a breech position.
- The baby’s shoulder enters the birth canal first, instead of the head. This is called a transverse position
- There are problems with the placenta. This is the organ that nourishes your baby in the womb. Placental problems can cause dangerous bleeding during vaginal birth.
- Labor is too slow or stops.
- The baby’s umbilical cord slips into the vagina, where it could be squeezed or flattened during vaginal delivery. This is called umbilical cord prolapse.
- You have an infection like HIV or genital herpes.
- You’re having twins, triplets or more.
- The baby has problems during labor that show it is under stress, such as a slow heart rate. This is sometimes called “fetal distress.”
- You have a serious medical condition that requires intensive or emergency treatment (such as diabetes or high blood pressure).
- The baby has a certain type of birth defect.

உதவி :  மார்ச் ஆப் டைம்ஸ்

| |
oooOooo
ஆனந்த் சங்கரன் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |