ஜூன் 08 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : மழை மழை
- லாவண்யா [lavanya.sundararajan@gmail.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

முன்னுரை

அன்புடையீர் இந்த கட்டுரையில் இரண்டு கவிதைகள் மழை பற்றியது பற்றி பேசி இருக்கின்றேன். அவை என் மனம் கவர்ந்த கவிதைகள் ஆகும். அந்த கவிதையோடு ஒத்த ஒரு சில நிகழ்வுகளை உங்கள் பார்வைக்கு படைத்திருக்கின்றேன். அக்கவிதைகள் என்னுள் ஊட்டிய சிந்தனைகள் அவை. உங்கள் மேலான விமர்சனங்களை ஆவலோடு எதிர் நோக்கியுள்ளேன்.


மழை (கவிதை - 1)

    இலைகளற்ற
    இந்த கோடையில் நீ
    வந்து போனதை
    எந்தப் பூ பூத்து கொண்டாடுவது?

--நன்றி குமுதம்.


 இந்த கவிதை ஒரு மரம் பேசுவது போல அந்த கவிஞன் தன் காதலியோடு கழித்த நேரத்தை வார்த்தையால் விவரிக்க முடியாத ஒரு பரவச உணர்வை சொல்வது போன்றது. ஆனால் இதோடு பின்வரும் மூன்று சுழல்களை பொருத்தி பார்த்தேன்.

சுழல் - 1

 ஒரு பெண் விடுதியில் தங்கி படிப்பவள் அல்லது பணி புரிபவள். அவள் நீண்ட நாட்களுக்கு பின் வீடு வந்திருக்கின்றாள். அப்போது அவள் அம்மாவிடம் அக்காவிடம் தோழியரிடன் நிறைய பேசுவாள். வேகமாக சொல்லும் ஒரு புகைவண்டியுள் அமர்ந்து பயணிக்க்கும் போது பார்வைக்கு வந்து போகும் காட்சிகள் போன்று இருக்கும் அந்த பேச்சு. எதையும் முழுமையாக பார்ப்பதற்குமுன் அடுத்த இடம் பார்வைக்கு வந்துவிடுவது போல, ஏதேதோ பேசுவர் கவிதை,சினிமா,பாடல்,இசை இப்படி ஆனால் எதிலுமே ஒரு முழுமை இருக்காது topic மாறிகிட்டே இருக்கும்.

           இலைகளற்ற
           இந்த கோடையில்

        --- நேரம் மிக குறைவாக இருக்கும் இந்தவேளையில்


           நீ
           வந்து போனதை
           எந்தப் பூ பூத்து கொண்டாடுவது?

 
       ---- உன்னிடம் எதை பேசுவது? எதை விடுவது?

சுழல் - 2

ஒரு ஏழையின் வீடு, மகள் வந்து இருக்கிறாள் விடுமுறைக்கு,

           இலைகளற்ற
           இந்த கோடையில்

       ------- என்னிடம் பணமில்லாத இந்தவேளையில்

           நீ
           வந்து போனதை
           எந்தப் பூ பூத்து கொண்டாடுவது?

       ------- என்ன வாங்கி கொடுத்து என் சந்தோசத்தை காட்டுவது.

சுழல் - 3

   ஒரு ஆண். அவனுக்கு அவன் மனைவியால் தொல்லை. ஒரு பெண். அவளுக்கு அவள் கணவன் தரும் கொடுமை. இருவரும் ஒரே அலுவலகம் இருவர்க்கும் ஒருவரின் நிலை மற்றவருக்கு தெரியும். ஒத்த அலைவரிசை. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும், காதல் என்றும் சொல்ல முடியாது. ஆனால் சுழல்,

           இலைகளற்ற
           இந்த கோடையில்

       ------- மிக கொடுமையான இந்த காலத்தில்
    

           நீ
           வந்து போனதை
           எந்தப் பூ பூத்து கொண்டாடுவது?

       ------- ஆறுதல் தரும் இந்த நட்பை உரிமை ஆக்கி கொள்ள முடியாத சோகம்.


மழை (கவிதை - 2)


மழையை பற்றி எப்போது எங்கே எழுதபட்டாலும் அது ரசிக்க கூடியதாகத் தான் இருக்கும்.
ஏனெனில், மழை என்றதும் நம் நினைவுக்கு வருவது ஒன்று இரண்டல்ல. மழையோடு வரும்
மண்வாசனை, குளிர் தென்றல், இடி,மின்னல், தூரல், சாரல்... இப்படி என்ன என்னவோ.
மழை நம்மோடு பேசுவது போல கூட தோன்றும். இதோ ஒரு மழையோடு கூடிய ஒரு சூழலில் எழுதப்பட்ட கவிதை.

    நீ ஆட்டிய கிளை
    மழை போல் இல்லை
    எந்த மழையும்.

--நன்றி குமுதம்.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இது எவ்வளவு சுகந்தமானது என்று புரியும்.
மழை நின்று போய் சற்று நேரமே ஆகி இருக்கலாம். இருட்டும் இல்லாத வெளிச்சமும் இல்லாத
ரம்மியமான சூழல். ஏதோ ஒரு சோலை குயில் இசை பாடிக் கொண்டிருக்கலாம். மலர்கள் மணம்
வண்டுகளின் ரீங்காரம் இப்படி எல்லாம் இருக்கலாம். இந்த சூழலில் கவியின் சிறு வயது தோழி
நினைவிற்கு வர,நம் தோழமை மிகு நாட்களில் என்றோ நீ என் மேல் பொழிவித்த கிளை
கொண்ட மழை போல் இல்லையடி அதன் பிறகு நான் பார்த்து விட்ட ஆயிரம் மழைகள்...
இதையே அந்த கவி தன் காதலியை நினைத்து இந்த கவி வரிகளை எழுதியதாகவும் கொள்ளலாம்.

ஆனால் இந்த கவி வரிகள் வேறு சில காட்சிகள் பொருந்தும் அவை

->தாய் கை சோறு.
->முதல் காதலின் முதல் முத்தம்.
->ஒத்த அலைவரிசையுடைய ஒரு நட்போடு அளவளவிய ஏதோ ஒரு இனிய சனிக்கிழமை இரவு.

இன்னும் பற்பல......

 

|
oooOooo
லாவண்யா அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |