Tamiloviam
ஜூன் 14 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : ஜெயிக்கப் போவது யாரு ?
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

சொன்னதை செய்வோம், சொல்வதை செய்வோம் என்று சொல்லி மக்களை இந்த தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது. இலவச டி.வியாக இருந்தாலும், நிலமாக இருந்தாலும், கேஸ் அடுப்பாக இருந்தாலும் அவைகள் மக்களுக்கு போய் சேரவில்லை.

வெற்றி பெறுவது உறுதி. ஓட்டு வித்தியாசத்தை அதிகப்படுத்துவது தான் எங்கள் பிரச்சாரத்தின் நோக்கம் : காங்கிரஸ் கட்சி

நாங்கள் வெற்றி பெற்று, ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி கொடுப்போம் : அ.தி.மு.க

நாங்கள் வெற்றி பெறா விட்டாலும், தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவோம் : தே.மு.தி.க.


இது போன்ற பிரச்சாரங்களோடு கலை கட்டுகிறது மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி. ஜீன் 26ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகின்ற இத்தொகுதியில் வென்றே தீர வேண்டும் என்ற நோக்கில் அரசியல் கட்சிகள் தங்களின் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த சட்டமள்றத் தேர்தலில்  இத்தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  எஸ்.வி.சண்முகம் காலமானதை தொடர்ந்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தன்னுடைய தொகுதியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அ.தி.மு.க.வும், தொகுதியை கைப்பற்றி, தேசிய அளவில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் செல்வாக்கு தமிழகத்தில் மங்காமல் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த காங்கிரஸ் கட்சியும் வாக்குகளை சேகரித்து வருகின்றன. தி.மு.க. கூட்டணி சார்பில் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கபட்டுள்ளது. இத்தேர்தலில் ஜந்து முனை போட்டி இருந்தாலும் பிரதான போட்டியே காங்கிரஸ் கட்சிக்கும், அ.தி.மு.கவுக்கும் தான். இந்த இரண்டு கட்சிகளுக்கு நடுவே நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை விட அதிக ஓட்டுக்களை வாங்கி தமிழகத்தில் ஆச்சர்யங்களை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கட்சியினர் உழைத்து வருகின்றனர். அ.தி.மு.க. சார்பில் செல்லூர் ராஜீ, காங்கிரஸ் சார்பில் ராஜேந்திரன், தே.மு.தி.க. சார்பில் சிவமுத்துகுமரன் பாரதீய ஜனதா சார்பில் சிசிராமன், புதிய தமிழகம் சார்பில் சிறறறசு போன்றோர் போட்டியிடுகின்றனர். இத தவிர சுயேட்சைகள் 23 பேர் களத்தில் இருக்கின்றனர். பிரதான கட்சிகளின் முன்னனி தலைவர்களின் மேற்பார்வையில் தேர்தல் களம்  சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. இவை தவிர தேர்தல் கமி~னும் தனது பங்குக்கு போலீ;ஸ்  கமி~னர், கலெக்டர், தேர்தல் அதிகாரியை பணி மாற்றம் செய்து பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
 
MaduraiByElection  ADMKஇந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பணம் பெரும்பாலும் கள்ள நோட்டாக இருப்பதாகவும் தொகுதிக்குள் பேச்சு ஒலிக்கிறது.

இந்தியாவில் நடைபெறுகின்ற எந்த இடைத்தேர்தலாக இருந்தாலும் அதில் ஆளும்கட்சி தான் பெரும்பாலும் வெற்றி பெறுகிறது. மதுரை மேற்கு தொகுதியில் நடக்கும் இந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராஜேந்திரன் தான் வெற்றி பெறுவார். இதில் எந்த மாற்றமும் இல்லை. பொதுவாக ஆளுங்கட்சிக்கு எந்தவித பிரச்சினையும் தமிழகத்தில் இல்லை. மக்களுக்கு நன்மை செய்யும் அரசாகத் தான் இன்றைய தி.மு.க. அரசு இருக்கிறது. அது தவிர 7 கட்சி கூட்டணி இருக்கிறது. அவர்களும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு உழைத்து வருகிறார்கள். இன்றைய தமிழக எதிர்கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க. எதிர்கட்சிக்குரிய கடமையை செய்யவில்லை. போகாத ஊருக்கு வழி தேடிக் கொண்டிருப்பது போல் அதன் தலைவி மூன்றாவது அணி என்று போய்க் கொண்டிருக்கிறார். ஆனால் தி.மு.க. அணி அப்படிப்பட்டது அல்ல. எங்கே? எப்படி சேர்ந்தால் வெற்றி கிடைக்கும் என்ற பாதையில் போகக் கூடிய கட்சி. அதனால் இநத மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் ஆளும்கட்சியின் கூட்டணி வேட்பாளார் வெற்றி பெறுவது உறுதி என்கிறார் மதுரை தி.மு.க.வை சேர்ந்த சுப்பிரமணயன்.

MaduraiByElection Congressசொன்னதை செய்வோம், சொல்வதை செய்வோம் என்று சொல்லி மக்களை இந்த தி.மு.க. அரசு ஏமாற்றி வருகிறது. இலவச டி.வியாக இருந்தாலும், நிலமாக இருந்தாலும், கேஸ் அடுப்பாக இருந்தாலும் அவைகள் மக்களுக்கு போய் சேரவில்லை. தி.மு.க. கட்சிக்காரங்களுக்குத் தான் போகுது. அதே போல் உயர்ந்து வரும் விலைவாசி, வறுமை, தரமில்லாத ரேஷன் அரிசி என்று பல சாதகமான விஷயங்கள் அ.தி.மு.க.விற்கு இந்த இடைத் தேர்தலில்  இருக்கிறது. மதுரை மேற்குத் தொகுதி எப்பவுமே அ.தி.மு.கவின் கோட்டையாகவே இருந்து இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட மதுரையில் உள்ள தொகுதிகளில் இத்தொகுதியில் மட்டும் தி.மு.க.வினர் வெற்றி பெற முடியவில்லை. அப்படி செல்வாக்கு உள்ள தொகுதி. இத்தொகுதியில் பலமிக்க வேட்பாளரை அ.தி.மு.க. தலைமை நிறுத்தி இருப்பதால் அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜீ வெற்றி பெறுவது உறுதி. ஏனெனில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்க அவர்களின் கட்சிக்குள்ளும், கூட்டணிக்குள்ளும் வேலை பார்க்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினரின் ஒற்றுமை ஊரறிந்த ஒன்று. மதுரையில மட்டும் காங்கிரஸ் 6 கோஷ்டியாக செயல்படுகிறது. அதில் இரண்டு கோஷ்டிகள் தான் வேலை செய்கிறார்கள். அ.தி.மு.க. வெற்றி பெற்று விடும் என்பதால் தான் தி.மு.க.வினர் அ.தி.மு.க.வினரை வேலை செய்ய விடாமல் தடுக்கின்றனர். கட்சியின் முக்கிய தலைவர்களையும் தொகுதிக்குள் சுதந்திரமாக செயல்பட விட மறுக்கிறார்கள். தி.மு.க.வினரின் மிரட்டல், அழகிரியின் அராஜகம், போலீஸின் தலையீடு போன்ற காரணங்கள் இருந்தாலும், கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க. எப்படி வெற்றி பெற்றதோ அதே வெற்றியை நாங்கள் பெறுவோம். அதற்காக ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனும், ம.தி.மு.க. தொண்டனும் வேலை பார்த்து வருகிறார்கள் அவை தவிர முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், வை.கோவும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகிறார்கள். இவர்களின் பிரச்சாரத்தால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியும் காலி ஆகி அதன் பின் ஆட்சியும் காலி ஆவப் போவது உறுதி என்கிறார் அ.தி.மு.க.வை சேர்ந்த மாவட்டச் செயலர் ராஜன் செல்லப்பா.

நடுநிலையான வாக்காளர்கள் இந்த இடைத் தேர்தலை வேறு விதமாக பார்க்கிறார்கள். இந்த இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார், யார் தோல்வி அடைகிறார் என்பது முக்கியமில்லை. தேர்தல் எப்படி நடைபெறுகிறது. தேர்தலில் எப்படிப்பட்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது தான் முக்கியமாக கவனிக்க வேண்டும். ராஜாஜி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர் காலக்கட்ட அரசியலில் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் என்றால் கட்சிக்காக, நாட்டுக்காக சேவை உள்ளம் கொண்ட நபர்களைத் தான் வேட்பாளர்களாக நிறுத்துவார்கள். அவர்கள் என்ன ஜாதி. மதம் என்பது எல்லாம் மறுபக்கம் தான். ஆனால் சமீபகாலமாக நடைபெறுகின்ற இடைத்தேர்தல்களில் அத்தொகுதியில் எந்த ஜாதியினர் அதிகமாக இருக்கிறார்களோ அவர்களைத் தான் வேட்பாளர்களாக நிறுத்தம் போக்கு அதிகரித்து வருகிறது. உதாரணமாக இந்த மதுரை மேற்கு தொகுதி அதிகமாக வசிக்கின்ற கள்ளர் என்ற பிரிவை சேர்ந்தவர்களைத் தான் அ.தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும், தே.மு.தி.க.வும் வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கிறார்கள். இத்தொகுதியில் கள்ளர் மட்டுமே வாழவில்லை. பிராமணர்கள், கிறிஸ்தவர்கள், கோணர்கள், நாயுடு, தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்களை நிறுத்த வேண்டியது தானே? நமது தமிழக அரசியல் தரம் தாழ்ந்து, மதிப்பு இழந்து, கீழ்த்தரத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதில் இருந்து, பிரச்சாரம் செய்வது வரை அனைத்திலும் விதிமுறை மீறலும், சுயநலமும், பணமும் தான் விளையாடுகிறது. ஒரு ஓட்டுக்கு இவ்வளவு பணம் தருகிறோம் என்று சொல்லி அட்வான்ஸாக சிறிய பணத்தை கொடுத்து விட்டுச் செல்லும் அவலமும் இங்கு நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் நடுநிலைவாதிகள்.              
     
மதுரை மேற்கு தொகுதியின் மற்றொரு கதாநாயகனாக இருப்பது தேர்தல் கமிஷன். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், நன்னடத்தை விதிகளை அமல்படுத்தி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இது வரை ஒழுங்காக பணியாற்றவில்லை என்றும், நேர்மையாக நடந்து கொள்ள வில்லை என்றும் சொல்லி, மதுரை கலெக்டர் ஜவஹார், போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன், தேர்தல் அதிகாரி நாராயணமூர்த்தி, 163 ஏட்டுக்கள் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து கலக்கி கொண்டிருக்கிறது தேர்தல் கமிஷன். தேர்தல் பார்வையாளராக வந்திருக்கும்  அஜாய் தியாகியைக் கண்டு அரசியல் கட்சியினர் கொஞ்சம் அடக்கித் தான் வாசிப்பதாக சொல்கிறார்கள்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், அ.தி.மு.க.விற்காக ஜெயலலிதா, வை.கோ போன்றவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். இவர்கள் தவிர தனித்துப் போட்டியிடும் பாரதீய ஜனதா, புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாட்கள் செல்ல செல்ல சூடு பிடித்து வரும் மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தல் பணிகள் உச்சகட்டத்தை அடைந்து முடிவுகள் வெளி வரும் பொழுது, அவை ஆளும் கூட்டணி கட்சியின் வேட்பாளரான ராஜேந்திரனுக்கே சாதகமாக இருக்கும் என பெரும்பாலான வாக்காளர்களால் சொல்லப்படுகிறது.

| | |
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |