Tamiloviam
ஜூலை 19 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : அரசியலாக்க வேண்டாம்!
- சிதம்பரம் அருணாசலம்
| | Printable version | URL |

நடந்து முடிந்திருக்கிறது
நாட்டின் உயர் பதவிக்கான
தேர்தல் நாடகம்.

ஆளும் கட்சியின்
அங்கத்தினருக்குத் தான்
அந்த நாற்காலி என்ற நடைமுறை
மாற்றம் கண்டது சென்றமுறை.

உலக அரங்கில் இந்தியாவை
உயர்த்தி வைத்த அணுவிஞ்ஞானி
உட்கார்ந்ததும் அந்த நாற்காலிக்கு
உதித்தது புது கெளரவம்.

ஒட்டு மொத்த மக்களும்
கெளரவம் தொடரவேண்டும் என்று
கடப்பட்ட போது - அந்தக்
கனவைக் கலைத்தது
ஓட்டுப் போட்டதால்
உயர்ந்துவிட்ட கூட்டம்.

காரணங்கள் பல சொல்லிக்
கழட்டி விட்டது மட்டுமல்லாமல்
கடமையைக் கண்ணாகக்
கருதிய உள்ளத்தைக்
காயப் படுத்தியும் விட்டார்கள்.

ஓய்வு பெற்றதும் அந்த
உயர்ந்த உள்ளம்
“உயர் பதவிகளை அரசியலாக்க வேண்டாமென”
உறுதியாய்ச் சொன்னது
மரத்துப் போன மனங்களில்
மரத்தாணி போல் பதிந்தால் சரி.

- சிதம்பரம் அருணாசலம்.

|
oooOooo
                         
 
சிதம்பரம் அருணாசலம் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |