Tamiloviam
ஆகஸ்ட் 06 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அறிவிப்பு : சமைத்து அசத்தலாம் - புதிய பகுதி
- காயத்ரி [gayathrivenkat2004@yahoo.com]
  Printable version | URL |

"முளிதயிர் பிசைந்த க[ந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கக் கழாஅக் துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
த[ன் றுழந் தட்ட தீம்புளிப் ப[கர்
இனி}தனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே"

என்பது குறுந்தொகை வரிகள். மணம் புரிந்து இனிய இல்லறம் நடத்தும் தலைவியின் பெருமையை நேரில் கண்ட செவிலித்தாய் தலைவியின் தாய்க்குக் கூறிய வரிகள். தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் ஆகி விட்டது. செசல்லமாகவும் செல்வச்செழிப்புடனும் வளர்ந்த தலைவிக்குச் சமைக்கத் செரியாது. திருமணமான புதிது வேறு. இருந்தாலும் தலைவி தலைவனுக்க[கத் தானே மெனக்கெட்டு சமைக்கிறாள். காந்தள் மலர் போன்ற மெல்லிய தன் விரல்களால் தயிரைப் பிசைகிறாள். குவளை மலர் போன்ற கண்களைக் கொண்ட தலைவியின் கண்களில் தாளிப்பின் புகை பரவ, சிரமத்துடன் தானே குழம்பும் செய்கிறாள். குழம்பு புளிப்பு மிக்கதாய் இருந்தாலும் தலைவன் இனிது இனிது என்று மகிழ்ந்து உண்ணுவதைக் கண்ட தலைவியின் முகம் நுண்ணியத[க மகிழ்ந்தது. என்னே அற்புதமான வரிகள். சமைக்கவே தெரியாவிட்டாலும் கணவன் மேல் கொண்ட காதலினால் தனக்குத் நெரிந்தவரை தலைவி சமைக்கிறாள். தலைவியின் மனம் கோணாமல் தலைவனும் அந்த உணவு ஓஹோவென்று சுவையில் இல்லா விட்டாலும் ரசித்து உண்கிறான். சமையல் ஒருவர் மேல் நாம் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும்.

சமையல் ஒரு அற்புதமான கலை. தனக்குப் பிடித்தவரின் நாக்கிற்கு ருசியாக சமைத்துப் போடும் போது கிடைக்கும் இன்பம் வேறு எந்த பணியிலும் இல்லை. "அம்மா, உன் கைப்பக்குவமே தனிம்மா" என்று ரசித்து சாப்பிடும் பிள்ளைகளுக்காக பார்த்து பார்த்து சமைக்கும் அம்மா, கணவனுக்குப் பிடித்தது எது? பிடிக்காதது எது? என்று தெரிந்து கொண்டு சமைத்திடும் மனைவி, சகோதரனுக்காக ருசியாக சமைத்து அசத்திடும் சகோதரிகள், மகள்கள், மருமகள்கள், விருந்தினரை அசத்த சமைத்திடும் தம்பதியர், மனைவி - குழந்தைகளுக்க[க சமையலை ஒரு கை பார்க்க இறங்கிடும் நளன்கள் என்று சமையல் செய்யும் இவர்கள் அத்துணை பேரும் அன்னபூரணிகளே. ஒரு மனிதன் போதும் என்று நிறைவு அடைவது உணவில் மட்டும் தான். வயிறு நிறைந்தால் மனது நிறையும். திருமண வைபவங்களில் கூட வந்திருக்கும் அனைவருக்கும் விருந்தளிப்பது வயிராற ச[ப்பிட்டு மனசார வ[ழ்த்துவதற்குத் தான். வயிறு குளிர்ந்த[ல் மனது வ[ழ்த்தும்.

சமையல் செய்பவரின் மன நிலையைப் பொறுத்தே சமைத்த உணவின் ருசி அமைகிறது. எனவே ஏனோதானோவன்று சமைக்கக் கூட[து. நிறுத்தி நிதானமாக அன்புடன் ரசித்து சமைக்கும் சாப்பாட்டின் ருசி அமிழ்தத்திற்கு ஒப்பானது. குடும்பத்தினரின் ஆரோக்கியமே சமைப்பவரின் கரங்களில் த[ன் என்பதை மறக்கக் கூடாது.

இனி ஒவ்வொரு இதழிலும் நான் ரசித்து சமைத்தது, பாரம்பரிய சமையல், ஆரோக்கிய சமையல், எளிய சமையல், குழம்புகள், ரசம், கூட்டு, பொரியல், இனிப்பு, காரம், பொடி வகைகள், பச்சடி என்று விதவிதமான ருசிய[ன உணவு செய்முறைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். புதுமணத்தம்பதிகளுக்கும், வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியூர்களில் இருப்பவர்களுக்கும் சமைக்கத் தெரிய[தவர்களுக்கும் வித்தியாச விரும்பிகளுக்கும் மட்டுமல்ல[மல் அனைவருக்கும் இந்த சமையல் பகுதி பயனளிக்கும் என்று நினைக்கிறேன். சமையல் ஒரு சுமையன்று. அது ஒரு தியானம். சமைக்கப் பொறுமையும் ஆர்வமும் நேரமும் இருந்தால் போதும். அசத்தி விடலாம். சமைத்துப் ப[ர்க்கலாமா? சுலபமான சமையலை - இனிமையான உணவை - ரசித்து சமைக்க ,பசித்துப் புசிக்க, ருசித்து சுவைக்கத் தயாரா?

காத்திருங்கள்......

- காயத்ரி

oooOooo
                         
 
காயத்ரி அவர்களின் இதர படைப்புகள்.   அறிவிப்பு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |