இந்த புதிய பகுதிக்கு வந்தமைக்கு நன்றி.
இதில் வாரம் 5 - 10 கேள்விகளாக அடுத்த 10 வாரங்களுக்கு கேட்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியது இந்த கேள்விக்கான சரியான பதிலை கீழே பின்னூட்டமாக இட வேண்டியதுதான்.
அனைத்துக்கும் / அதிகபடியான கேள்விகளுக்கு சரியான விடை எழுதுவோரின் பெயர் 'அறிவுஜீவி' பட்டத்தோடு அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.
இந்த பத்து வாரங்களில் அதிக முறை 'அறிவுஜீவி' பட்டம் பெறுவோரில் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசு வீடு தேடி வரும்.
அட ! தீபாவளி பரிசு போல இருக்கே என்று வியப்பவர்களுக்கு ஒரு சபாஷ் !
இனி என்ன கலக்கிபோடுங்க..
சந்தேகம் 1 : பின்னூட்டத்தில் மொதல்ல எழுதினவரை பார்த்து சரியான பதிலை எல்லாரும் எழுத்திட்டா.. ?
பதில் : மொதல்ல சரியான பதில் எழுதினவருதாங்க.. அறிவுஜீவி.
புனைப்பெயரில் பின்னூட்டம் இடுவோர் அதே பெயரில் தொடர்ந்து இடவும்னு கேட்டுக்கறோம்.
இதோ இந்த வார கேள்விகள்
1. 'பிஷூ' என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர் யார்?
2. 'மயன்' என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர் யார்?
3. 'நாணல்' என்ற புனைப்பெயரில் எழுதியவர் யார்?
4. 'சாலிவாஹனன்' என்ற புனைப்பெயரில் எழுதியவர் யார்?
5. 'விக்ரஹவிநாசன்' என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர் யார்?
6. 'பசுவய்யா' என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர் யார்?
7. 'செல்வம்' என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதியவர் யார்?
8. 'வே. மாலி' என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர் யார்?
9. டி.சி. ராமலிங்கம் எந்தப் பெயரினால் பெரிதும் அறியப்பட்டவர்?
10. டி.கே. துரைஸ்வாமி எந்தப் பெயரினால் பெரிதும் அறியப்பட்டவர்?
சென்ற வார கேள்விகளுக்கான விடை
1. முச்சங்கங்கள் பற்றிய முழு விவரங்களையும் கூறும் முதல் நூல் எது? ஆசிரியர் யார்? (விடை : களவியலுரை - இறையனார்)
2. இடைச்சங்கம் அமைந்த இடம் எது? (விடை : கபாடபுரம்)
3. முச்சங்கங்களிலும் அரங்கேறியதாகக் கூறப்படும் நூல் எது? (விடை : அகத்தியம்)
4. தொல்காப்பியம் எத்தனை நூற்பாக்களைக் கொண்டது? (விடை : 1610)
5. தொல்காப்பியம் எத்தனை இயல்களைக் கொண்டது? (விடை : 27)
6. உடலில் நிகழும் மெய்ப்பாடுகள் எத்தனை? அவை எவை? (விடை : 8 - நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை)
7. முதல், இடை, கடைச் சங்கங்களை ஆதரித்த அரசர்கள் எத்துணைப் பேர்? (விடை : 89, 59, 49)
அதிக கேள்விகளுக்கு சரியான பதில் எழுதிய சென்ற வார அறிவுஜீவி : எழில் (emayil@gmail.com)
வாழ்த்துக்கள் எழில் !!
|