Tamiloviam
செப்டெம்பர் 13 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : குளிர்காயும் மனங்கள்
- சிதம்பரம் அருணாசலம்
| | Printable version | URL |

 

 கொலை வழக்கில் சம்பந்தம்பட்டு

குற்றம் சாட்டப்பட்டவர்,

சாட்சிகள் சரியில்லை என்று

சீக்கிரம் விடுதலையானது

மந்திரியாகிப் போனதாலா?

 

அரியவகை மானை

அஃறினை தானே என்று

வேட்டையாடி விளையாடியவர்,

பிணையில் வெளிவந்தது மட்டுமின்றி

திரைகடலோடித்

திரைப்படங்களில் நடிப்பது,

நடிகனாகிப் போனதாலா?

 

அக்கம் பக்கத்தில்

அச்சத்தை விதைக்குமளவு

ஆயுதத்தை வைத்திருந்தவர்

அதற்கான தண்டனையைப்  பெற்றும்

வீட்டில் குளிர் காய்வது

ஒட்டுமொத்த அரசியல் செல்வாக்காலா?

 

குற்றமும் தண்டனைகளும்

குற்றுயிராய்ப் போன

பொது மக்களுக்குத் தானா?

பொது வாழ்க்கைக்கு வந்த பின்

பெயரும், பொருளும்

சேர்ந்து விட்டால், இவையெல்லாம்

செல்லுபடி யாகாதா?

 

தண்டனை கிடைத்தால்

தப்பிக்க மேல்முறையீடு என்பதும்,

பிடித்து உள்ளே போட்டால்

பிணையில் வெளியேறலாம் என்பதும்

மறுபரிசீலனை செய்யப்படா விட்டால்

குற்ற்ங்கள் மலைபோலக் குவிந்துவிடும்.

குளிர்காய மனங்கள் துணிந்துவிடும்.

 

|
oooOooo
                         
 
சிதம்பரம் அருணாசலம் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |