Tamiloviam
செப் 18 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : நாளைய பயணங்கள்.
- சிதம்பரம் அருணாசலம்
  Printable version | URL |

 

கண்டு பிடிப்புகளிலேயே
சக்கரம் தான்
மகத்தான இடத்திற்கு
மனிதனைக் கொண்டு சென்றது.

கால்நடையாய்த் தூரங்களைக்
கடந்து சென்றவன்
கால்நடைகளைப் பூட்டி
வாகனங்கள் செய்தான்
வசதிகளைப் பயணத்தில் சேர்த்தான்.

இயந்திரங்களை ஊர்திகளில் இணைத்து
இன்னும் உயர்ந்தான் வசதிகளில்.
சாலைளில் ஓடுகின்ற வாகனங்களில்
சரித்திரத்தைச் சாதனைகளால் படைத்தான்

நிலக்கரி, நீராவி ஆரம்பம் - பின்
ஆழ்கடல் கிணறுகளிலிருந்து
அமுதம் எடுப்பது போல்
எரிவாயு மற்றும் எண்ணை.
எரிபொருள் வரிசையில்
இப்படி உயர்ந்தவன்
இமயம் தொட்டது போல்
இயக்கத்திற்கு மின்சாரத்தையும்
இயல்பில் சேர்த்துவிட்டான்.

ஒவ்வொரு நிமிடமும்
குழந்தைகள் பிறப்பது போல்
ஒவ்வொரு நாளும்
தகவல் தொழில்நுட்பம்
புதிதாவது போல்
வாகனங்களிலும் புதுப்புது
வடிவங்கள் வரக்காணலாம்.

ஆள் இயக்காப் பேருந்துகள்
அருகருகே சென்றhலும்
இடித்துக் கொள்ளாது.
விடிந்தால் தினமும்
படிக்கின்ற விபத்துக்களைச்
செய்திகளில் தராது.
மனிதனைப் போல் அவைகள்
மதிகெட வாய்ப்பில்லாததால்
சாலைகளில் குறுக்கு வழிகளைச்
சத்தியமாய்க் கடைப்பிடிக்காது.

தாராளமயமாகி விட்ட சூழலில்
தானியங்கிகளின்; படையெடுப்பில்
கற்பனைக்கும் எட்டாத
நாளைய பயணங்கள்
கண்டிப்பாய்
வானையே எட்டிவிடும் - இன்று
விஞ்ஞானிகள் மட்டும் செல்கின்ற
விண்வெளி கிரகங்களில்
விரைவில் சாலையமையப்
பேருந்து நிறுத்தங்களைப்
பெயர்ப் பலகைகளுடன் காணலாம் - அங்கே
விளம்பரம் செய்வதற்கு
விண்ணப்பங்களும் வரக் காணலாம்.
சாலையோரம் கண்டிப்பாய்
கேரளத்து நாயர் ஒருவர்
தேநீர் அங்காடியைத்
திறந்து வைத்திருப்பார்.

oooOooo
                         
 
சிதம்பரம் அருணாசலம் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |