Tamiloviam
அக்டோபர் 11 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : காலத்தின் கவிஞன்!
- சிதம்பரம் அருணாசலம்
| | Printable version | URL |

 

வருடங்கள் போனாலும்
வயதினைப் போகவிடாத
மார்க்கண்டேயனே! - சொல்
வளத்தினால் நீ தந்தது
மகரந்தத் தேனே!

இளமை உன்னிடம் எப்போதும் இருந்ததால்
மூன்றாம் பாலுக்கு முக்கியம் கொடுத்தாய்.
இரவினில் இன்பம் அதிகம் பெற்றதால்
விடிந்ததும் தமிழ் விருந்தினைத் தந்தாய்!

மதுவின் போதை மற்றவர்க்கெல்லாம்
மனதைப் பேதலிக்கச் செய்தபோது,
புதுப் புது இலக்கியப் பாதையை
உனக்கு மட்டும்
புலப்படுத்தியது நிதர்சனம் - அதனால்
புகழ்பெற்றது தமிழினம்.

காதலின் மென்மையைச் சொன்ன விதத்தில் - தென்றல்
காற்று கூடக் கடினமாகத் தெரிந்தது - அது
வீசிய போது வீரியம் இருப்பதாக - நீ
பேசிய வார்த்தைகளால் மெல்லப் புரிந்தது.

உன் பேனாவிற்குள்ளும்
இளமை பூத்திருக்க வேண்டும்.
அது எழுதும்போதெல்லாம்
இனிமையில் நனைந்திருக்க வேண்டும்.
நீ எழுதிய
காகிதம் இனித்த போதெல்லாம்
கட்டெறும்புகள் வேண்டுமானால்
மொய்க்காமல் இருந்திருக்கலாம்.
காளையரும் கன்னியரும்
கட்டாயம் மொய்த்ததுண்டு.
காலன் உன்னைத் தழுவியிருக்கலாம்.
காலம் உன்னை என்றும் நழுவவிடவில்லை - உன்
வார்த்தைகளில் வாசம் செய்யும் போதெல்லாம்
வசப்படுத்திக் கொள்ளும் இளமை
என்றுமே ஒரு வாசமுல்லை.

 

oooOooo
                         
 
சிதம்பரம் அருணாசலம் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |