Tamiloviam
நவம்பர் 06 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : 101-வது கவிமாலை
- பாண்டித்துரை [pandiidurai@yahoo.com]
  Printable version | URL |
101-வது கவிமாலையில் கவிஞர் ந.வீ.சத்தியடமூர்த்தியின் முதல் கவிதை தொகுப்பான ”தூரத்து மின்னல்” வெளியீடு கண்டது.
 
Kavimaalai25.10.2008 சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி மையத்தில் நடைபெற்ற 101 வது கவிமாலை வழக்கம்போல் படித்த பிடித்த கவிதைகளுடன் ”பிறப்பு” என்ற தலைப்பிலான போட்டிக்கவிதையுடன் நடந்தேறியது. கவிஞர் ந.வீ.விசயபாரதி அவர்கள் கவிமாலை நிகழ்வினை வழிநடத்தி செல்ல போட்டிக்கவிதை அங்கத்தில் பத்திற்கும் மேற்பட்ட கவிஞர்கள் ”பிறப்பு” என்ற தலைப்பிலான கவிதைகளுடன் கலந்து கொண்டனர். இதில் மூன்று கவிஞர்கள் பரிச்சுக்கு தேர்வு செய்யப்பட்டனர். முறைய கவிஞர்கள் திரு.ஷானவாஸ் திருமதி மலர்விழி இளங்கோவன் திருமதி.நூர்ஜஹான் சுலைமான் கவிதைகள் தேர்வு செய்யபட்டு இவர்களுக்கு தலா 30 வெள்ளி ரொக்கப்பணம் புரவலர் ஜோதி மாணிக்கவாசகம் அவர்களால் வழங்கப்பட்டது (ஒவ்வொரு மாதமும் தலா 30 வெள்ளியாக மொத்தம் 90 வெள்ளி ரொக்கப்பணத்தினை ஸ்ரீ விநாயக எக்ஸ்போர்ட் நிறுவன அதிபர் புரவலர் ஜோதி மாணிக்கவாசகம் அவர்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது).
 
இதனையடுத்து 15நிமிட காலதாமதமாக ந.வீ.சத்தியடமூர்த்தியின் ”தூரத்து மின்னல்” வெளியீட்டு நிகழ்வு துவங்கியது. நிகழ்வினை சிந்தனைச் செல்வர் ஸ்டாலின் போஸ் முன்னெடுத்துச் செல்ல நிகழ்வின் துவக்கமாக திருமதி கலையரசி செந்தில்குமார் தமிழ் வாழ்த்து பாட கவிதை நதி ந.வீ.விசயபாரதியின் வரவேற்பினையடுத்து நிகழ்விற்கு ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால் அவர்கள் முன்னிலை வகித்தார்.
 
மேடைப்பேச்சாளர் சொல்லருவி பெரி.சிவக்குமார் அவர்கள் நூலினை ஆய்வு செய்து பேசினார். நவரச்கலைஞர் ரெ.சோமசுந்தரம் முனைவர் சபா இராஜேந்திரன் சிங்கப்பூர் எழுத்தாளார் கழகம் செயலாளர் சுப.அருணாச்சலம் அவர்களின் வாழ்த்துரையை யடுத்து கவிமாலையின் வலைப்பக்கமான www.kavimalai.wordpress.com  எனும் தளத்தினை பலத்த கரவோசைக்கு இடையே புரவலர் ஜோதி மாணிக்கவாசகம் அவர்கள் துவக்கி வைத்து ஜந்து நிமிடம் சிறப்புரையாற்றினார். எல்லோரும் விரும்பும்படி நகைச்சுவை ததும்ப பேசினார். இது இவரின் கன்னிப்பேச்சு என்பது குறிப்பிடத்தக்கது.
 
Kavimaalaiபுதுமைத்தேனி மா.அன்பழகன் அவர்கள் ”தூரத்து மின்னல்” நூலினை வெளியிட MES Group of Companies  நிறுவனர் புரவலர் ஹாஜி அப்துல் ஜலீல் அவர்கள் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டர். இதனையடுத்து சமூகத் தலைவர்கள் பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் வர்த்தகர்கள் இலக்கிய ஆர்வளர்கள் பெண்களுடன் குழந்தைகளும் ”தூரத்தி மின்னலை” நூலாசிரியரின் பக்கத்தில் வந்து பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து நிகழ்விற்கு தலைமையேற்ற முனைவர் சொல்லின் செல்வர் இரத்தின வேங்கடேசன் சிறப்புரையாற்றினார். நிகழ்வின் இறுதியாக நூல் ஆசிரியர் ந.வீ.சத்தியமூர்த்தி ஏற்புரையாற்றினார். அரங்கம் நிரம்பிய நிகழ்வில் எழுத்தாளர்கள் கவிஞர்கள் வர்த்தகர்கள் இலக்கிய ஆர்வளர்கள் பெண்கள் குழந்தைகள் என்று பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
oooOooo
                         
 
பாண்டித்துரை அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |