நவம்பர் 10 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
அமெரிக்க மேட்டர்ஸ்
நையாண்டி
ஜன்னல் பார்வைகள்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
கட்டுரை
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நையாண்டி : அடேய்...
- சம்பத்
| Printable version | URL |

"அந்நியன் பார்த்தியா?"

"அதெல்லாம் நான் பார்க்கிறதில்லை. பார்த்தா கண்ணு எரியும்ப்பா"

"கண்ணு எரியுமா? என்னடா சொல்ற?"

"ஆனியனை பார்த்தா கண்ணு எரியாம பின்ன என்ன பண்ணுமாம்?"

"மடையா. கொஞ்ச நஞ்சம் இங்கிலீஷ் தெரிஞ்சுகிட்டு என் கிட்டேயே பீட்டர் விடறியா? நான் கேட்டது அந்நியன் படம்டா.  நம்ப ஷங்கர் எடுத்த படம்."

"ஓ அதுவா! பார்த்தேன். இப்பல்லாம் ஏண்டா ஷங்கர் நடிக்கிறதை விட்டுட்டாரு?"

"நடிக்கிறதை விட்டுட்டாரா? அவர் எப்படா நடிச்சாரு?"

"அதான்ப்பா. ஒரு தலை ராகத்துல அறிமுகமாகும் போது ரொம்ப நல்லா நடிச்சிருந்தாரே?"

"ஐயோ. அது வேற ஷங்கர்டா"

"கரெக்டா சொன்னேபா. எனக்கு அப்பவே சந்தேகம்."

"என்ன சந்தேகம்?"

"இது ஒரு தலை ராகம் ஷங்கர் இல்லைன்னு"

"அப்பாடா. இப்பவாச்சும் உன் மூளை வேலை செய்யுதே. எப்படிடா கண்டுபிடிச்சே?"

"பின்ன! ஒரு தலை ராகம் ஷங்கருக்குத்தான் பாடத் தெரியாதே. இந்த ஷங்கர் நல்லா பாடுறாரே?"

"ஐயையோ. என்னடா சொல்றே?"

"அதான்பா. அந்த படத்துல "ஓ சுகுமாரி"ன்னு ரொம்ப அருமையா பாடியிருக்கிறாரே? கேஸட்ல பேரெல்லாம் போட்டிருந்ததே."

"டேய் அது ஷங்கர் மகாதேவன்டா. பெரிய பாடகர்! நான் சொல்றது டைரக்டர் ஷங்கர்டா. அவர் வேற இவர் வேற."

"ஓ அப்படியா?"

"ஆமாம். இவர் தான் நம்ப எழுத்தாளர் சுஜாதாவை வசனம் எழுத வைச்சு இந்த படம் எடுத்திருக்காரு"

"என்னது? வசனம் சுஜாதாவா? பரவாயில்லைபா. ஒரு நடிகையா இருந்து விட்டு இப்ப வசனம் எழுத வந்திருக்காங்களா?"

"டேய் அது நடிகை சுஜாதாடா. நான் சொல்றது எழுத்தாளர் சுஜாதாடா. ரொம்ப காலமாவே சினிமாவுக்கு கதை வசனம் எழுதிகிட்டு வர்றாரு."

"ரொம்ப காலமாவா?"

"எனக்கு தெரிஞ்சு, ரொம்ப நாளைக்கு முன்ன வந்த படம், 'விக்ரம்'க்கு அவர்தான் வசனம் எழுதினாரு."

"என்னது விக்ரமுக்கு அவர் கதை வசனம் எழுதியிருக்கிறாரா? எந்த படத்துல? 'சேது'லியா?"

"டேய் முண்டம். நான் சொல்றது 'விக்ரம்'ங்கிற படம்டா. கமல் தயாரிச்ச படம். நீ சொல்ற படம் சேதுடா. பாலா எடுத்தது."

MadhuBala - Roja"எந்த பாலா? மதுபாலாவா?"

"இது வெறும் பாலாடா. நான் சொல்றது பாலாங்கிற டைரக்டர். நீ சொல்றது மதுபாலாங்கிற நடிகை."

"யாரு, இந்த ஜென்டில்மேன் படத்துல நடிச்சாங்களே, அவங்களா?"

"அப்பாடி இது ஒண்ணாவது கரெக்டா சொன்னியே. அவங்க தான்."

"ஜென்டில்மேனோட டைரக்டர் யாரு, ஷங்கர் தானே?"

"அப்பாடி இதுவும் கரெக்டுடா?"

"ஆனா ஏண்டா இப்பல்லாம் அவரு நடிக்கிறதை விட்டுட்டாரு? ஒரு தலை ராகத்துல நல்லா நடிச்சிருந்தாரே?"

"ஆண்டவா"

(மயக்கம் போட்டு விழுதல்)

oooOooo
சம்பத் அவர்களின் இதர படைப்புகள்.   நையாண்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |