நவம்பர் 17 2005
தராசு
வ..வ..வம்பு
உள்ளங்கையில் உலகம்
கட்டுரை
அடடே !!
வானவில்
நையாண்டி
திரைவிமர்சனம்
பேட்டி
தொடர்கள்
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
வானவில் : மூன்றாம் பரிசு பெற்ற பாரதி
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

bharathy subramanyaசென்னையிலே ஓர் இலக்கியச் சங்கத்தார் ஒரு கவிதைப் போட்டி வைத்தார்கள். முதற் பரிசாக முன்னூறு ரூபாய், இரண்டாம் பரிசாக இருநூறு ரூபாய், மூன்றாம் பரிசாக நூறு ரூபாய் என்று விளம்பரம் செய்தார்கள். புதுவை நண்பர்கள் பாரதியிடம் சென்று இந்தப் போட்டிக்கு ஒரு கவிதை எழுதித் தருமாறு தூண்ட்டினார்கள்.

பாரதியாரும், முதலில் மறுத்தவர், பிறகு ஒரு பாடலை எழுதி அனுப்பினார்.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே"

என்ற பாடலைத்தான் பாரதியார் எழுதி அனுப்பினார். சங்கத்தின் போட்டியிலே பாரதியின் கவிதை மூன்ராவது பரிசைப் பெற்றதாக அறிவித்தார்கள். பரிசு பெற்ற பாடல்களை வெளியிட்டுமிருந்தார்கள்.

புதுவை பாரதி அன்பர்களுக்கு ஒரே கோபம். முதல், இரண்டாம் பரிசுகளைப் பெற்ற கவிதைகளிலே தரமோ, இலக்கிய நயமோ, பொருள் வளமோ இல்லை என்பது அவர்கள் குறை. பாரதியின் பாடலின் முன் அவை நில்லா என்று அவர்கள் சொன்னார்கள்.

பாரதியின் மனம் சங்கடப்பட்டாலும், உலக நடப்பு அவருக்கு நன்கு தெரிந்தது.

"சங்கத்தோர், யாருக்கோ கொடுக்கத் தீர்மானித்துள்ள பரிசினை நேரிடையாகச் கொடுக்க முடியவில்லை என்று ஒரு போட்டி வைத்துக் கொடுத்துள்ளார்கள். நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள் ?" என்று நண்பர்களைத் தேற்றினார்.

பாரதியின் அன்பர்கள் அன்று சொன்னது போலவே, போட்டியில் முதல் இரண்டு பரிசுகளைப் பெற்ற பாடல்கள் இன்ரு இருக்குமிடம் தெரியவில்லை. பார்தியின் மூன்றாம் பரிசு பெற்ற பாடலோ தமிழ் மக்கள் மனதைக் கொள்ளை கொண்டு காலத்தால் அழியாத பாடலாய் வலம் வருகிறது.

oooOooo
அவர்களின் இதர படைப்புகள்.   வானவில் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |