Tamiloviam
நவம்பர் 22 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : கருப்புச் சட்டை
- சிதம்பரம் அருணாசலம்
| | Printable version | URL |

  

மனிதர்களின் நம்பிக்கைகளை
மதித்து நடக்காதது
மட்டுமின்றி, அதை
மிதித்துச் செல்லும்
ஆணவத்தின் அடையாளம்.

மதங்களின் வரிசைகளில்
ஒன்றை மட்டுமே
பதம் பார்க்கும்
ஒருதலைப் பட்சத்தின்
ஒட்டு மொத்தப் பிரதிநிதி.

இளைத்தவர்கள் வழிபடும்
இடங்களிலெல்லாம்
இடையூறுகளை விதைக்கும்
கொள்கை தெரியாத
கோழைத் தனத்தின் சுயரூபம்.

இறை நம்பிக்கை
இல்லாமல் போன பிறகு
ஆலயங்களில் வழிபாட்டை அலசி
மூக்கைத் தேவையில்லாமல் நுழைக்கும்
மூர்க்கத்தனத்தின் முழு வடிவம்.

oooOooo
                         
 
சிதம்பரம் அருணாசலம் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |