நவம்பர் 25 2004
தராசு
கார்ட்டூன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
மேட்ச் பிக்சிங்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
நையாண்டி
சமையல்
அறிவிப்பு
சிறுவர் பகுதி
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    சமையல் : சோயா
    - ஜெயந்தி நாராயணன்
    | Printable version |

    சோயா மலாய் ஸ்வீட் பூரி

    தேவையான பொருட்கள்

    மைதா - 1 / 2 கப்
    சோயாமாவு - 1/4 கப்
    பால்கோவா - 50கிராம் (சர்க்கரை போடாதது)
    சர்க்கரை -1/2க்ப்
    பால்     -1/2லிட்டர்
    குங்குமப்பூ-சிறிது
    திராட்சை, முந்திரி, பிஸ்தா- அலங்கரிக்க
    எண்ணை  - பொரித்தெடுக்க

    செய்முறை

    மைதாவை சலித்து எடுத்து அத்துடன் சோயாமாவு,பால்கோவா, சேர்த்து நன்கு மசித்து கலக்கவும். சிறிது பால்விட்டு கெட்டியாக கட்டியுல்லாமல் கலக்கவும். மாவை ஒரு மணி நேராம் ஊறவிடவும். கடாயில் 1/2 கப் தண்ணீர் விட்டு சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து பாகு தயாரிக்கவும். இளம் பாகு போதுமானது. மற்றொரு கடாயில் எண்ணை வைத்து காய்ந்ததும் கலந்துவைத்துள்ள கரண்டியால் எடுத்து எண்ணையில் விடவும். பூரி போல் பொரித்து எடுத்து சர்க்கரை பாகில் தோய்த்து எடுத்து தட்டில்
    வைத்து அதன் மேல் குங்குமப்பு, நட்ஸ் தூவி அலங்கரிக்கவும். இது நல்ல சத்தாண குழ்ந்தைகளுக்கு ஏற்ற இனிப்பு வகையாகும்.



    சோயாபீன்ஸ் Granules சப்ஜி
               
    தேவையான பொருட்கள்

    வெங்காயம்   - 2
    தக்காளி      - 2
    இஞ்சி       - 1 துண்டு
    பச்சைமிளகாய் - 2
    சோயாபீன்ஸ் கிரானுல்ஸ் - 150கிராம்
    கொத்துமல்லி  - 1/4கப் பொடியாகஅரிந்தது
    எண்ணை      - 3 டேபிள்ஸ்பூன்
    மஞ்சள்தூள்    - 1/2 டீஸ்பூன்
    மிளகாய்தூள்    - 1 டீஸ்பூன்
    ஜீரகம்         - 1 டீஸ்பூன்
    உப்பு          - தேவைகேற்ப
    பூண்டு விழுது   - 1 டேபிள்ஸ்பூன்  

    செய்முறை

    வெங்காயம் தோல்நீக்கி பொடியாக அரிந்துக்கொள்ளவும். இஞ்சி தோல் சீவி எடுத்து பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். தக்காளியை பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். சோயாபீன்ஸ் துகள்களை சிறிது நீர் விட்டு கழுவி எடுத்து வெதுவெதுப்பான நீரில் ஊறவிடவும், 1/2மணி நேரம் ஊறியதும் கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் ஜீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பச்சைமிளகாய் விழுது, பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கியபின் தக்காள் துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள்,மிளகாய்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு சோயா துகள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும். 10 நிமிடத்தில் நன்றாக வெந்து விடும். கடைசியாக கொத்துமல்லி தூவி இறக்கி வைத்து பரிமாற சுவையான சத்தாண சப்ஜி யாவருக்கும் ஏற்றது.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |