டிசம்பர் 01 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : சரித்திரத்தை சற்றே ?மாலாபப்ருதி
- ஷைலஜா [shylaja01@yahoo.com]
| Printable version | URL |


1875ஆம் வருடம்

பரோடா சமஸ்தானத்துக்கு அடுத்த வாரிசு இல்லை. பிரிட்டிஷ் அரசாங்கம், இறந்த மஹாராஜாவின் மனைவி, அவர் தன் விருப்பப்படி ஒரு பிள்ளையை தத்து எடுத்து கொள்ள அனுமதித்தது. ராணிக்கு உறவில் யாரையும் இளவரசனாக்க விருப்பம் இல்லை. பரோடாவை அடுத்த கிராமப் புறங்களிலிருந்து சிறுவர்களைவரச் செய்து அவர்களிலிருந்து ஓர் ஏழையை இளவரசனாக்க நிச்சயித்தார்.

போலீஸ், கிராமங்களை வளைத்துக் கல்வி அறிவில்லாத இளம்கிராமத்து இளைஞர்களைக் கொண்டுவந்து நிறைத்துவிட்டது. அரண்மனையில் மஹாராணி ஜமுனாபாய், அந்த கிராமத்துப் பிள்ளைகளுக்கு ஒரு பரிட்சை வைத்தார். அது ஒர் சாப்பாட்டுப் போட்டி!

கிராமத்துப் பையன்கள் உயர்ந்த உணவையோ சாப்பிடும் நாகரீக முறையையோ அறியாதவர்கள் அவர்களோடு தானும் அமர்ந்து உணவருந்தினாள் மஹாராணி.

ஒரே ஒர் இளைஞன் மட்டும் ராணி சாப்பிடுவதையே கூர்ந்து கவனித்தான். அதைப்போலவே தானும் சாப்பிடத்தொடங்கினான். அவன் வயது 12, பெயர் கோபால்ராவ்.

தோற்றத்தில் மற்றவர்களைபோல்தான் அநாகரீகமாக இருந்தான், ஆனால் உன்னிப்பாக கவனிப்பதில் வல்லவனாக இருந்தான். ராணியாரின் செயல்களைப் பார்த்து அதேபோல் நாகரீகமாய் சாப்பிட்டுமுடித்தான்.

அதனால் பரோடாவின் மஹாராஜாவாகும் பாக்கியம் அவனுக்குக் கிடைத்தது. முன்றாவது கெய்க்வார் சாயாஜி ராவ் என்ற பட்டப் பெயருடன் 64 வருடங்கள் பரோடாவை அரசாண்டான் இந்தப் பட்டிக்காட்டு ஏழை!


ராயல துர்க்கத்தை ஆண்ட பொம்மலநாயக்கர் தம்முடைய வீரர்களுக்கு பத்து நாட்களுக்கு ஒருமுறை ஊதியம் கொடுத்து வந்தார். யுத்த காலத்தில் இதை இவர் அவர்களுக்கு எப்படி அனுப்புவார் தெரியுமா?

600அடிகளுக்கு அப்பால் போர்க்களத்தில்  இருப்பார்கள் வீரர்கள். கோட்டை மீதுள்ள பீரங்கியினுள் நாணயங்கள் கொண்ட பையை வைத்து அதை வெடிக்கச் செய்வார், நாயக்கர். பணப்பை அவருடைய வீரர்கள் மத்தியில் போய் விழும்.

சம்பளப்பட்டுவாடா நடை பெறும்!

oooOooo
ஷைலஜா அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |