டிசம்பர் 16 2004
தராசு
கட்டுரை
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கட்டுரை
சமையல்
திரைவிமர்சனம்
கட்டுரை
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    சமையல் : சோயா - 4
    - ஜெயந்தி நாராயணன்
    | Printable version |

    சோயா கோப்தா

    தேவையான பொருட்கள்

    சோயாமாவு  - 200கிராம்
    பால்பவுடர்  - 10டீஸ்பூன்
    கான்ப்ளவர் மாவு - 4 டேபிள் ஸ்பூன்
    சமையல்சோடா - 1 சிட்டிகையளவு
    மைதா - 50கிராம்
    சமையல் எண்ணை - 200கிராம் (பொரித்து எடுக்க)
    உப்பு - 1/2டீஸ்பூன்


    கிரேவி தயாரிக்க

    தக்காளி - 4
    வெங்காயம் - 2
    மிளகாய்பொடி - 1 1/2 டீஸ்பூன்
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு- 5 பல்
    கொத்துமல்லி - 1/2 கப் பொடியாக அரிந்தது
    சீஸ்  - 1/4 கப் துருவியது
    தேங்காய்துருவல் - 6 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை : கோப்தா

    மைதாவை சலித்து எடுத்து அத்துடன் உப்பு சமையல் சோடா சேர்க்கவும்.இத்துடன் சோயாமாவு,கான்ப்ளவர்மாவு இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 10நிமிடம் ஊறியபின் கடாயில் எண்ணை வைத்து காய்ந்ததும் மாவை குலோப்ஜாமுன் போல் உருண்டை செய்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும், கிரேவி தயாரிக்கும் முறை:- வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்து கடாயில் சிறிது எண்ணை விட்டு காய்ந்ததும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.இஞி,பூண்டு,தேங்காய்துருவல் ஆகியவற்றை விழுதாக அரைத்து எடுத்து வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து 2நிமிடம் வதக்கவும். தக்காளியை துண்டுகளாக்கி மிக்ஸியில் சிறிது நீர் சேர்த்து பிறகு வடிகட்டி இத்துடன் சேர்த்து தேவையான உப்பு மற்றும் மிளகாய்தூள், ஜீரகத்தூள்,தனியாத்தூள் போட்டு நன்கு கொதித்ததும் இறக்கிவைத்து பொரித்த கோப்தா சேர்த்து சீஸ் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். இதை சப்பாத்தியுடன் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.



    சோயா ஸ்வீட் பால்ஸ்

    தேவையான பொருட்கள்

    சோயாமாவு - 1 கப்
    அரிசிமாவு - 2 டேபிள் ஸ்பூன்
    பால்பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்
    முந்திரி, பாதாம் பொடித்தது - 4 டேபிள் ஸ்பூன்
    நெய்,அல்லதுஎண்ணை - பொரித்தெடுக்க
    சர்க்கரை  - 250கிராம்
    ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்

     
    செய்முறை

    சோயாமாவுடன் அரிசிமாவு,பால்பவுடர்,முந்திரி பாதாம் பொடித்தது,நெய்யாவற்றையும் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும். பிறகு இதில் சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாக பிசைந்து சிறு,சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். கடாயில் எண்ணை வைத்து காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும். மற்றொரு கடாயில் சர்க்கரையுடன் 3/4க்ப் தண்ணீர் சேர்த்து பாகு தயாரித்துக்கொள்ளவும். பாகு 2 கம்பி அளவு வந்ததும் பொரித்த உருண்டைகளை சேர்த்து, ஏலக்காய்பொடி சேர்த்து 2 நிமிடம் கொதித்ததும் இறக்கிவைத்து விடவும். இந்த சோயா ஸ்வீட் பால்ஸ் மிகவும் சுவையாக் இருப்பதோடு குழந்தைகளுக்கு ஏற்ற சத்தாண ஸ்வீட் ஆகும். செய்து பாருங்கள் குழந்தைகள் குழியாக சுவைப்பார்கள்.

     

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |