டிசம்பர் 30 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
கவிதை
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
முத்தொள்ளாயிரம்
சமையல்
அறிவிப்பு
திரைவிமர்சனம்
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    சமையல் : சோயா - 6
    -
    | Printable version |

    ஸ்வீட் சோயா சமோசா

    தேவையான பொருட்கள்

    சோயா மாவு     - 100கிராம்
    கான்ப்ளக்ஸ்     - 50கிராம்
    பொட்டுகடலைமாவு- 100கிராம்
    கொப்பரைத்துருவல்- 2டேபிள்ஸ்பூன்
    மைதா          - 200கிராம்
    ஏலக்காய்பொடி   - 1/4டீஸ்பூன்
    சர்க்கரை        - 250கிராம்
    எண்ணை        - பொரித்தெடுக்க

    செய்முறை

    கடாயில் சோயாமாவை தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பொட்டுகடலை, கான்ப்ளேக்ஸ் இரண்டையும் தந்த்தனியாக லேசாக வறுத்து எடுத்து ஆறியதும் மிக்ஸியில் சிறிது கரகரப்பாக பொடிசெய்து கொள்ளவும். இத்துடன் சரிக்கரைபொடி,ஏலக்காய்பொடி,கொப்பரைத்துருவல் யாவற்றையும் சேர்த்து சிறிது எண்ணை விட்டு நன்றாக கலந்து கொள்ளவும். மைதாவை சலித்து எடுத்து சூடான எண்ணை சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளவும். மைதா கலவையை சிறுசிறு உருண்டைகளாக செய்து கொண்டு
    பிறகு அதை சிறுசிறு பூரிவடிவில் செய்து அதனுள் சலந்ஹ¤ வைத்துள்ள சோயா கலவையை 1 டேபிள் ஸ்பூன் வைத்து முக்கோணமாக மடித்து ஓரத்தை ஒட்டி பிறகு எண்ணை காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.இது மாலை நேரத்திற்கு குழந்தைகளுக்கு ஏற்ற ஸ்நாக்ஸ்.



    சோயா ஸ்வீட் பராத்தா

    தேவையான பொருட்கள்

    சோயாபீன்ஸ்     - 150கிராம் (ஊரவைத்து எடுத்தது)
    கேரட் துருவியது -  1/4கப்
    தேங்காய்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
    பொடித்தசர்க்கரை- 100கிராம்
    பொட்டுகடலைமாவு- 2டேபிள்ஸ்பூன்
    கோதுமைமாவு    - 2கப்
    உப்பு            - 1/4டீஸ்பூன்
    எண்ணை         - தேவைகேற்ப
    ஏலக்காய்பொடி    - 1/4டீஸ்பூன்

    செய்முறை

    கோதுமைமாவில் உப்பு,எண்ணை சேர்த்து நன்கு கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும். சோயபீன்ஸ்ஸை குக்கரில் வேகவைத்து எடுத்து ஆறியதும் மிக்ஸியில் 1 நிமிடம் அரைத்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் 1ஸ்பூன் எண்ணை விட்டு துருவிய கேரட்டை சேர்த்து லேசாக வதக்கவும். இத்துடன் அரைத்த சோயா,தேங்காய் துருவல், செர்த்து 2நிமிடம் வதக்கிய பின் ஏலப்பொடி, சர்க்கரை பொடித்தது,பொட்டுகடலைமாவு சேர்த்து நன்கு கலந்து இறக்கிவைத்து ஆறியதும் சிறு சிறு
    உருண்டிகளாக செய்து கொள்ளவும்.(அடுப்பை குறைத்து வைத்துக்கொள்ளவும்.)
     
    சப்பத்திமாவை உருண்டைகளாக செய்துகொண்டு முதலில் சிறிய பூரி வடிவில் இட்டு அதில் சோயா கலவையை வைத்து மூடி பிறகு சிறிது தடிமனான சப்பாத்தியாக இட்டு தோசைக்கல்லில் இருபுறமும் சிறிது எண்ணை விட்டு நன்கு வேகவைத்து எடுத்து சூடாக பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை . இதை குழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர டிபனாக செய்யலாம்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |