தமிழோவியம்
அறிவிப்பு : சிறப்பு ஆசிரியர்
-

தேன்கூடு - தமிழோவியம் இணைந்து நடத்திய போட்டியில் (ஜூன் 2006) முதல் மூன்று பரிசுகளை பெற்ற

1. இளவஞ்சி

2. ராமசந்திரன் உஷா

3. நிலா

ஆகியோருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அடுத்த வாரம் முதல், வாரம் ஒருவராய் தமிழோவியத்தின் சிறப்பு ஆசிரியர் பொறுப்பேற்று கலக்க உள்ளார்கள்.

"தமிழோவியம் வார இதழ்" மற்றும் "சிறப்பு ஆசிரியர்களின் சிறப்பு படைப்புகளை" படிக்க தவறாதீர்கள்.


ஜூலை 5 இதழில் ..


Illavanjiஇலக்கியம், கட்டுரைகள், கதைகள், நையாண்டி, மலரும் நினைவுகள் என்று பலவாறாக எழுதி கலக்கி வரும் இளவஞ்சி், கோவையைச் சேர்ந்தவர். பெங்களூரிலிருந்து வலை பதிந்து வருகிறார். நீளமான வாக்கியங்களுக்குப் பிரபலமானவர்! :-)

கவிதைகள் புனைபவர். கவிதைகளாகட்டும் கதைகள் கட்டுரைகளாகட்டும் ரசனையுடன் படைப்பவர். நெஞ்சில் ஆழமாகத் தைக்கும் வண்ணம், ஆத்மார்த்தமாக எழுதுவதோடு, ஒவ்வொரு இடுகையுடன் தொடர்புடைய புகைப்படங்களையோ ஓவியங்களையோ இணைப்பது இவரது சிறப்பு.

கல்யாணம் ஆகப்போகிற ஆண்களுக்கு என்ற இவரது தொடர் மிகவும் ரசிக்கப்பட்ட ஒன்று. இந்தத் தொடரில் இதுவரை ஆறு பதிவுகள் வந்திருக்கின்றன. கல்யாணம் ஆனவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள விடயங்கள் நிறைய.

தனித்துவமானவன், உங்களைப் போலவே...!

(நன்றி : தேன்கூடு)

Copyright © 2005 Tamiloviam.com - Authors