தமிழோவியம்
கட்டுரை : ஈராக்கும் அமெரிக்காவும்
- மீனா

Egyptian diplomat Momdoh Kotb freed in Iraq.ஈராக்கில் சமீப காலமாக நடந்து வரும் தீவிரவாதிகளின் கடத்தல் சம்பவங்களில் தொடர்சியாக வெற்றி பெற்று வருவது தீவிரவாதிகளோ என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. தீவிரவாதிகளின் வேண்டுகோளை ஏற்காத நாடுகளைச் சேர்ந்த கடத்தப்பட்ட பிரஜைகள் ஈவுஇரக்கமின்றி கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதே நேரம் தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்ற நாட்டின் பிரஜையை பத்திரமாக விடுவித்துள்ளார்கள். ஆக ஈராக்கில் ராணுவ, மக்கள் ஆட்சிக்கு பதில் தீவிரவாதிகளின் ஆட்சிதான் நடைபெற்றுவருகிறது என்பதை உறுதி செய்யும் விதமாகவே இவையெல்ல¡ம் தோன்றுகின்றன.

ஈராக் நாட்டின் போலீசோ ராணுவமோ இன்னும் வளர்ச்சி பெறாத நிலையில் அந்நாட்டு மக்களையும், அங்கே தங்கியிருக்கும் அயல் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை மொத்தமும் அமெரிக்க கூட்டணிப் படையினரையேச் சேரும். ஆனால் அவர்களால் கடத்தப்பட்ட ஒருவரைக்கூடக் காப்பாற்றமுடியவில்லை என்பது வேதனை மற்றும் வெட்கமான விஷயமாகும். இந்நிலையில் அமெரிக்கா தொடர்ந்து "உலக அளவில் தீவி

ரவாதிகளை ஒழிப்பதே தங்கள் தலையாய கடமை!!" என்று பேசிவருவது வேடிக்கையாக இருக்கிறது. அமெரிக்காவின் இத்தகைய போக்கால் தான் உலக அளவில் தீவிரவாதம் பெருகியிருக்கிறது என்ற ஒரு சாராரின் வாதத்தில் பொதிந்திருக்கும் உண்மை அனைவரது கவனத்தையும் கவர ஆரம்பித்திருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ராணுவ - தீவிரவாதிகளின் மோதலில் கணக்கில்லாமல் கொல்லப்படுவது அப்பாவி மக்கள்தான். இதைப் பற்றிய கவலை யாருக்கும் இல்லை. இப்படியெல்லாம் வெறியாட்டம் ஆடலாம் என்று தீவிரவாதிகளுக்கு எந்த மதத்தில் சொல்லியிருக்கிறார்களோ தெரியவில்லை. அதே போல "உங்களைக் காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம்!!" என்று ஜம்பமாக மார்தட்டிக்கொண்ட அமெரிக்க கூட்டணிப் படையினர் அப்பாவிகளைக் காப்ப¡ற்ற எந்த முயற்சியும் செய்யாமல் வாயை மூடிக் கொண்டு மவுனமாக இருக்க யார் கட்டளை இட்டார்களோ தெரியவில்லை.

தீவிரவாதத்தால் உலகில் ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதை உலக அளவில் அனைத்து தீவிரவாதிகளும் உணரும் காலத்தையும், அதிகார மற்றும் பணபலத்தினால் மட்டும் உலக நாடுகள் அனைத்தையும் தங்கள் பிடிக்குள் கொண்டு வரமுடியாது என்பதை வல்லரசு நாடுகளும் உணரும் வே¨ளயையும் இறைவன் தான் சீக்கிரம் ஏற்படுத்த வேண்டும். அதுவரை இத்தகைய கொடூரச் செயல்களைப் பார்த்து கண்ணீர் வடிக்க மட்டுமே நம்மால் முடியும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors