தமிழோவியம்
பெண்ணோவியம் : கடலைமாவு சாக்லேட் பால் கேக்
- மீனா

கடலைமாவு சாக்லேட் பால் கேக்

தேவையானவை

பால் பவுடர் - 3 கப்
கடலை மாவு - 1 கப்
நெய் - 1 கப்
சர்க்கரை - 3 கப்
நெய் - கால் கப்
சாக்லேட் பவுடர் - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை

நெய்யில் கடலை மாவை நன்றாக வறுக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, பால் பவுடரை சேர்க்கவும். சர்க்கரையை சிறிது நீ¡¢ல் நல்ல கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். தேவைப் படும்போது, நெய் சேர்க்கவும். கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சர்க்கரை பாகில் சேர்க்க வேண்டும். வறுத்து வைத்துள்ள கடலை மாவில் இந்தப் பாகை சேர்த்து நன்றாகக் கிளறவும். நெய் தடவிய தட்டில் பாதியளவு கலவையை போட்டு விடவும். மீதமுள்ள மாவில் சாக்லேட் பவுடரை கலந்து இந்த கலவையை முதல் லேயா¢ன் மேல் கொட்டி நன்கு தடவி விட்டு, துண்டுகள் போடவும்.  சுவையான கடலைமாவு சாக்லேட் பால் கேக் ரெடி!!கொத்தமல்லி சாதம்

தேவையானவை

பச்சா¢சி - அரை கிலோ
கொத்தமல்லி - 2 கட்டு
தேங்காய் - 1 மூடி
பச்சை மிளகாய் - 6
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 ஸ்பூன்
நெய் - 3 ஸ்பூன்
முந்தி¡¢ - 50 கிராம்
உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை

பச்சை கொத்தமல்லியை தண்ணீ¡¢ல் நன்றாக அலம்பி இலைகளை மட்டும் எடுக்கவும். தேங்காயை துருவி, பச்சை மிளகாய் கொத்தமல்லியுடன் மிக்சியில் போட்டு மையாக அரைக்கவும். அ¡¢சியை களைந்து வேக வைத்து பொலபொல என்று உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுதை கொட்டி வதக்கவும். பச்சை மிளகாய் வாசனை போகும் வரை வதக்கி உப்பு சேர்த்து சாதத்தில் கொட்டிக் கிளறவும். வாணலியில் நெய் ஊற்றி சூடேற்றி முந்தி¡¢யை பாதியாக உடைத்து நெய்யில் பொறித்து சாதத்தில் சேர்க்கவும். அருமையான கொத்தமல்லி சாதம் ரெடி. தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட்டால் - சூப்பர் தான்!!


 

Copyright © 2005 Tamiloviam.com - Authors