தமிழோவியம்
அறிவிப்பு : ஒரு வேண்டுகோள்
-

நண்பர்களே,

Muthuramanதமிழோவியம் குடும்பத்தின் நண்பரும், எழுத்தாளருமான முத்துராமன் கடந்த இரண்டு மாதங்களாக கிட்னி பழுதடைந்து கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் தற்போது போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டயாலிஸிஸ் சிகிச்சை எடுத்துவருகிறார்.  மேலும் நான்கைந்து மாதங்கள் அந்த சிகிச்சையை தொடர வேண்டியது அவசியம். அதற்கு மாதம் ஆகும் செலவு தோராயமாக ரூ. 16,000.

இன்னும் ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்குள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருக்கும். அதற்காகக் கணக்கிடப்பட்டுள்ள செலவு 4 முதல் 6 லட்சம். அறுவை சிகிச்சைக்காக டிரஸ்ட்டுகள் மூலம் உதவித் தொகை பெற முத்துராமன் முயன்று வருகிறார். தங்களுக்கு அதுபோல் ஏதாவது டிரஸ்ட்டுகளில் தொடர்பு இருந்தால் அவருக்கு உதவுங்கள்.

முதல் கட்டமாக, முத்துராமன் எடுத்துவரும் டயாலிஸிஸ் சிகிச்சைக்காக, ஒரு தொகை கொடுத்து உதவினால் அவருக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த மாத இறுதிக்குள் சுமார் 50,000 வரை திரட்ட முடிந்தால் அடுத்த மூன்று மாதங்களுக்கு அவரது மருத்துவ செலவுகளுக்கு உதவும் என்று நினைக்கிறோம்.

முத்துராமனுக்கு உதவி செய்ய விரும்புவோர் MUTHURAMAN. M என்ற பெயரில் செக் அல்லது டிடியை கீழுள்ள முகவரிக்கு அனுப்பலாம்

எம். முத்துராமன்,

C/o எம். கோமதி,

7/551, ஜெ.ஜெ. நகர் மேற்கு,
ஏரிதிட்டம் வேலம்மாள் பள்ளி அருகில்,
முகப்பேர், சென்னை - 6000 037.
செல் - 96000 96416.

ராம்கி - ramkij@gmail.com  - cell 98414 89907

முகில் - mugil.siva@gmail.com

முத்துராமனின் படைப்புகள்

http://www.tamiloviam.com/unicode/authorpage.asp?authorID=mmuthuraman

http://www.tamiloviam.com/ebook/html/bookdetails.asp?BookId=TB00007&Cat=TC00002

http://books.dinamalar.com/AuthorBooks.aspx?id=910 

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors