தமிழோவியம்
கட்டுரை : பா.ஜ.க புதிய தலைவர்
- திருமலை கோளுந்து

வெற்றிகளை நோக்கி கட்சியை அழைத்துச் செல்வதே எனது நோக்கம் என பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக 11 மாதம் பதவி வகித்த, ராஜ்நாத் சிங் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மீண்டும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Raj Nath Singhகாங்கிரஸ் கட்சிக்கு மாற்று கட்சியாக பாரதீய ஜனதா கட்சி இருந்து வருகிறது. இந்திய அளவில் எதிர்க் கட்சியாக செயல்பட்டு வரும், பாரதீய ஜனதா கட்சிக்கு ஏற்ற தலைவராக ராஜ்நாத் சிங் விளங்கி வருகிறார். இந்திய அரசியல் கட்சிகளில் மதத்தை முன்வைத்து வளர்ந்த கட்சி பாரதீயஜனதா கட்சி. 1984ம் ஆண்டு இரண்டு  எம்.பிக்களோடு நாடாளுமன்றத்திற்குள் சென்றது. பின் 1999ம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு கட்சி வளர்ந்து இருக்கிறதென்றால் அதற்கு அத்வானி, வாஜ்பாய் போன்ற தலைவர்கள்  தான் முதல் காரணம். பாரதீய ஜனதா கட்சியின் அரசியல் வழிகாட்டிகளான தீனதயாள் உபாத்யாயா கனவுகளை நிறைவேற்ற பாடுபட்டுக் வருவதாக இக்கட்சியினர் சொல்கின்றனர். தற்பொழுது தலைவராக தேர்வு பெற்றுள்ள ராஜ்நாத் சிங் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 12 மாநகராட்சிகளில் 8 மாநகராட்சியை கைபற்றி பாரதீய ஜனதா கட்சி சாதனை புரிந்தது. அதே போல் பீகார் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல், ஜார்க்கண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றது. பாரதீய ஜனதாவின் இந்த வெற்றிகளுக்கு தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் தான் காரணம் என அக்கட்சியினர் நம்புகின்றனர். இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கின்ற உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்ராஞ்சல் மாநில சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என நம்பப்படுகிறது. இந்தியாவில் பெரிய மாநிலமான உ.பியில் இந்த முறை பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்க ராஜ்நாத் சிங்கின் பிரச்சாரம் பெரிதும் உதவும். அப்படி உத்திரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்து விட்டால் இன்று மத்தியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி ஆட்டம் கண்பதோடு, மத்தியில் கூட்டணியிலும் பெரும் மாற்றங்கள் வரும் என அரசியல் வல்லுனர்கள் சொல்கின்றனர். அதனால் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராஜ்நாத் சிங்கிற்கு பெரிய பொறுப்பு காத்திருப்பதாக அக்கட்சியினர் நம்புகின்றனர். அவருக்கு உறுதுனையாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இருப்பார்கள் என சொல்லப்படுகிறது.

நாட்டில் நடப்பது காங்கிரஸ் கூட்டணி அரசு என்றாலும் உண்மையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் ஆட்சியை நடத்துகின்றன. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி பத்திரிக்கையில் எழுதுகின்ற கோரிக்கைகளை மறுநாளே நிறைவேற்றி வைக்கப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைத்தால் அதற்கு கம்ய10னிஸ்ட் கட்சியினரின் ஒப்புதலை பெற்றத் தான் நிறைவேற்றும் அவல நிலை இன்றைய மத்திய அரசில் இருக்கிறது. அதிகாரம் சோனியா கையில் இருக்கிறதா? பிரதமர் மன்மோகன் சிங் கையில் இருக்கிறதா? அல்லது ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கின்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் இருக்கிறதா என்ற குழப்ப நிலை நாட்டில் நிலவுகிறது. இதற்கான தீர்வு விரைவில் கிடைத்துவிடும்.

கடந்த 12 ஆண்டுகள் முன்பு முகவரி தெரியாமல், காணமல் போன காங்கிரஸ் கட்சி சோனியா மற்றும் அவரது வாரிசுகளின் முககவர்ச்சி அரசியலால் இன்று ஆட்சி நடத்தி வருகின்றனர். அந்த மாய வலையில் இருந்து இந்திய மக்களை மீட்டாலே, பாரதீய ஜனதா கட்சி அடுத்த முறை ஆட்சியை பிடித்து விடும். மதச்சார்பின்மை என்பதை வாக்குவங்கியாக சிறுபான்மை இனத்தவரை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வருகிறது. அந்த ஓட்டு வங்கியை உடைத்து எறிவது தான் எங்களின் முதன்மையான நோக்கம். அந்த நோக்கத்தை அடைந்ததால் தான் உ.பி.யில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சிறுபான்மை ஓட்டுக்கள் பாரதீய ஜனதாவிற்கு கிடைத்துள்ளன. மேலும் சிறுபான்மையின ஓட்டுக்களை பெற ராஜ்நாத் சிங்கின் தலைமை தான் சரியாக இருக்கும் என்கிறார் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த இல. கணேசன் 

ஒருவருக்கொருவர் மதிப்பு, மரியாதை, நம்பிக்கை, அடுத்தவர் கருத்தை மதிப்பது ஆகிய கொள்கைகளை இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பின் பற்றுகின்றன. ஆனால் இதனை எதுவுமே பின்பற்றாத கட்சி எது என்றால் அது பாரதீய ஜனதா கட்சியாகத் தான் இருக்கும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் படு தோல்வி, மகாரா~;டிரா, தமிழ்நாடு, கேரளா மாநில சட்டமன்றத் தேர்தலில் மரண அடி வாங்கிக் கொண்ட பாரதீய ஜனதா கட்சி இன்று நாங்கள் தான் அடுத்து ஆட்சியைப் பிடிப்போம் என சொல்லிக் கொண்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் தொழில்சலைகள் கிடையாது. அரசியல் பண்ணுவது தான் அங்கு முழு நேரத் தொழில். உ.பி.யில் பொழுது போக்குவதற்கு எதுவுமே கிடையாது. அரசியல் ஒன்று தான் அங்கு சிறந்த பொழுது போக்கு என்ற விமர்சனம் பத்திரிக்கைகளால் சொல்லப்படுவதுண்டு. அப்படிப்பட்ட மாநிலத்தில் முதல்வராக இருந்து குப்பை கொட்டிய ராஜ்நாத் சிங், இன்று தனது புகழைப் பரப்ப அகில இந்திய அளவில் பாரதீய ஜனதா கட்சிக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரதீய ஜனதா கட்சி தற்பொழுது கோ~;டி பூசலில் சிக்கித் தவிக்கிறது. ஒரு பக்கம் அத்வானி இருக்கிறார். மற்றொரு புறம் வாஜ்பாய் தலைமையில் ஒரு கோ~;டி செயல்படுகிறது. ய~;வந்த் சின்கா, ஜஸ்வந்த் சிங், சு~;மா சுவராஜ் போன்றவர்கள் தங்களுக்கு என்று சில கோ~;டிகளை உருவாக்கி, அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கோ~;டிகளின் அடாவடிகளை தாங்கிக் கொள்ளாமல் உமாபாரதி பாரதீய ஜனதாவை விட்டு வெளியேறி தனிக்கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். உத்திரப்பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாரதீய ஜனதா 8 மாநகராட்சிகளை கைப்பற்றியது உண்மை தான். அதற்காக அடுத்து அவர்கள் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பது எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. வரும் உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது கூட்டணியால் ஆட்சியைப் பிடிப்பது உறுதி  என்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிறுபான்மை பிரிவு செயலாளரான சம்சுதீன்.

அரசியலில் வெற்றிகளும், தோல்விகளும் மாறி மாறி வரும் என்பது மாற்றப்படாத இலக்கணமாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளாக தோல்விகளையே சந்தித்து வந்த பாரதீய ஜனதா கட்சி தற்பொழுது வெற்றிகளை பெறத் துவங்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உத்திரப்பிரதேசத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட (அப்பொழுது முதல்வராக இருந்த) ராஜ்நாத் சிங் இன்று அம்மாநில மக்களால் கொண்டாடப்படும் தலைவராக மாறி இருக்கிறார். இந்த முறை உ.பியில் பாரதீய ஜனதா ஆட்சியைப்பிடிக்கும் என பத்திரிக்கைகள் எழுதத் துவங்கி விட்டன. இந்தியாவில் பெரிய மாநிலமான உ.பியில் எந்த அரசியல் மாற்றம் ஏற்பட்டாலும் அது மத்திய ஆட்சியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். கடந்த முறை இம்மாநிலத்தில் பா.ஜ. சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த உடன் மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியும் ஆட்டம் காணத் துவங்கியது. அதே போன்ற நிலை இன்று காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படலாம் என அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். ராஜ்நாத் சிங் பாரதீய ஜனதா கட்சி தலைவராக முதலில் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து முகமது ஜின்னா பற்றிய அத்வானி சொன்ன கருத்து, பிரமோத் மகாஜன் மரணம், உமாபாரதி தனிக் கட்சி என பல சவால்களை சந்திக்க நேர்ந்தது. தனி நபர்களை விட கட்சியே முக்கியம் என அப்பொழுது சொல்லி சில அதிரடி நடவடிக்கைகளை ராஜ்நாத் சிங் மேற்கொண்டார். அது சிறந்த பலனையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதே போல் ராஜ்நாத் சிங் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னனி போன்ற மத அமைப்புக்களின் ஆலோசனைகளின் பெயரிலேயே செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. அனைத்து விமர்சனத்தையும் தாண்டி பாரதீய ஜனதா கட்சியை ஆட்சிப்பீடத்தில் ராஜ்நாத் சிங் அமர வைப்பாரா?  தோல்வி அடைவாரா என்பதை 2007ம் ஆண்டில் தெரிந்து கொள்ளலாம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors