தமிழோவியம் (http://www.tamiloviam.com)
- 11190904 ஹாலிவுட் அழைக்கிறது இது நாள் வரையிலும் பல கதாநாயக கதாநாயகிகள் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சில சொற்பமான தொழில்நுட்ப கலைஞர்களுக்குதான் மீடியாவில அதிகம் முக்கியத்துவம் கிடைக்குது! எப்படிப்பட்ட டெக்னாலஜி முன்னேற்றங்கள் நடந்துக்கொண்டிருக்கின்றன என்பது பற்றிய செய்திகள் ரொம்ப குறைவாகவே வெளிப்படுத்தப்படுகிறது...! ஆயில்யன்

Hollywood Bookஉலகமயமாதல் - ரொம்ப சீக்கிரத்துலயே ஒரு சின்ன வட்டத்துக்குள்ள, எல்லா நாடுகளும் ரொம்ப கிட்டத்துல வந்துட்ட மாதிரி ஒரு நினைப்பு அல்லது ரொம்ப சீக்கிரமே ஒரு நாட்டிலேர்ந்து டிராவல் செஞ்சு இன்னொரு நாட்டுக்கு போயிட முடியும்ங்கற நம்பிக்கை இப்ப  எல்லார் மனதிலும் வந்திருப்பது உண்மை! சில தொழில்நுட்ப வளர்ச்சிகளில் எங்கேயும் அலைஞ்சு திரிஞ்சு கூட நீங்க போகவேண்டாம் சிம்பிளா வீட்ல உக்காந்துக்கிட்டே கண்ட்ரோல் செய்யமுடியும்ங்கற நிலைமையும் வந்திருச்சு  அறிவியல் தொழில்நுட்பத்தோட வளர்ச்சி! இது போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளை பத்தி நமக்கு அதிகம் இண்ட்ரோ கொடுத்த ஃபீல்டு அப்படின்னு சொல்லணும்ன்னா அது கண்டிப்பா சினிமாத்துறைதான்!

சினிமாத்துறையில பல்வேறு விதமான படத்தயாரிப்பு பணிகளில் நாம தனித்தனியே கவனம் எடுத்துக்கிட்டு பார்த்தோம்ன்னா கொஞ்சம் பிரமிப்பாத்தான் இருக்கும்!

இது நாள் வரையிலும் பல கதாநாயக கதாநாயகிகள் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சில சொற்பமான தொழில்நுட்ப கலைஞர்களுக்குதான் மீடியாவில  அதிகம் முக்கியத்துவம் கிடைக்குது! எப்படிப்பட்ட டெக்னாலஜி முன்னேற்றங்கள் நடந்துக்கொண்டிருக்கின்றன என்பது பற்றிய செய்திகள் ரொம்ப குறைவாகவே வெளிப்படுத்தப்படுகிறது...!

நம்ம கோலிவுட் நிலைமை இப்படியிருக்க..! இதை விட பல ஆண்டுகள் இடைவெளியில் முன்னேறிக்கொண்டிருக்கும் உலகின் திரைக்களம் ஹாலிவுட்டில் என்னவிதமான தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன எப்படிப்பட்ட விசயங்களில் அது மற்ற நாடுகளின் திரைத்துறையினரை இழுக்குது என்பது போன்ற சுவாரஸ்யமும் தரும் செய்திகளை, விசயங்களினை அறிந்துகொள்வது என்பது நமக்கெல்லாம் கொஞ்சம் கஷ்டமான விசயம்தான்! அது பற்றிய செய்திகளை கொடுப்பதற்கு மீடியாவுக்கு அத்தனை ஆர்வம் கிடையாது - கிசுகிசுக்களுக்கு இருக்கின்ற அளவு ஆர்வம் கிடையாது!

எந்தவொரு துறையிலும் மாற்றங்கள் அல்லது முன்னேற்றங்கள் தொடர்பான தகவல்களை பெறவேண்டும் என்றாலும் ஆசிரியர்த்தனமான ஆட்களை விட்டு விலகி நட்பு ரீதியிலான நபர்களின் உதவி கண்டிப்பாக வேண்டும் ஒரு நண்பராய் நாலு விசயங்களை புதிதாய் சொல்லிக்கொடுப்பதில் - கொடுக்கல் வாங்கலில் - எவ்விதமான தொய்வும் சிக்கல்களும் இருக்காது எளிதில் புரிபட்டுவிடும்!

குறிப்பிட்ட துறை சார்ந்திருப்பவரிடம் அத்துறை சம்பந்தமாக விவரம் கேட்டால் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளாகவே அவர்களால் எடுத்துரைக்க இயலும்! அதையும் மீறி இனி வரப்போகும் தொழில்நுட்ப மாற்றங்கள் மற்ற துறைகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதிப்புகள் பற்றி கூறுவது என்பது முழுக்க முழுக்க துறை சார்ந்த ஆர்வமும் தொழில்நுட்ப மாற்றங்களினை கண்காணித்து கொண்டிருக்ககூடிய ஆர்வமும் கண்டிப்பாய் வரப்பெற்றிருக்கவேண்டும்!  அப்படிப்பட்ட ஆர்வத்துடன் சினிமா பத்தி எழுதப்பட்ட புத்தகம்  - ஹாலிவுட் அழைக்கிறது என்று கூப்பிட்டு வியந்து பார்த்திருந்த விசயங்களை வெகு எளிதாக எடுத்துரைக்கும் ஆசிரியரின் ப்ரெண்ட்லி அப்ரோச் விறுவிறுப்பு மட்டுமின்றி சில பல வரிகளில் சிரித்துக்கொண்டே, படித்துக்கொண்டே பயணிக்கவைக்கிறது!

ஆசிரியரின் பெயரினை பார்த்து ஏற்பட்ட ஆர்வமே ஹாலிவுட் அழைப்பதை கிழக்கில் இருந்து எடுத்து மத்திய கிழக்கு நாட்டுக்கு கொண்டு வர காரணம்! பிறந்தக பெருமையினை எத்தனன முறை படித்திருப்பேன் என்பது ஞாபகம் இல்லை!

ஹாலிவுட் அப்படின்னா என்ன - முதலில் ஒரு திரைப்படகம்பெனி என்ற அடையாளம் பிறகு ஒரு மலையில் அதன் பெயர் ஒட்டியிருக்கும் அவ்ளவுதான் என்ற கேள்வி ஞானம் பிறகு எதோவொரு ஊர் அதன் பெயரினை ஹாலிவுட் என்று சூட்டியிருக்கிறார்கள் என்பது மாதிரியான ஒரு அடையாளம் மட்டுமே எனக்குள் - உங்களுக்கும் கூட - இருந்திருக்ககூடும் !

ஸ்டூடியோக்கள் ஸ்டூடியோக்கள் சார்ந்த மற்ற துறைகள் இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நிறுவப்பட்ட ஒரு ஷாப்பிங் செண்டர்தான் ஹாலிவுட் இங்க காசும் கதையும் கொண்டு வந்தா (கதையும் கூட அங்கேயே ரெடிமேட் உண்டு) படத்தை எடுத்து பிலிம் கையில கொடுப்பாங்க! அதை நீங்க எங்க வேணும்னாலும் போய் ரீலிஸ் செஞ்சுக்கிடலாம் அதான் ஹாலிவுட்! நம்ம ஊரு ஏவிஎம் ஸ்டூடியோவை இன்னும் கொஞ்சம் என்லார்ஜ் செஞ்சு சென்னை அளவுக்கு வைச்சு ஃபீல் பண்ணி பாருங்க !

புரொடெக்‌ஷனுக்குன்னு ஒரு படம் வந்தபிறகு ஷுட்டிங்க்ல முதல் சீனுக்கு க்ளாப் அடிச்ச பிறகு எண்ட் கார்டூ போடுற சீன் வரைக்கும் பர்பெக்டா வரணும்ன்னு பணியாற்றும் நபர்கள் எத்தனை ஆயிரம் பேர் எத்தனை விதமான அவஸ்தைகளை சந்திக்கிறார்கள் என்பது பற்றிய ஒரு முழுமையான விபரங்களை தரும் வேலையினை ஆசிரியர் செய்ய வில்லையென்றாலும் அதை சில வரிகளிலேயே உணர்த்துவதில் ஜெயித்திருக்கிறார்!

திரைப்பட புரொட்யூசர்கள் என்பவர்கள் கை நிறைய பணத்துடன் வந்து  படம் முடித்து கையில் காசுடனோ அல்லது தலையில் துண்டுடனோ போகும் காரெக்டர்களாக வே நமக்கு தெரிந்த அல்லது செய்திகளால் அறியப்பட்டிருக்கும் தயாரிப்பளர்களை போலன்றி கம்யூனிகேஷன் சானல்களில் நிறைய பேரிடம் தொடர்பு கொண்டு ஈசியாக தயாரிப்பளாராக நல்ல வருமானம் பெறக்கூடியவராக செய்யகூடிய விவரங்கள் ஆச்சர்யப்படுத்துக்கின்றன! (நல்ல ஜாப் கிடைச்சா எப்புடி இருக்கும்ன்னு ஒரு சபலம் தட்டுது!)

பண விசயங்களினை பொறுத்தவரையில் பணம் வாங்கவே இல்லை என்று சத்தியம் அடித்து சாதிக்கும் முயற்சிகளோ,அய்யோ என்னை முற்றிலும் ஏமாற்றிவிட்டார்களோ என்ற தாணு தனமான பேட்டிகளுக்கு வேலையே இல்லாத வகையில் இயங்கும் ஷேர்மார்கெட் டைப் ஹாலிவுட் பிசினஸ் !

பிரம்மாண்டங்களின் மொத்த வடிவமாய் நமக்கு காட்சி அளித்திக்கொண்டிருக்கும் ஹாலிவுட் எவ்வளவு பெரிய பிரம்மாண்டங்களுக்கும் தம்மை வருத்திக்கொண்டு அல்லது ஜஸ்ட் லைக் தட் போற போக்கில் பிசினஸ் செய்து கொண்டு போகும் பல்வேறு துறைகளை பற்றி அதனால் ஹாலிவுட் அடையும் பலன்கள், ஹாலிவுட்டால் தலைமுறைகளுக்கும்  சேர்த்து வைக்கப்படும் பணங்கள் பெறும் வழிகளை பற்றி கை காட்டியாய் தன் தொழில் சார்ந்த விசயங்களை மேலும் தொடரும் தொழில்நுட்பங்கள் பற்றிய செய்திகளோடு கூறி அழைத்திருக்கிறார் ஹாலிவுட்டுக்கு ஆசிரியர்!

உடனே ஓடியாங்க ஓடியாங்க என்ற ரீதியிலான ஆர்ப்பரிப்பெல்லாம் இல்லை!மெல்லவே மேன்மை பெறுவீர்க்ள் புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும், தகவல்களாய் காணப்படும் தளங்களில் உங்களை நீங்களே தொழில்நுட்ப வளர்ச்சியில் மென்மையாக செதுக்கிக்கொண்டால்...!

ஹாலிவுட் பற்றிய  தகவல் பரிமாற்றத்திலும்,
ஹாலிவுட்டை பற்ற, தன்னம்பிக்கை கொடுக்கும் விசயங்களிலும் நிச்சயம் ஆசிரியருக்கு வெற்றியே!

ஹாலிவுட் அழைக்கவும் கூடும் உங்களை...
ஹாலிவுட்டை அழைக்கவும் முடியும் உங்களால்....

http://nhm.in/shop/978-81-8368-096-7.html

நூல் அறிமுகம் nov1909 New Y N Hollywood Azhaikirathu Y

Copyright © 2005 Tamiloviam.com - Authors