தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்) [முகம்மதின் மனநலம் குறித்து டாக்டர்.சோமர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் (1)]
- நேச குமார்

வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை

முகம்மதின் மனநலம் குறித்து டாக்டர்.சோமர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் (1)

முகம்மது முதன்முதலாக தமது கருத்துக்களை வெளியிடத் துவங்கிய போதே, அவரது நபித்துவ-மனப்பிறழ்வுக்கான மனோரீதியான காரணங்களை ஆய முற்பட்டு, அவரது மனநலம் குறித்த ஐயங்களை சுற்றியிருந்தோர் வெளிப்படுத்தத் துவங்கினர். இம்மாதிரி வெளிப்படுத்தப் பட்ட கருத்துக்களுள், கிறிஸ்துவ மத-அரசியலார் தெரிவித்த ஒரு அபிப்ராயமானது முகம்மது வலிப்பு நோய்க்கு ஆட்பட்டவர் என்பது. இதற்கு ஆதாரமாக, அவருக்கு வாயில் நுரை தள்ளி, தரையில் விழுந்து உதைத்துக் கொண்டார் என்று இஸ்லாமிய அறிஞர்கள் ஆய்ந்து, பதிவு செய்து விட்டுப் போயுள்ள சம்பவங்களை காண்பிக்கின்றனர், இவர்கள். இது ஒரு குறிப்பிடத் தக்க யூகமே. ஆனால், இம்மாதிரி வலிப்பு நோய்க்கு ஆட்பட்டவர்கள் தமக்கு கடவுளால் அனுப்பப்பட்ட ஆவிகள் கண்ணுக்குத் தெரிவதாகவும், காதில் குரல்கள் கேட்பதாகவும், பிம்பங்கள் கண் முன் தோன்றுவதாகவும் நம்பி, இந்த மூடநம்பிக்கைகளை வாழ்நாள் முழுக்க தீவிரமாக நம்பி செயல்படுவதில்லை என்பதால், இந்த யூகம் முழுவதும் சரியென்று சொல்வதிற்கில்லை. ஆனால், மனோதத்துவம் மிகவும் முன்னேறிவிட்ட இந்தக் காலத்தில் இதை விடச் சிறந்த பல விளக்கங்களை மனோதத்துவ நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.

டாக்டர்.ஹெர்மன் சோமர்ஸ் என்ற ·ப்ளெமிஷ் மனோதத்துவ நிபுனர் இது குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகளை முதன்முறையாக முன்வைத்துள்ளார். இவர் முதலில் ஜெஸ்யூட் ஆக இருந்து பிறகு பைபிளில் காணப்படும் நபிமார்கள் பலரிடத்தே மனச்சிதைவுகளின் அறிகுறிகள் தென்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மத நம்பிக்கைகளைப் பற்றி ஐயுற்று நாத்திகராக மாறியவர் ஆவார். இவரது புத்தகம் இதுவரை டச்சு மொழியில் மட்டுமே கிடைக்கின்றது : Een andere Mohammed ('மாறுபட்ட முகம்மது', ஹாடவிச், ஆண்ட்வெர்ப் 1993). ஆனால் அவரது புத்தகத்தின் சாரத்தை ஆங்கிலத்தில்(கு:தமிழில்) இங்கு தருகிறேன். அவர் தமது ஆய்வுக்கு அடிப்படையாக எடுத்துக் கொண்டவை, முகம்மதின் குணாதிசயங்கள்,  நடவடிக்கைகள் பற்றி விவரமாகவும் துல்லியமாகவும் விளக்கும் குரான், ஹதீதுகள் (Hadiths- பொருள் வாரியாக வரிசைப் படுத்தப்பட்ட வரலாற்றுத் தகவல்கள்) மற்றும் சிரா (Sira Literature- முஸ்லிம் அறிஞர்களால் வரிசைக் கிரமமாக பதிவு செய்யப்பட்டுள்ள முகம்மதின் வாழ்க்கைக் குறிப்புகள்) நூல்கள் ஆகியன.

இது போன்ற ஆதார நூல்களின் அடிப்படையில் ஆய்வு செய்யும் போது, ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அது - இயேசுவுக்கும் முகம்மதிற்கும் இடையே உள்ள வித்தியாசம். இயேசு என்பவர் - ஒரு கட்டமைக்கப்பட்ட கதாபாத்திரம். அடிப்படையில் போதனைகளை முன்மொழிந்த - குணப்படுத்தும் வல்லமை கொண்ட ஒரு வரலாற்று நபருடன், அக்கால கடவுள் நம்பிக்கைகள், ஆன்மீகப் பெரியவர்களின் குணநலன்கள் ஆகியவற்றைக் கலந்து, மெல்ல உருவெடுத்த சர்ச்சின் வசதிக்கேற்ப அக்கால அரசியல்-ஆன்மீகச் சூழல்களுடன் பொருந்தும் ஒரு கதாபாத்திரமாக காலப்போக்கில் உருவெடுத்ததே இயேசு அல்லது ஜீஸஸ் என்று இன்று அறியப்படும் நபர். ஆகவே, இயேசுபிரான் குறித்த வரலாற்று ஆய்வுகள் ஒரு எல்லையோடு திரும்பி விடுகின்றன. அவர் யார், உண்மையில் என்ன சொன்னார், எப்படி வாழ்ந்தார், என்ன போதித்தார், குணநலன்கள் யாவை என்பவை மூடுபனியிலூர்ந்து வரும் வெண்புறா போன்று தெளிவாக கணிக்க முடியாதவையாக உள்ளன. ஆனால், முகம்மதின் கதை வேறு - அவர் முழுக்க முழுக்க சரித்திரத்தில் துல்லியமாக பதிக்கப்பட்ட ஒரு வரலாற்று நாயகர்.

கவனித்துப் பார்த்தோமேயானால், வரலாற்றின் வழி தென்படும் முகம்மது குறித்த ஐயங்களையும் எழுப்பும் அறிஞர்களின் வாதங்களும் உண்டு (vide e.g. Ibn Warraq : The Origins of the Koran, Prometheus, New York, 1998). இவற்றை நாம் ஒப்புக் கொண்டோமேயானால், இஸ்லாம் மிகப் பெரிய வீழ்ச்சியை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது எனலாம். ஏனெனில், இஸ்லாம் என்ற மத நம்பிக்கையும், அதன் வாழ்வடிப்படைச் சட்ட திட்டங்களும் முகம்மது என்ற ஒரு ஒற்றை நபரின் வாழ்வு, வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவை உண்மையிலேயே நிகழ்ந்தவை என்ற நம்பிக்கைகளின் மீதே கட்டமைக்கப் பட்டுள்ளன. இவையெல்லாம் பொய், முகம்மது என்ற நபரின் வாழ்வு, குணநலன்கள், செயல்பாடுகள் ஆகியவை குறித்த நம்பிக்கைகள் சந்தேகத்திற்கிடமானவை என்ற இந்த வாதத்திலிருந்து, இஸ்லாத்தைக் காக்கும் பணியை நாம் செய்திட விழைந்திடவில்லை என்றாலும், இத்தகைய வாதங்கள் அதீதமானவையாகவே தோன்றுகின்றன.

மேலே குறிப்பிட்ட இஸ்லாமிய ஆதாரங்கள் ஏன் நம்பகமானவை என்றால், முகம்மதையும் அவரது கூட்டாளிகளையும் பற்றி அதிர்ச்சிகரமான, அவதூறாகக் கருதக்கூடிய தகவல்களையும் அவை தருகின்றன (முகம்மது மனநிலை சரியில்லாதவர் என்று அவருடன் இருந்தோர் கருதியது உட்பட). இந்நிலையில், உண்மை என்று கருதியதாலேயே இவையெல்லாம் பதிந்து வைக்கப் பட்டுள்ளனவே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இந்த வரலாற்று ஆவணங்களைப் பதித்தோருக்கு கிடையாது என்றே  தோன்றுகிறது. அவ்வாறு இல்லையெனில், முகம்மதைப் பற்றிய இதுபோன்ற சகிக்கவொண்ணா தகவல்களைப் பதிந்து வைக்க வேண்டிய அவசியம், அவரைப் பின்பற்றிய இஸ்லாமியர்களுக்கு இருந்திருக்காது.

இத்தகவல்களை மாற்றிப் பதிந்து வைக்க எந்தவித அரசியல் - hagiographical நிர்ப்பந்தங்களும் அந்த முஸ்லிம்களுக்கில்லை. அவர்களுக்கு நிச்சயமாக எவ்வித உள்நோக்கங்களும் இருந்திருக்க வாய்ப்பில்லை. முகம்மது ஏற்படுத்திவிட்டுச் சென்ற சில அரசியல் முறைகள், விதிகள் குறித்துக் கூட நமக்கு இந்த ஐயம் எழலாம். ஆனால் இதிலும் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பல சமயங்களில் முகம்மதே இது விஷயமாக வாய்மூடி மெளனமாக இருக்க வேண்டியிருந்தது. அவர் மரணப் படுக்கையிலிருந்தபோது கூட, தமக்குப் பின்னால் நிலவ வேண்டிய அரசியல்-வாரிசு முறை பற்றி சொல்ல வந்தபோது அவர் அதற்கு அனுமதிக்கப் படவில்லை (இந்த வாரிசு உரிமைப் போராட்டமே அலி, அவரது மகன் ஹ¤சைன் உயிரையும் குடித்து, ஷியாக்களை உருவாக்கி இஸ்லாத்தில் பிளவை ஏற்படுத்தியது). ஆனால், நபிமொழிகளும் ஏனைய வழக்குகளும் அரசியல் ஆதாயங்களுக்கு, சச்சரவுகளுக்கு அப்பாற்பட்டு, இஸ்லாம் என்ற மதத்தை கட்டமைக்க வேண்டிய அவசியங்களுக்கு அப்பாற்பட்டு,  முகம்மதின் குணநலன்கள், பல சந்தர்ப்பங்களில் அவரது முடிவுகள் குறித்த பல சகிக்கவொண்ணா தகவல்களை, எந்தவொரு நாகரிக மனிதனும் வெட்கித் தலைகுனியவைக்கும் தகவல்களை முன்வைக்கின்றன.

நிச்சயமாக இவையெல்லாம் இடைச்செருகல்களாகவோ, உள்நோக்கங்களுடன் செய்யப்பட்டவையாகவோ இருக்க வாய்ப்பில்லை. முகம்மதை விவரிக்கும் வழக்குகள் விஷயத்தில் இது மிகவும் உண்மை எனலாம். முகம்மதின் உயரம், நிறம், சுத்தபத்தம், பாலியல் வாழ்க்கை போன்றவற்றை கேட்டு ஆய்ந்து பதிந்து வைத்துச் சென்ற,  அப்பாசிட் அல்லது உம்மையத் காலத்தில் வாழ்ந்த மதப்பிடிப்புள்ள முஸ்லிம் அறிஞர்கள் இவையெல்லாம் தாங்களாகவே கற்பனை செய்து உருவாக்கினர் என்று நாம் கருத எவ்வித முகாந்திரமும் இல்லை.

பிற்காலத்தில் இந்த ஆதார வழக்குகள் மற்றும் ஆவணங்களைத் தொகுத்து இஸ்லாமிய நூல்களை காபந்து செய்த காலத்தில் எதாவது சில மாற்றங்கள், சில சேர்க்கைகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கருதினால் கூட பெரும்பாலும் காணப்படுபவை சரியான தகவல்கள், துல்லியமான பதிவுகள் என்றே நாம் கருத முடிகிறது.  அதிலும் மிக முக்கியமாக இந்த நவீன யுகத்தில் ஒரு மனநோயின் அறிகுறியாக நிபுணர்கள் கருதும் அதே விடயங்கள் அந்தக் காலத்திலேயே முகம்மதின் குணநலன்கள், நடவடிக்கைகள், செய்கைகள் அவருடன் கூட இருந்தோரால் கவனிக்கப்பட்டு அது பிற்காலத்தில் பதிந்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இதெல்லாம் உண்மைதான், கட்டுக் கதைகளோ உள்நோக்கங்களுடன் கூடிய இடைச்செருகல்களோ இல்லை என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது.

டாக்டர் சோமர்ஸ் கூறுகிறார்:

"வாசகர்கள் ஒரு விஷயத்தில் கவனமாயிருக்க வேண்டும். மனநோய்க்கான அறிகுறிகள் முகம்மதிடம் தென்படுவது குறித்து நாம் சுட்டிக் காட்டும்போது சில நிபுணர்கள், வரலாற்றறிஞர்கள் மற்றும் டாக்டர்கள், இவையெல்லாம் பிற்காலத்தில் எழுதப் பட்டவை, ஆகையால் இவையெல்லாம் மதவாதிகளின் கட்டமைப்புகள், சேர்க்கைகளாக இருக்கலாம்; எனவே இத்தகைய நபிமொழிகள், நபிவழக்குகள் மற்றும் தொன்மையான இஸ்லாமிய வரலாற்றாவணங்களின் அடிப்படையில் இன்று செய்யப் படும் ஆய்வுகள் சரியல்ல என்ற கூறுகின்றார்கள்.(...)

இத்தகைய வழக்குகள், மற்றும் ஆவணங்கள் அனைத்தும் கட்டுக்கதைகள், மெய்யல்ல என்ற தவறான அடிப்படையில் அவர்களின் நிராகரிப்பு அமைந்திருக்கின்றது என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். (...)

முதலாவதாக, நபிவழக்குகள், தொன்மையான இஸ்லாமிய ஆவணங்கள் பெரும்பாலும் மிகச்சரியான தகவல்களை தம்மிடத்தே கொண்டிருக்கின்றன. இரண்டாவதாக நவீன மருத்துவம், நோய்களின் அறிகுறிகளை மிகத்தெளிவாக ஆய்ந்து பகுத்திருக்கின்றது. தனிப்பட்ட அறிகுறிகள் (symptoms) மற்றும் இத்தகைய அறிகுறிகளின் தொகுப்பான நோய்த்தன்மைக் கூறுகள் (syndrome) குறித்த தெளிவான தகவல்கள் நம்மிடையே இன்று உள்ளன. (...)

தொன்மையான இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள், நபிவழக்குகள் ஆகியவற்றைக் காண்போமேயானால், நாம் ஆச்சர்யப்படும்படி மனப்பிறழ்வு குறித்து இன்று நாம் அறிந்து வைத்திருக்கின்ற தனித்தன்மை கொண்ட அறிகுறிகளும் (symptoms), தொகுப்பான நோய்த்தன்மைக் கூறுகளும் (syndrome) துல்லியமாகவும் தெளிவாகவும் இந்த இஸ்லாமிய வழக்குகளில் பதிந்து வைக்கப் பட்டிருக்கின்றன என்பதைக் காணலாம். இந்தக் காலத்தில் நம்முடைய மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ள இந்த அறிகுறிகள், அந்தக் காலத்தைய
ஆவணங்களில் பதிந்து வைக்கப் பட்டிருப்பதால் அவை நிச்சயமாக நம்பத்தகுந்தவையே." (பக் 18)

ஒருவர் குறிப்பிட்ட நபர் மனநோய்க்கு ஆட்பட்டவர் என்று பொதுப்படையாக கூறுவதற்கும் (பைத்தியக்கார விடுதிகளில் உள்ளோர்களின் நடவடிக்கைகள் குறித்த ஜோக்குகள் நிறைய நம்மிடையே நிலவுகின்றன அல்லவா அவை போன்று), ஒரு நபரை paranoia syndrome ஆட்கொள்ளும்போது தென்படும் அறிகுறிகள் குறித்து ஒவ்வொன்றாக ஒருவர் கூறுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அப்படி ஒருவர் கூறினால், ஒன்று அவர் மனவியல் மருத்துவ நூல்களிலிருந்து ஒருவர் படித்துக் காண்பித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லது
அந்த நோய்க்காட்பட்ட ஒரு நபரை நேரில் கண்டு அறிகுறிகளை அவர் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

டாக்டர். சோமர்ஸின் கருத்துப் படி, முகம்மது paranoia நோய்க்காட்பட்ட ஒரு நபர்க்கான தெளிவான உதாரணம். Paranoia syndrome-ன் தெளிவான தோற்றமானது, ஒரு நபர் தமக்கேற்படும் மாயபிம்பங்களினால், தன்னைப் பற்றியே ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்வதாகும். இந்த மாயபிம்பங்களானது ஒலிகளாகவும் (காதில் குரல்கள் கேட்பது), ஒளி பிம்பங்களாகவும் (இதில் மாயத் தோற்றங்கள் கண்களுக்குத் தென்படும்), அல்லது உள்ளுணர்வுகளாகவும் (இவை உண்மையென்று அவர்கள் மிக உறுதியாக நம்பும்படி இருக்கும்; வெளிப்படையாக மற்றவர்களுக்கு தென்படுபவை, இவற்றுக்கு எதிரிடையாக இருந்தாலும் அவர்களின் நம்பிக்கையை அசைக்க முடியாது) இருக்கலாம். இந்த மனப்பிறழ்வின் நாயகமாக அவர்களே இருப்பர். அதன்படி அவர்களுக்கு எதிராக அனைவரும் கூட்டு சேர்ந்து சதிசெய்வர் அல்லது எதோவொரு பிரபஞ்ச நிகழ்வின் ஏக சாட்சியாக அந்த நபரே இருப்பார் அல்லது அந்த நபரே ஒரு மிகச்சிறந்த குறிக்கோளை உலகெங்கும் முன்னெடுத்துச் செல்பவராக நியமிக்கப் பட்டிருப்பார்.

இதில் முதலாவதாகக் குறிப்பிட்டிருக்கும் முகம்மதுக்கெதிரான கூட்டுச் சதி பற்றிய அவரது கருத்துக்கள் குறித்த மிக மெல்லிய அவுட்லைனே சரித்திரத்தில் தென்படுகிறது. முகம்மது தாம் மக்கத்தவர்களால் துன்புறுத்தப் பட்டே மக்கா நகரை விட்டு வெளியேறி யாத்ரிப்/மதீனா நகருக்கு தம்மைச் சேர்ந்தவர்களுடன் ஓட நேர்ந்தது என்ற கருதினார் (பிற்காலத்தில் அவரது வன்செயல்களை நியாயப் படுத்த முயல்வோரும் இதே கருத்தை நம்பி முன்மொழிந்தனர்). ஆனால், இஸ்லாமிய சரித்திரத்தைக் கவனித்தோமேயானால், மதீனா/யாத்ரிப் நகருக்கு முகம்மது தம்மை நம்பியவர்களுடன் இடம் பெயர்ந்த பின்னர் தமது அடியார்களின் குடும்பத்தாரை மக்கா நகரிலிருந்து அழைத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளார். அவர்களும் அவ்வாறே செய்துள்ளனர். இங்கு ஒரு கேள்வி எழுகிறது, முகம்மதையும் அவரைப் பின்பற்றியவர்களையும் எதிரிகளாகப் பாவித்து அவர்களை தீர்த்துக் கட்டுவதே தமது குறிக்கோள் என்று மக்கத்தவர்கள் நினைத்திருப்பார்களேயானால், அப்படி சதிசெய்து ஓடியவர்களின் குடும்பத்தாரை அக்கால வழக்கப் படி, பிணையாக பிடித்துவைத்திருக்கமாட்டார்களா? ஓடியவர்களுடன் மீண்டும் போய் சேர்ந்துகொள்ள அவ்வளவு எளிதாக அவர்கள் அனுமதித்திருப்பார்களா என்ற கேள்வி எழுகின்றது. எனவே, மக்கத்தவர்கள் துவேஷம் பாராட்டி, முகம்மதையும் அவரின் அடியார்களையும் தீர்த்துக் கட்ட முனைந்தனர் என்று கருதுவது தவறாகும்.

உலகின் முடிவைப் பற்றிய மிக ரகசியத் தகவல்களை - இறுதி(த் தீர்ப்பு) நாள் - தாம் மட்டுமே அறிந்துள்ளது (ஆனால், சரியான நாளை மட்டும் அறியாமல் இருப்பது, அப்படி சரியான நாளை குறிப்பிட்டிருந்தால் அது நிறைவேறுகிறதா இல்லையா என்பது இத்தகைய மனமயக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்) என்ற மன மயக்கம் பைபிளில் (பழைய ஏற்பாடு), பல நபிமார்களிடமும் நாம் காணமுடிகின்ற ஒரு அறிகுறியாகும். இன்னும் சொல்லப் போனால், முகம்மதையும் விட அவர்களிடம் இது குறித்த தீர்மானமான கருத்துக்களை நாம் காணமுடிகிறது. குரான் வசனங்கள் 15: 85, 44:10/9,78:40 போன்றவற்றில் உலகின் முடிவு சமீபமாயிருக்கின்றது என்று முகம்மது கருதியது தெளிவாகிறது (இயேசு கிறிஸ்துவின் அபோஸ்தலர்களுக்கும் இப்படியான நம்பிக்கை விதைக்கப்பட்டதை இங்கே குறிப்பிட வேண்டும்). இறுதித் தீர்ப்பு நாளின் விவரனையானது, குரானில் அடிக்கடி உச்சாடனம் செய்யப்படும் ஒரு விஷயமாகும். கிறிஸ்துவ மற்றும் யூத மதநம்பிக்கைகளிலிருந்து காப்பியடிக்கப் பட்ட இந்த விஷயம், அவற்றையும் தாண்டி முகம்மதுவிற்கு ஏற்பட்ட மாயத்தோற்றங்களின் காரணமாக மிகத் துல்லியமாக விவரிக்கப் பட்டிருப்பதை காணமுடிகிறது. இந்த தோற்றங்களின் மேல் ஏற்பட்ட நம்பிக்கைகளின் காரணமாக இந்த இறுதித் தீர்ப்பின் போது இன்னின்ன வகையானோர்க்கு இதது ஏற்படும் என்றும் ஒவ்வொரு மதக்கூட்டத்திற்கும் என்னவிதமான தீர்ப்புகள் வழங்கப் படும் என்றும் இந்த நாளில் முகம்மதுவுக்கு மகோன்னத நிலை (முகம்மதுவுக்கு அடுத்த நிலையில் இயேசு கிறிஸ்துவின் இடமும் விவரிக்கப் பட்டுள்ளது) போன்றவை குறித்தும் தீர்க்கமான விவரனைகள் இடம் பெற்றுள்ளன.

ஆனால், முகம்மதுவின் அடிப்படையான மனப்பிறழ்வானது ஒரு மையப்புள்ளியையே ஆதாரமாகக் கொண்டு சுழன்று சுழன்று அவரை நிலைகொள்ளாமல் அடித்துவந்தது. நாம் ஏற்கெனவே கண்டது போன்று இந்த மனமயக்கம் குறித்து முதலில் அவருக்கே பற்பல சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் இருந்தன. ஆனால், காலப்போக்கில் திரும்பத்திரும்ப ஏற்பட்ட இந்த தோற்றங்களை அவர் நம்பத் தொடங்கி, தாமே இந்த பிரபஞ்ச வழிகாட்டி - தாம் இந்த விசேஷப் பணிக்கென தேர்வு செய்யப் பட்டிருக்கின்றோம் என்று நம்பலானார். அவர் கடவுளின் ஒரே பேச்சாளர், அது மட்டுமல்ல உலகிற்கு கடவுள் அனுப்பி வைத்த கடைசி பேச்சாளர் - இறுதித் தீர்ப்பு நாள் வரை அவரே இறைவனின் ஏக தூதர் - 'நபிகளின் முத்திரை' என்ற நம்பிக்கை அவருக்கு இருந்ததை காண முடிகிறது. இந்த விசேஷப்பணியானது அவருக்கு அந்த முக்கியமான நாளில் வெளிப்பட்ட இரண்டாவது விண்குரல் மூலம் வழங்கப்பட்டது. முதலில் அவரை 'கரை' என்றது, அவர் கண்முன் தோன்றிய அமானுஷ்ய ஆவியானது ["உரத்துச் சொல்" அல்லது "உரை" - அரபியில் "(இ)க்ராஹ்" - ஆதலின் குரான் என்ற பெயர் ஏற்பட்டது]. அதைக் கேட்டு அஞ்சி, தமக்கு பைத்தியம் பிடித்துவிட்டது அல்லது தீய ஆவி தம்மை பிடித்துக் கொண்டது என்று நடுநடுங்கி தற்கொலை செய்து கொள்ள ஓடிய முகம்மதுவுக்கு, நடுவே இரண்டாவதாக காப்ரியேல் என்ற ஆவி விண்ணில் தோன்றி "ஓ முகம்மதே நீரே கடவுளின் தூதர், நான்  ஜிப்ரீல்" என்றது (Sira, Guillaume translation., பக்.106/153 ; குரான் 96:1)

இந்த மனப்பிறழ்வானது வியாபாரியாக இருந்த முகம்மதை, கடவுளின் தூதராக மாற்றி, அந்தக் காலத்தில் ஒரு சிறு ரகசியக் குழுவின் தலைவராக, கல்ட் லீடராக உருமாற்றி, பிறகு அரசியல் அபிலாஷைகள் கொண்ட ஒரு பெரிய மதத்தலைவராக, பின் மதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட அரசின் தலைவராக மாற்றி, அதன்பின் கடைசியாக ஒட்டுமொத்த அரேபியாவையும் தன் கொடையின் கீழ்க்கொணர்ந்த சாம்ராஜ்ய அதிபதியாகவும் உலகையே ஆக்கிரமித்து தனது ஆளுகையின் கீழ் கொணரவிரும்பும் ஒரு மதத்தை உருவாக்கியவராகவும் உருமாற்றிவிட்டது.

அவரைப் பற்றிய இந்த நம்பிக்கையே முஸ்லிம்களின் ஆதார சுருதியாக விளங்குகிறது "அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இல்லை, முகம்மது அல்லாஹ்வின் தூதர்" என்ற (கலிமா) கோஷம் ஒவ்வொரு முஸ்லிமையும் மற்ற எல்லோரிடத்திருந்தும் வேறுபடுத்தி, அவரவர் மனதிலும், சமூகத்திலும் பிரிவினையை உண்டாக்கி வைத்திருக்கின்றது. கடவுள் ஒருவனே என்ற ஏக-இறைக் கோட்பாடானது பலவித மத ஆசான்களால் முன்மொழியப்பட்டு பல மதங்களிலும் நிலவி வரும் நிலையில், இந்த முகம்மதின் விசேஷ தகுதி குறித்த நம்பிக்கையே இஸ்லாத்தின் வித்தியாசமான அம்சமாகும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில், முகம்மது சொல்லியவை (குரான்), சொல்லி நடந்து காட்டியவை (ஹதீஸ், சுன்னாஹ்) போன்றவை கடவுளால் மனித குலத்துக்குக் கடைசியாக அனுப்பப்பட்ட ஒரே பேச்சாளரின் சொற்களாகவும், செயல்களாகவும், தீவிர மதநம்பிக்கையுடைய முஸ்லிம்களுக்குத் தென்பட்டு, இந்த குரான், ஹதீஸ், சுன்னாஹ் போன்றவையே அவர்களை வழிநடத்தும் கலங்கரை விளக்கங்களாக விளங்கி வருகின்றன. ஆனால்,  மேலே கண்டவாறு அறிவியல் ரீதியாக பகுத்தாய்ந்து காணும்போது, உலகில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் நம்பி செயல்படும் ஒரு மதநம்பிக்கையானது, மனப்பிறழ்வால் எழுந்த ஒன்று என்பதை அறியும்போது அது நமக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors