Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
பில்லியன் டாலர் கனவுகள் - பாகம் : 2
- சசிகுமார்
பாகம் : 1 | 2 | 3 | 4 (புதிது)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

1917

Hammer and Sicklyஇந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். ஆம்..அந்த வருடம் தான் ரஷ்ய புரட்சி வெடித்து லெனின் தலைமையில் ஒரு கம்யுனிச நாடு உலகில் உதயமாகியது. கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களை நடைமுறைப் படுத்தக் கூடிய ஒரு அரசு அப்பொழுது தான் உலகில் முதன் முறையாக தோன்றியது. இந்த நிகழ்வு, வர்க்க பேதங்களை கலைந்து ஒரு சமத்துவமான சமுதாயத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கையை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியது.

ரஷ்ய புரட்சியின் தாக்கம் அடுத்து வந்த ஆண்டுகளில் உலகின் பல நாடுகளை ஆட்டிப் படைத்தது. பல நாடுகளின் கொள்கைகளை மாற்றி எழுதியது. மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றியது. காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பல நாடுகள் தாங்கள் எழுச்சி பெற கார்ல் மார்க்ஸின் கம்யுனிசம் தான் ஒரே வழி என்று நினைத்தன. இந்தியாவிலும் அந்த எண்ணம் பரவலாக பெருகி இருந்தது.

இந்த நம்பிக்கைக்கு காரணமான ரஷ்ய புரட்சி எப்படி வெடித்தது ? புரட்சிக்கு காரணம் என்ன ?

Karl Marxகார்ல் மார்க்ஸ் "முதலாளித்துவம் பெருகும் பொழுது வர்க்க பேதங்கள் வெடித்து, அதன் காரணமாக சோஷலிசம் உருவாகி, சோஷலிசம் உருமாற்றம் பெற்று கம்யுனிசம் உருவாகும்" என்றார். கம்யுனிசம் என்பது ஒரு பரிணாம வளர்ச்சி என்றும் சமுதாயத்தில் நடக்கும் பல மாற்றங்கள் கம்யுனிசமாக இறுதியில் மாறும் என்றும் தன் கம்யுனிச சித்தாந்தங்களில் மார்க்ஸ் கூறினார். மார்க்ஸின் சிந்தனை படி கம்யுனிசம் என்பது ஒரு கொள்கை அல்ல. அது மாற்றத்தின் ஒரு நிலை. அந்த நிலையில் வர்க்க பேதங்கள் இருக்காது. அரசாங்கங்கள் இருக்காது. ஒரே வர்க்கம் தான் இருக்கும். அது தான் உழைக்கும் வர்க்கம். அந்த உழைக்கும் வர்க்கம், தான் உழைத்ததை தானே பங்கிட்டுக் கொள்ளும்.

மார்க்ஸின் தத்துவங்களை கொண்டு பார்த்தால் கம்யுனிசம் ஒரு முதலாளித்துவ நாட்டில் தான் ஏற்பட முடியும். அன்றைக்கு ரஷ்யா ஒரு முதலாளித்துவ நாடா ?

நிச்சயமாக இல்லை. அப்பொழுது ரஷ்யா ஒரு ஏழை நாடு. ரஷ்ய மக்களில் 90% பேர் படிப்பறிவு இல்லாதவர்கள். 75% பேர் கூலித் தொழிலாளர்கள். ஏழ்மை தலைவிரித்து ஆடிய நாடு.

முதலாளித்துவமே இல்லாத ஒரு நாட்டில் கம்யுனிசம் தோன்ற என்ன காரணம் ?

தஞ்சை பெரிய கோயிலுக்கு அனைவரும் சென்றிருப்பீர்கள். அதன் கட்டுமானத்தை கவனித்திருக்கிறீர்களா ? பல நாட்டின் மிகச் சிறந்த கட்டுமானப் பொறியாளர்கள் இன்றும் இந்தக் கோயிலின் கட்டுமானத்தை எண்ணி வியந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோயிலை பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு பெருமூச்சு தான் ஏற்படும். ஒரு காலத்தில் அறிவியலில் நாம் மிக அதிக முன்னேற்றத்துடன் இருந்தோம் என்பதற்கு இந்த கோயிலை தான் நான் சாட்சியாக நினனக்கிறேன். ஐரோப்பா கண்டத்தை விட பல மடங்கு முன்னேறி இருந்த நாம் எப்படி சரிந்தோம் ?

விஞ்ஞான வளர்ச்சி என்பது தேவையின் காரணமாக ஏற்படுவது. எங்கு அதற்கான தேவை இருக்கிறதோ அங்கு தான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைய முடியும். பெரிய கோயில்களை உருவாக்கிய பொழுது வளர்ந்த அறிவியல் பின் எந்த தேவையும் இல்லாததால் அதே நிலையில் நின்று விட்டது.

ஆனால் மிகவும் பின்தங்கி இருந்த ஐரோப்பாவிற்கு தன் தேவைகளுக்காக புதிய சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. பிரிட்டனில் மக்கள் தொகை அதிகரிக்க தொடங்கிய பொழுது விவாசயத்தையே நம்பி இருந்த நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த மக்கள் நகரங்களை நோக்கி செல்லத் தொடங்கினர். நகரங்களை நோக்கி மக்கள் குடிபெயர்ந்தாலும் நகரங்களில் வேலையில்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருகியது. இந்தப் பிரச்சனையின் காரணமாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அவசியம் அப்பொழுது பிரிட்டனில் ஏற்பட்ட்து. புதிய தொழில்கள் தொடங்கப்பட்டன. தொழிற் புரட்சி வெடித்தது. புதிய இயந்திரங்கள் உருவாகின. தொழில்கள் தொடங்கப்பட்டு பலர் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

உலகில் முதலாளித்துவமும் (Capitalism), உழைக்கும் வர்க்கமும் (Working class) இப்படித் தான் உருவாகின.  தொழில் புரட்சி வெடித்த பொழுது பல சமுதாய மாற்றங்களும் ஏற்பட்டன. அது வரை கிராமத் தொழில்களாக, சிறு தொழில்களாக செய்யப்பட்ட பொருள்கள் இயந்திரங்களால் மிக மலிவான விலைக்கு செய்யப்பட்டன. கிராமத் தொழில்கள் நசிந்தன. அந்த தொழில்களை கொண்டு வாழ்க்கை நடத்திய மக்களின் வாழ்க்கைத் தரம் சீர்குலைந்தது. இயந்திரங்களை கொண்டு செய்யப்பட்ட ஏரளாமான பொருட்களை விற்க சந்தை தேவைப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் ஆசிய ஆப்ரிக்கா நாடுகளுடன் வர்த்தகம் செய்யத் தொடங்கின. இந்த வர்த்தகம் மூலம் காலனியாதிக்கமும் பெருகியது.

கார்ல் மார்க்ஸ் இந்த காலக்கட்டத்தில் தான் தன் கம்யுனிச சிந்தனைகளை உருவாக்கினார். முதலாளித்துவம் பெறும் லாபம் என்பது உழைக்கும் வர்க்கம் உழைத்து கொடுக்கும் உழைப்பு என்றும் உழைக்கும் வர்க்கம் சுரண்டப்பட்டு முதலாளித்துவம் கொழிக்கிறது என்பதும் அன்றைய சூழ்நிலையில் மிகவும் புரட்சிகரமான சிந்தனைகள்.

ஆனால் ரஷ்யாவில் முதலாளித்துவம் மிகப் பெரிய வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.முதல் உலகப் போரின் பொழுது ரஷ்யாவில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. பலர் இராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்டனர். ஆலைகளில் உற்பத்தி குறைந்தது. உற்பத்தியை பெருக்க தொழிலாளர்கள் பல மணி நேரங்கள் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் சரியான கூலி அதற்கு வழங்கப்படவில்லை. தொழிலாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சார் மன்னன் நிக்கோலஸின் ஆட்சிக்கு எதிராக 1917ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெடித்தது. இந்த புரட்சியால் சார் மன்னன் இரண்டாம் நிக்கோலஸின் ஆட்சி முடிவுக்கு வந்து பெட்ரோகார்ட் சோவியத் (Petrograd Soviet), மற்றும் தூமா (Duma) ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதனை Russian Provisional Government என்று கூறுவார்கள். இது 1917ம் ஆண்டு நடந்த ரஷ்ய புரட்சியின் முதல் கட்டம். இதனை பிப்ரவரி புரட்சி என்றும் கூறுவார்கள்.

அதே ஆண்டு அக்டோபர் மாதம் அடுத்த புரட்சி வெடித்தது. இது தான் அக்டோபர் புரட்சி. இந்த அக்டோபர் புரட்சி மூலமாகத் தான் போல்ஷவிக் கட்சியின் தலைவர் விலாடிமீர் லெனின் ரஷ்யாவின் ஆட்சியை பிடித்தார். கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களில் நம்பிக்கை உடைய போல்ஷவிக் கட்சியின் வெற்றி கம்யுனிசத்தின் வெற்றியாக கூறப்பட்டது.

ஆனால் உண்மையில் ரஷ்யாவில் நிலவிய பல உள்நாட்டு பிரச்சனைகளின் காரணமாகத் தான் புரட்சி வெடித்து போல்ஷவிக் கட்சியினர் ஆட்சியை பிடித்தனர். புரட்சியின் மூலம் மிக எளிதாக எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆட்சியை பிடித்த போல்ஷ்விக் கட்சியினர் கம்யுனிசத்தை தங்களது கொள்கையாக மாற்றிக் கொண்டனர்.

போல்ஷ்விக்கின் வெற்றி கார்ல் மார்க்ஸின் உண்மையான கம்யுனிசம் அல்ல. வர்க்க பேதங்கள் இல்லாத சமுதாயம் பற்றி பேசிய கார்ல் மார்க்ஸ் அந்த சமுதாயத்தில் அரசாங்கத்தின் பங்கு பற்றி பேச வில்லை. அவரது

Theoretical சமுதயாத்தில் அரசாங்கங்கள் தேவையில்லை. ஆனால் லெனினுக்கு அன்றைக்கு அதிகாரம் தேவைப்பட்டது. இவ்வாறு தான் கம்யுனிசத்தின் மற்றொரு கிளள உருவாகியது.
அது தான் மார்க்ஸிசம்-லெனினிசம். இதன் படி ரஷ்ய கம்யுனிஸ்ட் கட்சி, பொலிட்பீரோ போன்ற அதிகார மையங்கள் உருவக்கப்பட்டன. தனிப்பட்ட முதாளித்துவத்திற்கு பதிலாக அரசாங்க முதலாளித்துவம் உருவாக்கப்பட்டது.

leninரஷ்ய புரட்சியின் பொழுது மென்ஷவிக்கள் மற்றும் லியான் ட்ராட்ஸ்கியின் சிந்தனைகள் போன்ற வேறுபட்ட கருத்துக்களும் ரஷ்யாவில் இருந்தன. ட்ராட்ஸ்கி லெனினுடன் வேறுபட்டாலும் ரஷ்ய புரட்சியில் முக்கிய பங்காற்றியவர்.

ரஷ்ய புரட்சிக்கு பின்பு லெனின் தனது கம்யுனிச சிந்தனைகளில் நிறைய சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. கம்யுனிசம் ரஷ்யாவின் பல பிரச்சனனகளுக்கு உடனடி தீர்வாக முடியாது என்பதை லெனின் உணர்ந்தார். தனது புதிய பொருளாதார கொள்கை (New Economic Policy) மூலம் லெனின் அந்த சமரசத்தை செய்து கொண்டார். முழுவதும் கம்யுனிசம் என்ற தனது கொள்கை தற்போதைய ரஷ்ய சூழ்நிலையில் எடுபடாது என்பதை உணர்ந்த லெனின் கம்யுனிசத்தை நோக்கி ஒரு அடி வைக்க வேண்டுமானால் இரு அடிகள் பின்நோக்கி சென்று தான் தீர வேண்டும் என்று வாதிட்டார் ( One Step Forward, Two Steps Back).

இவ்வாறு பல குழப்பங்களுக்கிடையே தான் ரஷ்யாவில் கம்யுனிசம் உருவாகியது. ரஷ்ய புரட்சி ஒரு முழுமையான கம்யுனிச நாட்டை உருவாக்கவில்லை என்பது தான் உண்மை.

Joseph Stalinலெனின் மறைவுக்கு பிறகு கம்யுனிச ரஷ்யாவின் தலையெழுத்தை மாற்றி எழுதியவர் ஜோசப் ஸ்டாலின். ஸ்டாலின் என்று ஒருவர் தோன்றியிருக்காவிட்டால் 1991ல் சிதைந்த சோவியத் யுனியன், 1920ல் சதைந்து போயிருக்கலாம். பல நாடுகள் கம்யுனிசத்தை மறந்திருக்கலாம். இந்தியா கூட கட்டுப்படுத்தப்படாத சந்தை பொருளாதாரத்தை நோக்கி சென்றிருக்கலாம். ஆனால் ஸ்டாலின் தலைமையில் ரஷ்யா அடைந்த பிரமிக்கத்தக்க வளர்ச்சி இந்தியா உட்பட பல நாடுகளின் பொருளாதார தலையெழுத்தை மாற்றியது.

1917ம் ஆண்டு ரஷ்ய புரட்சிக்கு முன்பு வரை மிகவும் பிந்தங்கி இருந்த ரஷ்யா 1940ல் தொழில் துறையில் மிக அதிக முன்னேற்றத்தை எட்டியது. ஏழை நாடான ரஷ்யா ரஷ்ய புரட்சிக்கு பின்பு வந்த 22 ஆண்டுகளில் மிகவும் நவீனமான நாடாக மாறியது. 30 ஆண்டுகளில் பிரிட்டன், அமெரிக்காவிற்கு அடுத்த மிகப் பெரிய பொருளாதாரமாக உருவாகியது. பொருளாதாரத்தில் மட்டும் இல்லாமல் கல்வி, அறிவியல் போன்றவற்றிலும் பிரமிக்கத்தக்க மாற்றத்தைப் பெற்றது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உலகின் இரு வல்லசுகளில் ஒன்றாக சோவியத் யுனியன் உருவாகியது. இதற்கு காரணம் கம்யுனிசம் தான் என்றும் கார்ல் மார்க்ஸ் மற்றும் லெனினுடையுடைய சிந்தனைகள் தான் என்றும் உலகநாடுகள் நம்பின. தங்களது நாட்டையும் முன்னேற்ற முடியும் என்ற நம்பிக்கையை இந்த வெற்றி பல நாட்டு தலைவர்களிடம் ஏற்படுத்தியது.

ஸ்டாலினின் தலைமையின் கீழ் சோவியத் யுனியன் பெற்ற வெற்றியை கவனித்த உலக நாடுகள் அதனை அப்படியே பின்பற்ற தொடங்கின.

சோவியத் யுனியன் வெற்றியின் பாதிப்பு இந்தியாவையும் விட்டு வைக்க வில்லை. கம்யுனிச சோவியத்தை கூர்ந்து கவனித்து கொண்டிருந்த ஜவகர்லால் நேரு இந்தியாவின் பிரச்சனைகளுக்கு சோவியத் யுனியன் பாணியில் செல்வது தான் சரியானது என்று நினைத்தார். சோவியத் யுனியனின் இமாலய வெற்றியும் அவரது நம்பிக்கை உறுதி செய்தது.

ஸ்டாலின் எப்படி சோவியத்தை மிகப் பெரிய வல்லரசாக மாற்றினார் ? அதே பாணியை கடைப்பிடித்த நாம் ஏன் முன்னேற வில்லை ?

அந்த நீண்ட பொருளாதாரக் குழப்பத்தை அடுத்து வரும் வாரங்களில் விரிவாக கவனிப்போம்.

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |