Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
மனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே - பாகம் : 1
- ஹஸ்தம்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

நெஞ்சிலே சுனாமியாய்ப் புரண்டு கொண்டிருக்கும் கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இவ்வரைவு.

என் கேள்விக்குரிய களம் இராமாயணம்.

என் கேள்வியின் நாயகன் காவியத் தலைவன் இராமன்.

பலம், பலஹீனம் இவைகளின் கலவையாக ஓர் நாயகன் வரின், கேள்விக்கணைகளின் தாக்குதல் ஏற்படுதல் இயல்பு. இப்படித்தான் வாழவேண்டுமென்பதற்கு இலக்கணமாய் விளங்கும் இராமன், விளையாட்டுப்பிள்ளையாய், குறும்புக்காரனாய்ச் செய்யும் செயல்களை நாம் பெரிது படுத்தாமல் சமாதானம் கூறிக் கொள்ளலாம். அமிலமாய் கடுங்சொற்களைக் கொட்டி, பெண்ணைக் காயப்படுத்துவதை, களங்கப்படுத்துவதைக் காணப்பொறுக்கவில்லை. நாமும் மனிதர்கள். மனித நேயம் வதைக்கப்படும் பொழுது மெளனமாக இருக்க முடிய வில்லை. புதிதாக என்ன புலம்பல் என்று சிலர் முணங்குவது கேட்கின்றது. ஆராய்ச்சியாளர்கள் இக்காட்சிகளுக்குவிளக்கம் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் முழுமையாக இல்லை.

இராமாயணத்தில் அன்று முதல் இன்று வரை வாலி வதைக்கும், சீதையின் அக்கினிப்பிரவேசத்திற்கும் தொடர்ந்து வாதங்கள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது . இராமாயணம் எல்லோராலும் மதிக்கப்படும் ஓர் இதிகாசம். சோதனைகள்வரினும் நேர்மையில் நிமிர்ந்து நிற்கும் ஓர் மனிதனின் காவியம் என்று கூறப்படுகின்றது. அந்த மனிதன் அசாதாரணமாகக் கீழிறங்குவது, பாத்திரப்படைப்புடன் பொருந்தவில்லை. அதற்குரிய காரண-காரியங்களை அலசிப் பார்ப்பதில் தவறில்லை. இயல்பாக அக்காட்சி சேர்க்கப்பட்டதா அல்லது இடைச்சொருகலா என்று ஆராய்வது அர்த்தமுள்ளது. பெரிய ஆராச்சியாளர்கள் நம்மிடையே இருக்கின்றனர். இதுவரை என் கேள்விக்கு விடை காணாத ஒன்றினையே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இராமாயணத்தை இலக்கியமாகக் கருதியே என் கருத்துக்களை தெரிவிக்கின்றேன். பரிவும், பக்தியும் ஒதுக்கி வைத்து, நடுநிலையின் நின்று பார்க்கும்படி வேண்டிக்கொள்கின்றேன்.

இராமன்..இராவணன் போர் முடிந்துவிட்டது. சீதைக்குச் செய்தி சொல்லி அனுப்பவேண்டும். மாயச்சூழ்நிலைகளுக்கிடையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சீதா, செய்தியை நம்பவேண்டும். ஏற்கனவே தூதுசென்றவன் அனுமன். சொல்லின் செல்வன் அவன். அனுமனைக் கூப்பிட்டு நடந்தவைகளைச் சொல்லிவிட்டு வரும்படி கூறுகின்றான். செவ்வனே சிந்திக்கும் நிலையில் அப்பொழுது இராமன் இருந்தான்.

சீதையைச் சிறையெடுத்தவன் இலங்கை மன்னன். சிறை பிடிக்கப்பட்டவளை அந்நாட்டு மன்னனே மீண்டும் உரியவனிடம் சேர்ப்பதே சிறப்பு. தற்போது நாட்டுமன்னாக இருப்பது விபீஷணன்.இராமன் எப்படியெல்லாம் சிந்திக்கின்றான்.விபீஷணனை அழைத்து, "வீடணா,சென்றுதா, நம் தோகையை, சீரோடும்" என்கின்றான். அப்பப்பா, மனைவிமேல் எவ்வளவு அக்கறை; அசோகவன வாழ்க்கையில் நைந்துபோயிருக்கும் சீதையைக் காண அவன் மனம் துணியவில்லை. அதனால் தன் அன்புக்குரியவளைச் சீராகக் கூட்டிவரும்படி சொல்லுகின்றான். எப்பேர்ப்பட்ட கணவன். சீதையைத் தவிர வேறு யாரையும் சிந்தையால் தொடாதவன் இராமன். கம்பனாயிற்றே. நாயகனின் உயர்வைக் காட்டும்விதம் மிக மிகச் சிறப்பானது. இராவணன் எத்தனையோ உருமாறி சீ££தையைக் கவரமுயற்சிக்கின்றான். இராமன் வடிவில் சென்ற பொழுது "இவள் மாற்றான் மனைவி. அணுகுவது தவறு' என்று உணர்ந்த்ததாக இராவணனையேச் சொல்லவைத்தானே கம்பன். கோசலை மைந்தன் குணம் மாறிப் பேசப்போகின்றான், அதனால் குறை கூறுவார்களே என்ற தவிப்பிலே தாயைப்போல் அந்த நீல வண்ணச் செம்மலை உயரத்தில் காட்டுகின்றானோ. இராமனனின் தெளிவு எப்பொழுது கலக்கமுற்றது ? ஏன்?

(தொடரும்...)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |