Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
மனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே - பாகம் : 3
- ஹஸ்தம்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

மிதிலைக்கு நுழையும் முன்னர் அகலிகைப் படலம் வருகின்றது. கெளமதனின் மனைவி அகலிகை. இந்திரனுக்கு அவள்மீது ஆசை பிறந்து விட்டது.

பொழுது புலர்ந்ததாய்ப் பொய்த் தோற்றம் ஏற்படுத்தி கெளதமனை அக்குடியிலிருந்து போகச்செய்கின்றான். பிறகு கெளதமனின் தோற்றத்தில் உள்நுழைந்து அகலிகயைப் புணர்கின்றான். அகலிகையும் ஆரம்பத்தில் வந்தவன் தன் கணவர் என்று நினைக்கின்றாள். ஆனால் வந்தவன் கணவன் இல்லை என்பதை விரைவில் உணர்ந்த பொழுதும் அவனை ஒதுக்கவில்லை.

     "புக்கவ ளோடும் காமப்புதுமணத் தேறல்
     ஒக்கஒண் டிருத்தலோடும் உணர்ந்தனள், உணர்ந்த பின்னும்
     தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்"

அத்தகைய அகலிகைக்கு இராமன் கருணை காட்டுகின்றான். புனர் வாழ்வளிக்கின்றான்.

     "நெஞ்சினாள் பிழை இலாளை நீ அழைத்திடுக"
     "மாசுஅறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கை ஈந்து"

அன்று நடந்தது என்ன,இன்று நடப்பது என்ன ? மனத்தாலும் காயத்தாலும் பழுதுபட்டவள் அகலிகை.அவளைப் பிழை இலாதவள் என்று கூறும் இராமன் இன்று சீதையிடம் என்ன பிழை கண்டு சேற்றை அந்த மாசிலா மாணிக்கத்தின் மீது வீசுகின்றான். இராமன் கோபத்தில் வாய்தவறிப் பேசிவிட்டதாக ஒரு சிலர் கூறுவர். ஒரு வார்த்தையல்ல, கட்டாற்று வெள்ளமென வார்த்தைகளல்லவா பேசினான் ? கவிச்சக்கிரவர்த்தி கம்பன்.

சொல்லில் மட்டுமல்ல எழுத்திலும் விளையாடும் வித்தகன். வல்லினத்தில் தாடகை வருகை,மெல்லினத்தில் ஆற்றின் ஓட்டம்காட்டுபவன். பின்னால் இராமன் செய்யப் போகும் தவறைப் பெரிது படுத்தாமல் இருக்க அவன் பெண்ணிடத்தில் கருணை உள்ளவன் என்பதைக்காட்ட இக்காட்சி ஒட்டிக் கொண்டதோ ? அதிலும்  சரியாக மிதிலைக்காட்சிக்கு முன் இதை அமைத்திருப்பது கவிஞனின் சாமர்த்தியம்

    "கை வண்ணம் அங்கு கண்டேன்
    கால் வண்ணம் இங்கு கண்டேன்"

இராமனுக்கு புகழாரம் சூட்டப்படுகின்றது.அந்த மைவண்ணன் மன நிலை பாதிக்கப்பட்டு இன்று அவன்  கொட்டும் நெருப்பு மழையைப் பார்ப்போம்.

    "கலத்தினின் பிறந்த மா மணியின் காந்தறு
    நலத்தின் நிற் பிறந்தன நடந்த; நன்மைசால்
    குலத்தினில் பிறந்திலை; கோள்கில் நீடம்போல்
    நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ."

சீதை எல்லோரும்போல் கர்ப்பத்தில் உதித்துப் பிறக்காதவள்.மண்ணில் கிடைக்கப் பெற்றவள். அவள் ஒரு புழு. அவன் உயர்க்குலமாம். அவள் தாழ்ந்த பிறப்பாம். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம். அப்பொழுது தெரியாத வேற்றுமை இப்பொழுது தெரிகின்றது.

பெண்மையும், பெருமையும், பிறப்பும்,கற்பு எனும்
திண்மையும்,ஒழுக்கமும்,தெளிவும்,சீர்மையும்
உண்மையும்,நீ எனும் ஒருத்தி தோன்றலால்,
பெண்மை இல் மன்னவன் புகழின்,மாய்த்தலால்.

மகாபாரதத்தில் வரும் நாகாஸ்திரம் இதைவிடக்கொடியதாக இருந்திருக்க முடியாது. தவமாய் வாழ்ந்த பெண்ணரசியைத் தன் சொல்லம்புகளால் துளைத்துவிட்டான். மீண்டும் தொடர்ந்து பேசிகின்றான்.

(தொடரும்...)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |