Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
மனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே - பாகம் : 4
- ஹஸ்தம்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

"அடைப்பர் ஐம்புலன்களை; ..இடை ஒரு பழிவரின் அது துடைப்பர், தம் உயிரோடும் குலத்தின் தோகை மார்" உயர்குடியில் பிறந்தோர் பழிவரின் உயிர் துறப்பராம். உயர்குடியில் பிறந்த பெண்கள்தான் ஒழுக்கமுடையவர்களா? ஐம்புலன்கள் அடக்கி வாழ்வது அவர்கள் மட்டுமா? பழிவரின் உயிர்மாய்ப்பது அவர்கள் மட்டுந்தானா? ஒரு மன்னனாகப் போகின்றவன் வாயில் இத்தகைய வார்த்தைகள் வரலாமா ?

இராமன் திருமாலின் அவதாரம்.மனித அவதாரம்.என்று கூறுவர்.மனிதனுக்குரிய ஆசாபாசங்களைப் பல சந்தர்ப்பங்களில்பார்க்கலாம் மனித பலஹீனத்தின் உச்சக்கட்டத்திற்கு வந்து விட்டான் .

ஆசையின் பல குழந்தைகளில் கோபமும் பொறாமையும்அடங்கும். இங்கும் ஒரு காட்சியை ஒப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். நாயர்கர்களை ஒப்பிடவில்லை என்று முதலிலேயே கூறி விடுகின்றேன். உணர்வுகளின் போக்கைத்தான் விளக்குகின்றேன்.

சிலப்பதிகாரத்தில் இந்திர விழாக் காட்சி.

மாதவி மேடைக்கு வரவும் வந்தவர்களின் பார்வைகள் அவள் மேனியழகில் படர்கின்றது. கோவலன் கொதித்துப் போகின்றான். அவள் ஒரு ஆடல் கணிகை. மன்னனின் சட்டப்படி அவள் பொது மக்களின்முன் ஆடியாக வேண்டும். ஆட ஆரம்பித்தவுடன் அந்தக் கலையுடன் ஒன்றிப்போகின்றாள்.

அதுவும் கலைஞனின் இயல்பு. அவள் தனக்கு மட்டும் சொந்தமானவள், அவள் அழகு, ஆடல், பாடல் எல்லாம் அவன் மட்டும் ரசிக்க வேண்டும். ஆடி முடித்து வருகின்றாள், கோவலனும் அவள் மனம் மகிழவே அவளிடமிருந்து யாழ் வாங்கிக் கானல்வரி பாடுகின்றான். குழம்பிய மனம். பொறாமையில் கொதித்துப் போயிருக்கும் இதயம். அங்கிருந்து இனிய நாதமாக ஆரம்பித்து, குழப்பங்களைக் கொட்டி, இறுதியில், அன்னத்தை நோக்கி, "ஊர்திரை நீர்வேலி உழக்கித்திரிவாள்பின் சேரல் நடை ஒவ்வாய்" என்று மாதவியின் பிறப்பைச் சுட்டிகாட்டி முடிக்கின்றான். கற்புக்கரசி மனைவி கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் பன்னிரண்டு ஆண்டுகள் உடன் வாழ்ந்திருக்கின்றான். மணிமேகலை என்ற பெண் மகவைப் பெற்று பெரு விழாவும்

நடத்தியுள்ளான். அப்பொழுது காணாத குலக்குணத்தை இப்பொழுது என்ன புதிதாகக் கண்டுவிட்டான் மனிதன் கோபவயப்படும்பொழுது தன் சுய அறிவை இழந்து விடுகின்றான்.

இன்றும் நம்மிடையே காணும் காட்சி..கணவனுக்குக் கோபம் வந்தவுடன் "உன் குடும்ப லட்சணம் தெரியாதா...உன் ஊர் புத்தி தெரியாதா..? என்று மனைவியைக் கடிந்து கொள்வது தொடர்ந்து வரும் கதை.

(தொடரும்...)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |