Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
மனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே - பாகம் : 5
- ஹஸ்தம்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

அன்பு மனிதனைச் செம்மைப்படுத்தும். ஆனால் ஆசை மிஞ்சும் பொழுது மனிதனை விலங்காக்கிவிடும். ஆசையின் பிள்ளைகள்தான் கோபமும்,பொறாமை,வெறுப்பு எல்லாம்.
 
சீதையைக் காணும் முன் அன்பின் பிடியில் இராமன் இருந்தான்.அக்கறையுடன் அவளைச் சீரோடு கூட்டி வரச்சொல்கின்றான். அழகு மயிலாய் வந்தபொழுதோ ஆத்திரப் பேய் பிடித்துக் கொண்டது. "இந்த அழகை இராவணனும் ரசித்துவிட்டான். எத்தனை மாதங்கள் சிறை வைத்திருந்தான். ஓடி ஓடிப் பார்த்திருக்கின்றான். நெஞ்சிலே அவளைச் சுமந்திருந்தானே. மேனியழகில் மயங்கி எவ்வாறெல்லாம் கற்பனை செய்திருப்பான்.." இராமனனின் மனம் குரங்காய்க் குதிக்க ஆரம்பித்துவிட்டது. குரங்கினமே அவனைத் தொழுது நிற்க, அவன் தன் மனத்தை அடக்கத்தவறி விட்டான்.

இராமனின் மனநிலையை மண்டோதரி வாயிலாகக் கம்பன் வெளீப்படுத்துகின்றான்.
 
மாண்டு விட்ட மணாளனைக் காண இராவணன் மனைவி மண்டோதரி போர்க்களம் வருகின்றாள். விழுந்து கிடக்கும் கணவனைக் கண்டு கதறுகின்றாள். இராவணன் உடலில் எப்பகுதியிலும் சீதையின் நினைவு இருக்கக் கூடாதென்று உடலையே சல்லடையாக்கி இருந்தான் இராமன்.

"கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்  உள்ளிருக்குமோ எனக்கருதி, உடல் புகுந்து, தடவினவோ ஒருவன் வாளி"

மண்டோதரியின் வார்த்தைகளில் இராமனின் மனத்தைப் படம் பிடித்துக் காட்டி விட்டான் கவிஞன். சாதாரண மனித நிலையிலும் தாழ்ந்து விட்டான் இராமன். சீதை சிறை பிடிக்கப்பட மூல காரணம் யார் ? சூர்ப்பனகை வருகின்றாள். சீதை இருப்பதால் இன்னொரு பெண்ணைச் சேர்க்கமுடியாதது போன்ற ஒர் உரையாடல் நிகழ்த்தியது யார் ? சீதை இல்லாவிட்டால் இராமன் கிடைப்பான் என்று வந்தவள் நினைக்க சீதை காரணமில்லை. கோபக்கார லட்சுமணனிடம் அனுப்பியது யார் ? மூக்கரிபட்டு, முலையிழந்து ஓர் சகோதரி முன் வந்தால் அண்ணனின் மன நிலை எப்படி இருந்திருக்கும் ?

அவனுக்குப் பழி வாங்கும் உணர்ச்சி ஏற்பட முதல் காரணம் யார் ? எதையும் சிந்திக்கும் நிலையில் இராமன் இல்லை. விசாரணை இல்லை. பார்த்ததும் பழி சுமத்தி விட்டான். கட்டிய கணவனே மனைவியை மான பங்கப்படுத்தும் கொடுமை நிகழ்ந்து விட்டது. அடுக்கடுக்காய்ப் பதில்கள் சீதை கூறினாலும், இராமன் கொட்டிவிட்ட தீச்சொற்கள் அவளைச் சிதைத்து விட்டது. நெருப்புக் குழியில் இறங்குகின்றாள். கொதித்துப் போயிருந்த அவள் இதயச் சூட்டினில் அக்கினிக்கடவுள் தாங்க முடியாமல்  அந்தக் கற்புக் கனலைத் தாங்கி வந்து இராமன்முன் சேர்க்கின்றான் அப்பொழுதும் இராமன் வார்த்தைகளைக் கொட்டுகின்றான்.சுற்றி நிற்கும் தேவர்கள்,முனிவர்கள் சீதைக்காகப் பரிந்து பேசும் சூழ்நிலை பாராட்டத்தக்கதல்ல.
 
இந்த அரங்க நிகழ்வுகளுக்குச் சிலர் கூறும் சமாதானங்களைப் பார்க்கலாம்.

(தொடரும்...)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |