Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
மனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே - பாகம் : 6
- ஹஸ்தம்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

இராமனின் பதட்டத்திற்குக் காரணம் ஊர்ப் பழி. வனவாசம் முடியவும் மன்னனாகப் போகின்றவன். தன் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாத பதவி. ஊர் கூடியிருக்கின்றது. பலர் முன்னிலையில் பிரச்சனை பேசவேண்டி வந்து விட்டது. வந்திருப்பவள் ஓர் பெண்.அதிலும் சிறை பிடிக்கப்பட்டு பல மாதங்கள் துன்பத்தில் உழன்றவள். மென்மையான அணுகுமுறை வேண்டும். இராமன் மன்னன் மட்டுமல்ல. அவள் கணவன். இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்கக் கடமைப் பட்டவன். இத்தனை பொறுப்புகள் அவன் மீது இருக்க அவன் இதனை எப்படி கையாண்டிருக்க வேண்டும்.

கணவன் மனைவி உறவில் நம்பிக்கை தான் அச்சாணி. சீதை வந்தவுடன், "பெண்ணே,நான் உன் கணவன். உன் கற்பில் எனக்கு நம்பிக்கை உண்டு.ஆனால் சிறிது காலம் மாற்றான் வீட்டில் சிறை இருந்து விட்டாய் உன்னை என் மனைவி என்று ஏற்றால், நீ அரசுபீடத்தில் அமர வேண்டியவளும் ஆகின்றாய். அதற்கு உன்னைத் தகுதியானவள் என்று நீ நிரூபிக்கவேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றாய். நீ குற்றமற்றவள் என்று நிரூபித்தால்மட்டுமே உன்னை நான் ஏற்க இயலும்" என்று இராமன் பேசியிருக்க வேண்டும்.

மனம், காயம் இரண்டிலும் மாசடைந்த அகலிகையை அவள் கணவன் ஏற்றுக்கொள்ள, "நெஞ்சினால் பிழைபில்லாளை நீ அழைத்திடுக" என்று வேண்டிக் கொள்கின்றான். அகலிகையை மாசு அறு கற்பின் மிக்க அணங்கிணாள் என்கின்றான். ஒரு சமயம் இராமன்,ச £தையை இழந்தாலும், இலக்குவனை இழந்தாலும், ஏன் தன் உயிரை இழந்தாலும் சத்தியம் தவறமாட்டேன் என்று கூறியவன். அன்று அகலிகையைக் கற்பு மிக்கவள் என்று சொன்னதும், இன்று கற்புக்கனலை எல்லாம் இழந்தவள் என்று கூறுவதும் இராமனைப் பொய்யனாக்காதா ? உலகப் பழிக்குப் பயந்தவன், தன் மனவிமேல் அவனே சேற்றை அள்ளி வீசலாமா? சிறை பிடிக்கப் பட்டது ஊர்ப் பழிக்கு வித்தானால் அவன் பேச்சு,அதற்குத் தண்ணீரும் உரமும் போல் ஆகாதா? "நெருப்பில்லாமல் புகையுமா" என்று முணுமுணுக்கும் மனத்திற்குத் துணை போனதால்தான் மீண்டும் புரளி ஏற்பட்டு, கர்ப்பிணிப் பெண் காட்டிற்குப் போக நேர்ந்தது.மகாபாரதத்தில் திரெளபதியைத் துச்சாதனன் சபைக்கு இழுத்து வருகின்றான். இங்கே சிங்காரித்து மரியாதையுடன் அழைத்து வரப்படுகின்றாள். பலி மேடைக்குச் செல்லும்முன்னர் ஆட்டினைச் சிங்காரித்து அழைத்து வருவதைப்போல் அழைத்து வந்து ஒர் அபலைப் பெண் அவமானப் படுத்தப் பட்டாள். மானமிழந்தவள் என்ற குற்றச்சாட்டிற்காக திரெளபதி சபைக்கு வரவில்லை. அவள்மேல் கணவன் குற்றம் சுமத்தவில்லை.

அங்கு குற்றவாளி தர்மர். அதாவது அவள் கணவன். இங்கு நிலையே வேறு .தேவரும் முனிவரும் மற்ற பெரியவர்களும் ஊர் பொது மக்களும் கூடியிருக்கும் சபையில் திருமணம் நிகழலாம். ஆனால் கணவனே, "நீ எல்லாம் இழந்து விட்டாய். எனக்களிக்க மிச்சம் ஒன்றும் இல்லை. நீ செத்திருக்க வேண்டும். நீ மண்ணில் நெளியும் புழு. நாங்கள் உயர் குலம். பெண்ணின் பெருமை, கற்பின் திண்மை, ஒழுக்கம், சீர்மை எல்லாம் உன் ஒருத்தியால் பாதிக்கப்பட்டுவிட்டது. "என்று ஊர்ச் சபையில் கூறும் கொடுமை வேறு எங்கு நிகழ்ந்திருக்க முடியும். மகாபாரதத்தில் கண்ணன் துயில் கொடுத்து மானம் காத்தான். மனைவி மீது அங்கு களங்கம் சுமத்தப் படவில்லை. இங்கு கணவனே மானபங்கப் படுத்திவிட்டான்.

இன்னொரு சாரார் கூறும் சமாதானம்..கானகத்தில் சீதை இலக்குவனைச் சொல்லால் சுட்டாள்.சொல்லின் வலிமையை சீதை உணரவேண்டுமென்றுதான் இராமன் அவ்வளவு கடுமையாகப் பேசினான் என்பது.

(தொடரும்...)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |