Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
மனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே - பாகம் : 7
- ஹஸ்தம்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

சீதை-இலக்குவன் உரையாடல் இருவர் மத்தியில் நடந்தது இதற்குப் படிப்பினையாக இதனைக் கூறுவது சரியல்ல.இது நடுத்தெரு நிகழ்ச்சி. பல மனங்களில் விஷ வித்து விதைக்கப் பட்ட களமாகி விட்டது. தீர ஆராயாமல் தீர்ப்பு வழங்கியதற்குத் தன் உயிரை நீ¢க்கிக்கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் ஓர் அவதாரப் புருஷன் அல்ல. மிகச் சாதாரணமான மன்னன்.இங்கு உதாரண புருஷன் முறையாக விசாரிக்கமல் தீர்ப்பு கூறிவிட்டான்.
    
ஆக, இராமன் தன் மன்னன் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்பதுடன், பல ஆண்டுகள் உடன் வாழ்ந்த மனைவியைப் புரிந்து கொள்ளாமல் காப்பாற்ற வேண்டியவனே பெண்மைக்குப் பாதகம் செய்த கணவனும் ஆகிவிட்டான்.
    
இன்னொருவர் என்னிடம் நேரில் கூறியது, "தசரதன் உயிர்விடும் பொழுது கைகேயி,பரதன் உறவுகளை உதறி விட்டதாகக் கூறி மறைந்தார். இராமன் ஆளும் இராச்சியத்தில் யாரும் மனக்குறையுடன் இருக்கக்கூடாது என்று இராமன் நினைத்தான். தயரதன் மீண்டும் மண்ணுலகம் வந்து நடந்துவிட்ட தவறுகளை மன்னிப்பதுடன், வெறுப்பு மாறி மீண்டும் அவர்களைக் குடும்பத்தில் சேர்க்க வேண்டும் என்ற விருப்பத்தாலும் தொடர்ந்து சீதையைக் காயப்படுத்தினான் என்று கூறுவது பொருந்தவில்லை. மனப்புண்ணுடன் சீதை வாழ்ந்ததால்தான் பூமி வரண்டது. ஆனால் அப்பழியும் சீதைமேல் விழுந்து கானகத்திற்குக் கர்ப்பிணிப் பெண்ணாக நுழைய நேரிட்டது. எல்லோருக்கும் முன்னும் வசைச் சொற்களை ஒரு கணவன் உதிர்த்தது அவளைச் சிதறஅடித்துவிட்டது.மனிதத்தன்மையற்ற செயலை மறக்கமுடியாது.
    
அக்கினிப்பிரவேச அரங்கினுக்குள் நுழைந்து வந்திருக்கின்றோம்.
    
இராமன் இப்படி பேசியிருக்க முடியுமா என்ற கேள்வியுடன் நம் சிந்தனையைத் தொடர்வோம். சில குறும்புத்தனம் செய்திருக்கின்றான். சின்னத் தவறுகளும் செய்திருக்கின்றான். துன்பம் நேர்ந்த பொழுது துவண்டு போயிருக்கின்றான். அவன் பதினான்கு ஆண்டுகள் கானகத்திற்குப் போகவேண்டும் என்று அறிந்த பொழுதும் அவன் முகம் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரைபோல் மலர்ந்தே இருந்தது. வாலியை வதைக்கு முன்னர் அவன் தயங்கினான். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தன்மேல் பழியேற்று வாலியை மறைந்திருந்து தாக்கினான். விழுந்து கிடந்த வாலி சொல்லம்புகளால் இராமனைத் தாக்கிய பொழுது பொறுமையாகப் பதிலிறுத்தான். உயிர்போகும் முன்னாரே தந்தைக்கு நிம்மதி தர அங்கதனை கெளரவமாக ஏற்றுக்கொண்ட கருணை மனம் படைத்தவன் இராமன். சரணம் என்று வந்தவர்களை அணைத்துக் கொள்ளும் பண்பாளன். ஓடக்காரன் குகனோ, வானர சுக்கிரீவனோ, எதிரி முகாமிலிருந்து வந்த விபீடனோ, எல்லோரையும் தன் சகோதரர்களாக ஏற்றுக் கொண்ட பாசமனம் படத்தவன். தந்தைசொல் மிக்க மந்திரம் அவனுக்கு வேறு கிடையாது. தாடகை ஓர் அரக்கியென்றாலும் ஓர் பெண் என்பதால் கொல்லத்தயங்கிய மென்மை இதயம் கொண்டவன். பக்தனை அணைத்து ஆசியளிப்பதாக இறைவனைக் காட்டுவதைப் பார்த்திருக்கின்றோம்.

(தொடரும்...)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |