Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
மனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே - பாகம் : 8
- ஹஸ்தம்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

இராமனோ அனுமனின் பிடிகளுக்குள் இன்பம் கண்டவன். அனுமனிடம் எப்பொழுதும் கடனாளியாக இருக்க விருப்பம் தெரிவித்தவன். நன்றியுணர்விற்கு அவன் கொடுத்த மரியாதை. அவன் செய்த சிறு பிழை சூர்ப்பனகையை இலக்குவனிடம் அனுப்பியது. அரக்கியின் தொடர்ந்த பயமுறுத்தலில் அஞ்சிப்போன சீதையைப் பார்க்கவும் அவசரப்பட்டுவிட்டன். ஆசையில் எற்பட்ட சறுக்கல். போர்க்களத்தில் கூட எல்லாம் இழந்து நின்ற இராவணனைப் பார்த்து "இன்று போய் நாளை வா" என்று கூறிய பெருந்தகையாளன். கதையின் ஆரம்பித்திலிருந்து எங்கும் அவன் கொதித்து எழுந்து நாம் பார்க்கவில்லை. கடும்சொல் பேச்சும் கேட்கவில்லை. அமைதியானப் பாத்திரப் படைப்பாய்க். கதைமுழுவதும் இயங்கிவந்த இராமன், இந்த அக்கினிப்பிரவேசக் காட்சியில் பொருந்தவில்லை.குறைகளை மொத்தக் குத்தகை எடுத்த ஓர் ஆத்திரக்காரனை, அன்பே வடிவான சீதாராமனுடன் ஒன்று சேர்த்துப் பார்க்க இயலாது. இலக்கியம் படைப்பவர்களுக்கு இந்த முரண்பாடு நன்கு புரியும். தவறு நிகழ்ந்திருக்கின்றது. அதனையும் முடிந்தமட்டில் பார்க்கலாம்.

இராம கதை, நிகழ்ந்த ஒன்றா அல்லது கற்பனையா என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். ஆனால் இராமன் வாழ்ந்த காலமும் வால்மீகி வாழ்ந்த காலமும் வேறாக இருக்கலாம். மூலக் கதை முன் வைத்தவர் வால்மீகி. மகாபாரதப்போர் நடந்த காலத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு எழுதியதைப் பார்க்கின்ற பொழுது ஏறத்தாழ கி.மு.3139 என்று குறித்துள்ளார்கள். இதற்கும் முன் வேதம் தோன்றிய காலம், அதற்கும் முன் இராமயணம் நிகழ்ந்திருக்க வேண்டும். 6000 ஆண்டுகளுக்கு முன்னர் சமுதாய அமைப்பு, அவர்களிடையே இருந்த கலாச்சாரங்களை இராமாயண நிகழ்வுகளுடன் முடிந்த அளவு ஒப்பிட்டுப்பார்க்கலாம்.

மனிதன் விலங்கினைப்போல் வாழ்ந்து ,பின்னர் படிப்படியாய் நாகரீகம் அடந்ந்து, கூட்டு வாழ்க்கை சமுதாயமாக மாறி, தனக்கென ஓர் நிறுவனம் அமைத்துக் கொண்டான். அதுவே குடும்பம் என்று ஆயிற்று. தன் உழைப்பின் பலனைத் தன்னுடைய வாரிசுகளுக்குச் சேரவேண்டுமென்ற கருத்தில், பொது நிலையிலிருந்த பெண்ணை உற்பத்திக் காரணியாய் மாற்றி ,குடும்பத்தில் தலைவனுக்குத் தலைவியாகும் தனி நிலை பெற்றாள்.

குடும்பத்தலைவிக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தன் கணவனின் குறைகளைக் கடவுளிடம் கூறினால்கூட அவள் கற்புக்குக் குறைவு. சங்க இலக்கியத்தில் ஓர் பெண் எந்த அளவு பேசலாம் என்று பல பாடல்களில் குறிப்பு வருகின்றது. அதே போன்று உயர் குலப் பெண்டிற்குக் கற்பு இன்றியமையாதது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குடிப்பிறப்பில் பிரிவினைகளும் காணப்படுகின்றன.

இராமனின் கதை நிகழ்வுக்குப் பின்னர் மகாபாரதக் கதை தொடர்கின்றது.அப்பொழுது இருந்த சமுதாய அமைப்பை அக்கதை கொண்டே பார்க்கலாம். மன்னர் திருதராட்டிரரும், பாண்டுவும் வியாசருக்குப் பிறந்தவர்கள். பாண்டவர்களும் பாண்டுவிற்குப் பிறந்தவர்களல்ல. திரெளபதிக்குக் கணவர்கள் ஐவர். அக்காலத்தில் இவைகள் உயர்குடியில் நடந்தவைகள். அப்பொழுது ஊர் அவர்களைப் பழிக்கவில்லை. அன்றைய சமுதாய அமைப்பினை வைத்துக் கருத்து கூறவேண்டும். இராமாயணம் இதற்கு முன் நிகழ்ந்திருக்கின்றது. மாற்றான் சிறையில் இருந்ததால் மாசுபட்டவளாக ஊர் பழி சுமத்தி இருக்காது. துச்சாதானன் திரெளபதியைத் தொட்டு, பிடித்து இழுத்து வந்தான். அதனால் அவள் கற்பு போய்விட்டதாகக் குறை கூறவில்லை.

அதனால்தான் வால்மீகியும் சீதையைத் தொட்டுத் தூக்கிச் சென்றதாக எழுதியுள்ளார். "கற்பு'எனும் கட்டுப்பாடு மகாபாரதக் காலத்திற்குப்பின் வந்திருக்க வேண்டும். எனவே அக்கினிப் பிரவேச அரங்கத்தில் பிற்காலச் சேர்க்கைகள் இருப்பது புலனாகின்றது. வால்மீகி இராமாயணத்தில் "இனி உன்னைச் சேர்த்துக் கொள்ளமுடியாது. உன் விருப்பம்போல் யாருடனும் இருக்கலாம்"என்று இராமன்  இறுதியாக சீதையிடம் கூறுகின்றான். காலத்தை ஒட்டிய பேச்சு.

(தொடரும்...)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |