Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
புதையல் தீவு - பாகம் : 10
- பா.ராகவன்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (புதிது)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

தனக்கு எங்கிருந்து அத்தனை துணிச்சல் வந்தது என்று பாலுவுக்கே ஆச்சர்யமாக இருந்தது. உடலில் அசாதரணமான பலமும் மனத்தில் அளவற்ற துணிச்சலும் பொங்கிக்கொண்டிருப்பதாக அவன் உணர்ந்தான். ஏதோ ஒன்று பெரிதாக சாதிக்கப்போகிறோம் என்று நிச்சயமாக அவனுக்குத் தோன்றியது. ஆனால் அது என்ன?

சாதிப்பதெல்லாம் அப்புறம் இருக்கட்டும். முதலில் இந்த மறைவிடத்திலிருந்து, நூறடி தொலைவில் தெரியும் படகை எப்படி அடைவது? ஏதோ உந்துதலில் ஓட ஆரம்பித்துவிட்டான். ஆனால் ஓடத்தொடங்கி, பத்தடி தூரம் கூடக் கடந்திருக்காது. அதற்குள், 'சே, இதென்ன பைத்தியக்காரத்தனம்! வெட்ட வெளியில், கடற்கரை மணலில் ஓடினால் குண்டர்களுக்குத் தானே கூப்பிட்டு விருந்து கொடுப்பது போலாகிவிடாதா' என்று புத்தியில் உறைக்க, சட்டென்று அப்படியே தரையில் குப்புறப் படுத்துக்கொண்டான்.

இருட்டு. நல்ல இருட்டுதான். அப்படியொன்றும் துல்லியமாக அவன் அங்கே படுத்திருப்பதைப் பார்த்துவிடமுடியாதுதான். அதுவும் அவர்கள் புதையலை இழுத்துக்கொண்டு படகை நோக்கி வரப்போகிற தூரத்தைக் கணக்கிட்டால் அவன் அங்கே இருப்பது ஒரு பொருட்டே அல்ல. ஆனாலும் ஆபத்து, ஆபத்துதானே! ஒருத்தன் கண்ணில் பட்டுவிட்டால் கூட ஆபத்துதான். கதைகளில் வருவதுபோல, படகிலிருந்து யாரும் டார்ச் அடித்துப் பார்க்காமல் இருக்கவேண்டும். அது ஒரு அவ?தை.

இவ்வாறு எண்ணியபடியே பாலு படுத்தவாக்கில் தவழ்ந்து, தவழ்ந்து முன்னேறத் தொடங்கினான். ஒரு பாம்பு போல வயிற்றால் நகர்ந்து முன்னேறிப் படகை அடைந்துவிடவேண்டும் என்பதே அவன் நோக்கம். ஆனால் உடம்பு ஒத்துழைக்க மறுத்தது. முகம் ஒரு பூசணிக்காய் அளவில் இருக்கிறது. தொப்பையோ, பொங்கலுக்கு வைக்கிற பானை மாதிரி. கைகளும் கால்களும் நல்ல குண்டு குண்டாக கிழங்கு வெட்டி எடுத்ததுபோல! சே. இத்தனை குண்டாக இருக்கிறேனே, உடம்பு நகரமாட்டேனென்கிறதே என்று அவனுக்கு அழுகையாக வந்தது. போதாத குறைக்கு இந்த சோடாபுட்டிக் கண்ணாடி வேறு! நாலடி நகர்வதற்குள் மூச்சிறைத்தது. ஒரு பயனற்ற முயற்சியைச் செய்கிறோமோ என்கிற சந்தேகமும் வந்தது. வேண்டாத கவலையாக, அங்கே இருட்டறையில் அடைபட்டிருக்கும் தன் நண்பர்கள் என்ன ஆனார்களோ என்றும் கொஞ்சம் கலவரமடைந்தான்.

இதனிடையில், பூதம் பூதமாக கனத்த புதையல் 'உருவங்களை' புதரிலிருந்து வெளியே தோண்டி எடுத்த குண்டர்கள் அவற்றைக் கயிறு கட்டி இழுத்து வந்தார்களல்லவா? அவர்களும் மணல்வெளியின் எல்லைக்கு வந்துவிட்டார்கள். மரங்களின் மறைவிலிருந்து அந்தக் கூட்டம் வெளியே வந்துவிட்டதை பாலு பார்த்தான். அவர்களூக்கென்ன? புதையலை உருட்டிக்கொண்டு விறுவிறுவென்று நடந்து படகை அடைந்துவிடுவர்கள். ஆனால் தான் எப்படி அவர்களுக்கு முன்னால் படகின் அருகே போவது? அந்தப் புதையல் என்னவென்று எப்படி அறிந்துகொள்வது? அதுவும் அவர்கள் யாரும் பார்க்காதபடியும் நடந்துகொள்ளவேண்டும். வெட்டவெளிவேறு! என்னதான் செய்யப்போகிறோம் என்பதே அவனுக்குப் புரியவில்லை. பெரியதொரு ஆபத்தில் சிக்கிக்கொள்ளவிருக்கிறோம் என்று மட்டும் உறுதியாகத் தோன்றியது.

உயிரே போனாலும் எடுத்த காரியத்தை முடிக்காமல் பின்வாங்குவதில்லை என்று முடிவு செய்துகொண்டவனாக முன்னைக்காட்டிலும் வேகமாகப் படகை நோக்கித் தரையில் தவழத் தொடங்கினான்.

சரியாக ஐந்து நிமிடங்கள். மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க ஒரு வழியாக யாரும் தன்னைப் பார்க்காமலேயே அவன் படகின் அருகில் வந்து சேர்ந்தான். வியர்வையும் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த மணலும் மிகவும் உறுத்தியது. எழுந்து தட்டிக்கொள்ளவெல்லாம் சந்தர்ப்பம் இல்லை. இப்போது படகில் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும்.

அவன் படகிலிருந்து ஐந்தடி தூரத்தில் இப்போது இருந்தான். கும்மிருட்டில் படகே ஒரு பூதம் போலத்தான் தெரிந்தது. கன்னங்கரேலென்ற உயர்ந்த உருவமாக! அந்தப் படகுக்கு நேர் பின்னால் கடலில் ஐம்பதடி தொலைவில் ஒரு மோட்டார் படகு நின்று கொண்டிருப்பதையும் அவன் பார்த்தான்.

உடனே அவனுக்கு வி?யம் விளங்கிவிட்டது. மோட்டார் படகு கரைக்கு வரமுடியாது. இந்தப் பகுதியில் ஆழம் குறைவு. வந்து சிக்கிக்கொண்டால், திரும்பப் போகாது. ஆகவே மரப்படகில் புதையலை ஏற்றி அதை மோட்டார் படகின் அருகே கொண்டு போகப்போகிறார்கள்! பிறகு அதை மோட்டார் படகில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுவிடுவார்கள்.

மூச்சு விடும் சத்தம் கூடக் கேட்காதவாறு அவன் மரப்படகின் அடியே தவழ்ந்து வந்தான். படகின் மேல் யாரேனும் இருக்கிறார்களா என்று நோட்டம் பார்த்தான். அதிர்?டவசமாகப் படகில் வந்தவர்களும் இறங்கி, புதையலை இழுத்துவரப் போயிருக்கவேண்டும். படகு தன்னந்தனியாகத்தான் கரையில் இருந்தது. ஆகவே பின்புறமாகச் சுற்றித் தவழ்ந்து சென்று படகில் ஏறுவதற்காக எழுந்து நின்றான்.

இதற்குள் குண்டர்களின் படை படகின் அருகே வந்துவிட்டிருந்தது.  முன்புறத்தில் 'மெதுவா, மெதுவா, பாத்து தள்ளு, நீ நகர்ந்துக்கடா... கொஞ்சம் பக்கவாட்டுல வழி விடு' என்று என்னெல்லாமோ குரல்கள் கேட்டன. எப்படியும் இருபதடி தூரத்துக்குள் அவர்கள் வந்திருப்பார்கள் என்று பாலு யூகித்தான். படகின் பின்புறம் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றைப் பிடித்து மெல்ல எழும்பி, படகின் முதுகில் கால் வைத்து ஒவ்வோர் அடியாக உயர்ந்து மேலே ஏறி படகின் விளிம்பைப் பிடித்தான். சட்டென்று, இதென்ன பைத்தியக்காரத்தனம்! தானே வலிந்துபோய் அவர்களிடம் மாட்டிக்கொள்வது போலச் செய்கிறோமே என்று தோன்றிவிடவே, படகின் மீது ஏறாமல், கயிற்றைப் பிடித்துத் தொங்கியபடியே நடப்பதை கவனிக்கலாம் என்று முடிவு செய்தான்.

குண்டர்கள் படகின் அருகே வந்துவிட்டார்கள். "?ுப்...?ூப்... ம்ம்.... ஏத்து.... ஏத்து... தூக்குடா.... ஆங்ங்ங்... ஓவ்" என்று சத்தமெழுப்பியபடியே அவர்கள் புதையலைத் தலைக்கு மேலே தூக்குவது போலத் தூக்கிப் படகினுள்ளே பொத்தென்று போட்டார்கள். 'டம்' என்று சத்தம் கேட்டது. ஒன்று. இன்னொரு டம். இரண்டு. இன்னும் ஒரு டம். மூன்று.

ஆக, மூன்று புதையல்கள்!

பாலுவுக்கு இப்போது ஓரளவு தெளிவாக யோசிக்க முடிந்தது. அவர்கள் இழுத்து வந்தது பூதமல்ல. புதையலுமல்ல. ஏதோ ஒரு பெரிய இரும்பு டிரம். அல்லது கேன். உருளை வடிவானது. ரே?ன் கடைகளில் பார்ப்போமே, மண்ணெண்ணெய் வைத்திருக்கும் டிரம் மாதிரி... எப்படித்தான் இழுத்துவந்து தூக்கிப் படகில் போட்டார்களோ! சத்தமே அதன் கனத்தைச் சொன்னது.

ஆ?ா! புதையல் என்ற பெயரில் இவர்கள் என்னவோ கடத்தல் வேலையல்லவா செய்கிறார்கள்!

பாலுவுக்குத் தன் கண்டுபிடிப்பு சரிதானா என்று பார்த்துவிடும் உத்வேகம் எழுந்தது. இதுதான் எல்லை. இதுதான் க்ளைமாக்?! இப்போது விட்டால், இவர்களது திருட்டுத்தனத்தை அப்புறம் நேரில் பார்த்தறிய முடியாமல் போய்விடும்.

ஒருகணம் யோசித்தான். பிறகு என்ன ஆனாலும் சரி என்று பிடித்துக்கொண்டிருந்த கயிற்றை இன்னும் இழுத்து, காலால் படகை உந்தி உந்தி மேலே ஏறி, தானும் தொப்பென்று படகினுள் குதித்தான்.

ஒரு வினாடியில் அவர்கள் கண்ணில் தாம் பட்டுவிடுவோம் என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. அதற்குள் அந்தப் புதையல் டிரம்மில் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவது என்று விழுந்ததைக் கூடப் பொருட்படுத்தாமல் அப்படியே உருண்டு அந்த டிரம்மை அடைந்தான். அவசர அவசரமாக முகர்ந்து பார்த்தான். அதன் வாய்ப்பகுதியில் அவனுக்கு விடை கிடைத்தது.

பெட்ரோல்!

ஓ, இவர்கள் புதையல் எடுக்கவில்லை... பெட்ரோல் கடத்துகிறார்கள்!

இதெல்லாமே அரை வினாடிக்கும் குறைவான நேரத்தில் பாலுவுக்குப் புரிந்துவிட்டது. அதற்குள் குண்டர்கள் அவனைப் பார்த்துவிட்டார்கள்.

படகுக்குள் விழுந்தவன் தப்பிப்பதாவது!

"டேய்! அங்க பாருடா!" என்றான் ஒரு குண்டன்.

"ஒண்ணுக்குப் போறேன்னு வந்த பொடியன் தானே இவன்!" என்றான் இன்னொருவன்.

"என்னப்பா தம்பி? பெரிய சிஐடி ஆபீசரா நீயி?" என்று இளக்காரமாகக் கேட்டான் இன்னொருவன்.

"பாவம், சிஐடி தம்பி! இப்ப கடலுக்குள்ளார ?லசமாதி ஆகப்போறாரு" என்றான் வேறொருவன்.

"திட்டம்போட்டு வந்திருக்காங்கடா.. சும்மா விடக்கூடாது இந்தப் பசங்களை" என்றான் முதலில் பேசியவன்.

"இவனை அப்படியே படகுல ஏத்திக்கிட்டுப் போய் நடுக்கடல்ல தள்ளிடலாம். அது பிரச்னை இல்லை. மத்த ரெண்டு பசங்க அங்க ரூம்புல இருக்கானுக இல்ல? அவனுகளை நீ கவனிச்சிக்க. அடிச்சிக் கொன்னு வீசிட்டுப் போயிடு" என்று தன் அடியாளுக்கு உத்தரவிட்டான் தலைமைக் குண்டன்.

படகில் நான்கு குண்டர்கள் ஏறிக்கொண்டார்கள். அவர்களுள் ஒருவன் பாலுவின் அருகே வந்து தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டான்.

"சரி, வரோம்" என்று புறப்பட்டார்கள். கரையில் இருந்த மற்றவர்கள் படகைப் பிடித்துத் தள்ள, அது மெதுவாகக் கடலுக்குள் இறங்கி மிதக்க ஆரம்பித்தது. பிறகு நகரத் தொடங்கியது.

பாலுவுக்கு அடிவயிற்றிலிருந்து பயம் ஒரு பந்துபோல் திரண்டு மேலேறி வந்து தொண்டையை அடைத்தது.

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |