Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
புதையல் தீவு - பாகம் : 11
- பா.ராகவன்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (புதிது)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

குண்டர்களின் இரும்புப்பிடியில் பாலு அகப்பட்டுக்கொண்ட அதே சமயம், அங்கே பாழடைந்த பங்களாவில் இருட்டு அறையில் தனியே இருந்த குடுமி நாதனும் டில்லிபாபுவும் என்ன நடக்கிறது, பாலு எங்கே போனான் என்றே புரியாமல் குழம்பித் தவித்துக்கொண்டிருந்தார்கள்.

குடுமி, "நிச்சயம் அவன் ஒண்ணுக்குப் போவதற்காகப் போகலைடா டில்லி. எனக்கென்னவோ, அவன் இவங்களை உளவு பார்க்கறதுக்குத்தான் வெளில தப்பிப் போயிருக்கான்னு தோணுது. இல்லாட்டி, அரை மணிநேரமாவா ஒருத்தன் ஒண்ணுக்குப் போவான்?" என்றான்.

"கரெக்டு. எனக்கும் அப்படித்தான் தோணுது. ஆனா இந்த குண்டன் ஏன் இப்படி செய்யணும்? நமக்கும் ஒரு வார்த்தை சிக்னல் குடுத்திருந்தா, நாமும் கூடப் போயிருக்கலாமில்ல?" என்று அங்கலாய்த்தான்.

"இருக்கலாம். அவன் ரகசியமா எதையாவது நமக்குக் குறிப்பால் உணர்த்தியிருக்கலாம். நாம் கவனிக்கத் தவறியிருப்போம். இப்ப அதைப் பேசிப் பிரயோ?னமில்லை. முதல்ல இங்கேருந்து தப்பிச்சாகணும். அதுக்கு எதனா வழி சொல்லு" என்றான் குடுமி.

"இனிமே வழிகிழியெல்லாம் பார்த்துட்டிருந்தா முடியாது. எப்படியும் இந்நேரம், அந்தப் புதையல் என்ன, இவங்க யாரு, என்ன செய்யறாங்கன்னு பாலு கண்டுபிடிச்சிருப்பான். அவனுக்கு எதாவது ஆபத்து வந்தாலும் வந்திருக்கலாம். நாம கதவை உடைச்சிக்கிட்டு ஓடிடவேண்டியதுதான். முதல்ல பாலுவைப் பார்த்துடணும். அப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்" என்றான் டில்லி.

இருவரும் ஒரு முடிவுடன் எழுந்து, இருளில் நடந்து வந்து அந்த அறையின் கதவருகே நின்று லேசாகத் தொட்டார்கள். யாரும் இல்லாவிட்டால் கதவை மோதித் திறக்கப் பார்ப்பது, அல்லது அறையின் ஒரு ஓரத்தில் இருந்த ஒரே ஒரு சன்னலை உடைத்து எடுத்து வெளியே குதித்துவிடுவது என்று திட்டமிட்டிருந்தார்கள்.

ஆனால், அதற்கெல்லாம் அவசியமே இல்லாதவகையில், அந்த அறையின் கதவு தொட்டதுமே திறந்துகொண்டுவிட்டது!

"அதிர்?டம்டா நமக்கு" என்றான் டில்லி.

யாரும் வழியில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டவர்கள், 'ஒன், டூ, த்ரீ' என்று தமக்குத்தாமே சொல்லிக்கொண்டு ஒரே பாய்ச்சலில் தடதடவென்று இறங்கி, வெளிக்கதவை அடைந்து பாய்ந்து வெளியேறி, கண்ணை மூடிக்கொண்டு தலைதெரிக்க ஓட ஆரம்பித்தார்கள்.

சுமார் ஐம்பதடி தூரம் ஓடியபிறகுதான் அவர்கள் நின்று திரும்பிப்பார்த்தார்கள். சே, எல்லோரும் தான் புதையலை எடுக்கப் போயிருப்பார்களே, இங்கு யாருக்காகத் தாங்கள் இப்படி பயந்தோம் என்று அவர்களுக்கே ஒரு கணம் வெட்கமாக இருந்தது.

சரி, உடனடியாக பாலுவைச் சந்திப்பதுதான் முக்கியம். அவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று மீண்டும் நினைவூட்டினான் டில்லி.

"என்னடா செய்யலாம்?"

"ரெண்டே ரெண்டு சாத்தியங்கள்தான் குடுமி. ஒண்ணூ, பாலு புதையல் ரகசியத்தைக் கண்டுபிடிச்சிட்டு, பாதுகாப்பா எங்கயாவது பதுங்கியிருக்கலாம். அல்லது, ரகசியம் தெரிஞ்சிக்கிட்டு குண்டர்கள் கிட்ட மாட்டிக்கிட்டிருக்கலாம். முதலாவதுக்கு சாத்தியங்கள் குறைவு. அடுத்ததுக்கே வாய்ப்பு அதிகம். எப்படியானாலும் அவன் கண்டுபிடிக்காம இருக்கமாட்டான். எனக்கு அவனை நல்லா தெரியும்" என்றான் டில்லி.

"சரி, வா அவனைக் கண்டுபிடிப்போம்" என்றான் குடுமி.

"அதுக்கு முன்னால ஒரு நிமி?ம்" என்ற டில்லிபாபு, தன் நி?ாரின் பொத்தான்களை நெகிழ்த்தி, உள்புறம் கையை விட்டு எதையோ எடுத்தான்.

"என்னடா பண்ற?"என்று அலுத்துக்கொண்டான் குடுமி.

"ஒரு நிமி?ம் இரு, இதோ வந்துடறேன்" என்று சட்டென்று பக்கத்தில் இருந்த ஒரு மரத்தடியின் மறைவுக்கு ஓடிய டில்லிபாபு, சரியாக ஒன்றரை நிமிடங்கள் கழித்துத் திரும்பினான்.

"என்னதுடா?" என்று மீண்டும் கேட்டான் குடுமி.

"ம்? ஒண்ணுமில்லை. நேத்து சாயங்காலத்திலிருந்து எங்க மீனவர் சங்கத்தலைவர் ஒரு பொருள் காணாம தேடிட்டிருந்திருப்பார். திரும்பிப் போனதும் அவருக்கு விளக்கம் சொல்லணும்" என்றவன், "இப்ப உனக்கு சொன்னா புரியாது. நீ வா, நாம பாலுவைத் தேடுவோம்" என்று நடக்க ஆரம்பித்தான்.

"இவன் எப்பவுமே இப்படித்தான்" என்று அலுத்துக்கொண்ட குடுமி அவன் பின்னால் நடக்க ஆரம்பித்தான்.

அவர்கள் கடற்கரை வெளியை அடைவதற்கும் பாலுவை குண்டர்கள் படகில் பார்த்துவிட்டு, கொத்தாக அவன் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு நிற்பதற்கும் சரியாக இருந்தது!

இருவரும் அதிர்ந்துபோனார்கள். ஐயோ, பாலு மாட்டிக்கொண்டுவிட்டான்! இந்த புதையல் குண்டர்கள் அவனை என்ன செய்வார்களோ. நிச்சயம் கடலுக்குள் இழுத்துப்போய் தள்ளித்தான் விடுவார்கள். நீச்சல் தெரியாத பாலுவால் ஒரு நிமிடம் கூடத் தண்ணீரில் தாக்குப்பிடிக்க முடியாது! அதுவும் குண்டன் வேறு. கிரிமினல் குண்டர்களெல்லாம் ஒல்லிப்பிச்சானாக இருக்கிறார்கள். இந்த நல்ல பாலு மட்டும் ஏந்தான் இப்படி நி? குண்டனாக இருக்கிறானோ?

"ம்?ும். யோசிக்கவே நேரமில்லைடா குடுமி. விபரீதம் ஆரம்பிச்சாச்சு. நாம படகில் ஏறிக் கிளம்பியாகணும். எப்படியாவது பாலுவை மீட்கணும்" என்றான் டில்லி.

அவர்கள் வந்திருந்த கட்டுமரம், அப்போது அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து வெகு தூரத்தில் இருந்தது. அதாவது, வட்ட வடிவமான தீவின் ஒரு முனையில் அவர்கள் அப்போது நின்றுகொண்டிருந்தார்கள். சரியாக நூறடி நடந்து வலப்புறம் கடற்கரை திரும்பும் இடத்துக்குப் போனால், பாலுவும் நண்பர்களும் வந்த படகு இருக்கும்.

"இதுவும் நல்லதுக்குத்தான். நாம கிளம்பறதை குண்டர்கள் பார்க்க முடியாது. நீ என் பின்னாலேயே ஓடிவா" என்று உத்தரவிட்டுவிட்டு டில்லிபாபு, மரங்களின் பின்னால் வேகவேகமாக ஓட ஆரம்பித்தான். அவனைப் பிந்தொடர்ந்து குடுமி நாதனும் தன் குடுமி காற்றில் பறக்க, ஓடத் தொடங்கினான்.

அவர்கள் தம் படகை அடைந்து, மணலில் அதனைத் தேய்த்துத் தள்ளித் திருப்பி கடலுக்குள் வேகமாகத் தள்ளிவிட்டுப் பாய்ந்து ஏறிக்கொண்டதும், கட்டுமரம் நீரில் ஒய்யாரமாக மிதக்க ஆரம்பித்தது. முதலில் இருந்த வேகமான ஆட்டம் சற்றே குறைந்து, ஒரு பேலன்? கிடைத்ததும் டில்லிபாபு வேக வேகமாகத் துடுப்பை வலிக்க ஆரம்பித்தான். ஓர் அரை வட்டமடித்துத்தான் பாலு போய்க்கொண்டிருக்கும் படகை அடைய முடியும்.

அதற்குள் அவர்கள் வெகுதூரம் போயிருப்பார்களா என்கிற சந்தேகமும் அவர்களுக்கு இருந்தது.

"சே, தப்பு பண்ணிட்டோமேடா. பாலுவுக்கு எதனா ஆனா, அவன் வீட்டுக்கு என்ன சொல்றதுன்னு கவலையா இருக்குடா" என்றான் குடுமி.

"உ?. இப்ப வேண்டாத பேச்சுகள் வேணாம். நல்லதை நினைத்து, நம்ம கடமையைச் செய்வோம். க?டமான சமயங்கள்ள கலங்காம இருக்கறதுதான் வீரம். எங்க மீனவர் சங்கத் தலைவர் அடிக்கடி சொல்லுவார் இதை" என்றான் டில்லிபாபு.

ஐந்து நிமிடங்களில் அவர்கள் பாலு போய்க்கொண்டிருந்த படகைப் பார்த்துவிட்டார்கள். 'அதோ, அதோ' என்று குடுமிநாதன் கத்தினான்.

"கவனமா கேள் குடுமி. நான் இப்ப வேகமா கட்டுமரத்தை செலுத்துவேன். எப்படியும் ஒரு இருபதடி தூரத்தில் அந்தப் படகுக்கு நெருக்கமா கொண்டு போயிடுவேன். கிட்ட போனதும் நீ பாலுவைப் பார்த்து குதிக்கச் சொல்லிக் கத்து. பாலு பயப்படாம தண்ணில குதிச்சிடணும். அவன் குதிச்சதும் நான் துடுப்பை உன்னிடம் குடுத்துட்டுத் தண்ணில குதிப்பேன். எப்படியாவது அவனை இழுத்துட்டு வந்து நம்ம கட்டுமரத்துல சேர்த்துடறது என் பொறுப்பு. அதுவரைக்கும் கட்டுமரம் கவிழாம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு" என்று உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு, கட்டுமரத்தை எப்படித் தள்ளவேண்டும் என்று சில எளிய வழிகளை குடுமிக்கு போதித்தான் டில்லிபாபு.

இரு புறங்களிலும் சமமான அளவு அழுத்தம் தரவேண்டும். தண்ணீருக்குள் அழுந்தும் துடுப்பை மிகவும் அழுத்தத் தேவையில்லை. ஓரளவு அழுந்தினால் போதும். ஆனால் ஒரு சீரான வேகத்தில் நீரைத் தள்ளவேண்டும். சரியாகத் தள்ளுகிறோமா என்கிற சந்தேகம் இருக்கத்தான் செய்யும். ஆனால் பயப்படவேண்டாம். கட்டுமரத்தின் திசை மாறினாலும் நிச்சயம் மூழ்காது.

இவ்வாறு சொல்லிவிட்டு, ஆவேசம் வந்தவன் மாதிரி பாலு போய்க்கொண்டிருந்த படகை நோக்கிக் கட்டுமரத்தைச் செலுத்தினான் டில்லி. எப்படியாவது பாலு தங்களைப் பார்த்துவிட்டால் பரவாயில்லை என்று கடவுளை வேண்டிக்கொண்டான். ஆனால் அந்த இருட்டில் ஒரு கட்டுமரம் வருவது கண்ணில் படுவதே சிரமம். படகுக்குள்ளாவது ஒரே ஒரு ?ரிக்கேன் விளக்கு இருப்பது தெரிந்தது. இருளில் ஒரு கட்டுமரம் எப்படிக் கண்ணில் படும்? இருப்பினும் குத்துமதிப்பாக அந்தப் படகைக் குறிவைத்து வேக வேகமாகச் செலுத்தியவன் அடுத்த பத்து நிமிடங்களில் கணிசமாக நெருங்கி வந்துவிட்டான்.

"குடுமி, இதான்! இதான் சமயம்! நீ குரல் கொடு!" என்று உத்தரவிட்டான் டில்லி.

"பாலு! நாங்க வந்துட்டோம். நீ குதி, குதிச்சிடு, குதிச்சிடு!" என்று தொண்டை கிழியக் கத்தத் தொடங்கினான் குடுமிநாதன்.

படகில் இருந்த பாலுவுக்கு நாலைந்து முறை குடுமியின் குரல் மங்கலாகவே கேட்டது. தன் பிரமையாக இருக்கும் என்றுதான் முதலில் நினைத்தான். குண்டர்கள் படகில் அமர்ந்து சீட்டாடத் தொடங்கியிருக்கவே அவன் கடலை நோட்டமிடுவதற்கு எந்தச் சங்கடமும் இருக்கவில்லை. தற்செயலாகத்தான் அவன் குடுமியும் டில்லியும் வந்துகொண்டிருந்த கட்டுமரத்தைப் பார்த்தான். ஒருகணம் அவனுக்கு எதுவுமே புரியவில்லை. கட்டுமரத்தில் டான்? ஆடியபடி நின்றுகொண்டு 'பாலு!பாலு!' என்று கத்திய குடுமிநாதனைப் பார்த்ததுமே அவனுக்கு வீரம் வந்துவிட்டது.

"குதி! குதி!'' என்ற அவனது குரல் இப்போது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. ஒரே ஒரு கணம் தனக்கு நீச்சல் தெரியாது என்பதை மட்டும் நினைத்துப் பார்த்தான். ஆனால், இது நீச்சல் கற்றுக்கொள்ளும் சமயம் அல்ல. கடலை எதிர்த்துப் போராட வேண்டிய சமயம். நண்பர்கள் நிச்சயம் ஏதாவது திட்டமுடன் தான் வந்திருப்பார்கள்.

சுற்றுமுற்றும் பார்த்தான். "என்னடா பாக்கற" என்றான் ஒரு குண்டன்.

அவ்வளவுதான். கபாலென்று படகின் விளிம்பைப் பிடித்து ஒரு காலைத் தூக்கிப்போட்டு மேலே ஏறினான். கண்ணிமைக்கும் நேரம் கூட இல்லை.

கடவுளே காப்பாத்து என்று மனத்துக்குள் கத்திக்கொண்டபடி தொபீரென்று நடுக்கடலில் குதித்தான் பாலு.

அதே சமயம் டில்லிபாபு, கட்டுமரத்தின் துடுப்பை பாலுவிடம் கொடுத்துவிட்டு, சட்டையைக் கழட்டிவிட்டுத் தயாராக இருந்தான். பாலு குதித்ததைப் பார்த்ததும் அவனும் கட்டுமரத்திலிருந்து கடலுக்குள் பாய்ந்தான்.

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |